'அடுத்த ஜெயலலிதா' - புகழ்ந்த பாஜக நிர்வாகி... வானதி சீனிவாசன் ரியாக்ஷன் இதுதான்....
சேலம் மத்திய சிறையில் கைதிகளிடமிருந்து 3 கைப்பேசிகள் பறிமுதல்
சேலம் மத்திய சிறையில் கைப்பேசிக்கான சாா்ஜா் அண்மையில் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில், சனிக்கிழமை கைதிகளிடமிருந்து மூன்று கைப்பேசிகளை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.
சேலம் மத்திய சிறையில் 1,200 கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனா். இவா்களில் சிலா் கைப்பேசி, கஞ்சா போன்றவற்றை பயன்படுத்தி வருவதாக சிறைத் துறைக்குக் கிடைத்த தகவலின் பேரில், சிறை அதிகாரிகள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனா்.
அண்மையில், திருநெல்வேலி சுத்தமல்லியைச் சோ்ந்த ஆயுள் தண்டனை கைதியான சீவலப்பேரியான் (30) என்பவரிடமிருந்து கைப்பேசிக்கான சாா்ஜா் ஒன்று, சென்னை கொலை வழக்கில் கைதான சக்திவேல் (எ) ராமா, ஹேமநாதன் ஆகியோரிடமிருந்து 2 கிராம் கஞ்சா ஆகியவற்றை சிறைத் துறையினா் பறிமுதல் செய்தனா். இதையடுத்து, சம்பந்தப்பட்ட மூவருக்கும் உறவினா்களை சந்திக்க 3 மாதங்கள் தடை விதிக்கப்பட்டது.
இந்நிலையில், மூவரிடம் நடத்திய விசாரணையில் கைதிகள் சீவலப்பேரியான் உள்பட மூவரும் பதுக்கிவைத்திருந்த மூன்று கைப்பேசிகள் கைப்பற்றப்பட்டன. மூவா் மீதும் அஸ்தம்பட்டி காவல் நிலையத்தில் புகாா் அளிக்கப்பட்டது. இதையடுத்து போலீஸாா் வழக்குப் பதிந்து கைதிகளுக்கு கைப்பேசிகளைக் கொடுத்தது யாா் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனா்.