செய்திகள் :

சௌதி அரேபியாவில் சுட்டுக் கொல்லப்பட்ட தமிழக மீனவர்கள்; அரசின் நடவடிக்கை- திருச்சி வந்தடைந்த உடல்கள்!

post image

சவுதி அரேபியாவில் மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டிருந்த மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழியை அடுத்துள்ள தொடுவாய் கிராமத்தைச் சேர்ந்த மாவீரன் மற்றும் கீழமூவர்கரையைச் சேர்ந்த சங்கர் ஆகிய இரண்டு மீனவர்கள், கடந்த ஆகஸ்ட் 10-ம் தேதி கடலில் மீன் பிடிக்கச் சென்றபோது, கடற்கொள்ளையர்கள் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில் மாவீரன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். சங்கர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு கடந்த ஆகஸ்ட் 20-ம் தேதி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். உயிரிழந்த இரண்டு மீனவர்களின் உடல்களை சொந்த ஊருக்குக் கொண்டுவர தமிழக அரசு நடவடிக்கை மேற்கொண்டது.

உயிரிழந்த மீனவர்கள்

அந்த வகையில், உயிரிழந்த இருவரின் உடல்கள் விமானம் மூலம் இன்று திருச்சி வந்தடைந்தன. திருச்சி விமான நிலையத்தில் உயிரிழந்த மீனவர்கள் உடலுக்கு மீன்வளத்துறை அமைச்சர் ஸ்ரீநாத் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். அதேபோல, அதிகாரிகளும் உடல்களுக்கு அஞ்சலி செலுத்தினர். பின்னர், அமைச்சர் ஸ்ரீநாத் உயிரிழந்தவர்கள் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தார். தொடர்ந்து, மீனவர்களின் உடல்கள் அமரர் ஊர்தி மூலம் அவர்களது சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்பட்டன.

சிவகங்கை: கண்மாய்க்குள் ஓட ஓட விரட்டிக் கொல்லப்பட்ட இருவர்; 5 பேர் அதிரடி கைது!

சிவகங்கை அருகே செப்டம்பர் 16 அன்று 2 இளைஞர்கள் கொடூரமாக வெட்டிக் கொலைசெய்யப்பட்ட சம்பவத்தில், தொடர்புடைய 5 நபர்களை போலீஸார் கைதுசெய்துள்ளனர்.கொலை பின்னணிசிவகங்கை மாவட்டம், காளையார்கோவில் அருகே உள்ள கு... மேலும் பார்க்க

பரிகார ரூமில் பள்ளி சீருடை, லேப்டாப் முழுக்க ஆபாச வீடியோக்கள்; சேலம் சாமியாரின் அதிர்ச்சிப் பின்னணி

சேலம் மாவட்டம் வாழப்பாடியைச் சேர்ந்த 50 வயதான விஜயராஜா ஃபிரிட்ஜ், மிக்ஸி, கிரைண்டர் பழுது பார்க்கும் வேலை செய்து வந்திருக்கிறான்.‌‌ மேலும், சனீஸ்வரா பரிகார நிலையம் என்கிற பெயரில் போலியாக மாந்திரீக மைய... மேலும் பார்க்க

வீட்டுக்குள் புகுந்த விஷப்பாம்பு; கடித்துக் குதறி எஜமானர் குடும்பத்தைக் காப்பாற்றிய வளர்ப்புப் பூனை

வீடுகளில் செல்லப்பிராணிகளாக நாய், பூனை, காதல் பறவைகள், புறாக்கள், அணில்கள், அலங்கார வண்ணமீன்கள் உள்ளிட்டவைகளை வளர்த்து வருகிறார்கள். இவற்றில் குறிப்பாக நாய்கள் வீட்டுக் காவலுக்கும், பூனைகள் எலிகளைக் க... மேலும் பார்க்க

கடலூர்: `எது பெரியது?’ - விநாயகர் சிலை கரைப்பதில் மோதல்; விலக்கிவிடச் சென்றவர் உயிரிழந்ததால் பதற்றம்

விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு நகரம் மற்றும் கிராமப் பகுதிகள் என, பொது இடங்களில் வைக்கப்படும் விநாயகர் சிலைகளின் எண்ணிக்கை ஆண்டுதோறும் அதிகரித்து வருகின்றன. அதற்கு நிகராக அந்தச் சிலைகளால் சட்டம்... மேலும் பார்க்க

கர்நாடகா: அரசு மருத்துவராக ஊதியம் பெற்றுக்கொண்டே PG படித்த பெண்; காங்கிரஸ் MLA உறவினருக்கு நோட்டீஸ்

கர்நாடக மாநிலம் பாகல்கோட்டையில் உள்ள வாம்பே காலனியில் இயங்கி வருகிறது கர்நாடக அரசின் 'நம்ம கிளினிக்' மருத்துவமனை. இந்தக் கிளினிக்கில் மருத்துவராக அங்கிதா யாராகல் என்ற பெண் பணியாற்றியிருக்கிறார். இவர் ... மேலும் பார்க்க

திருச்சி: முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தொடர்புடைய இடங்களில் சோதனை!

தி.மு.க முன்னாள் அமைச்சரும், திருச்சி தெற்கு மாவட்டச் செயலாளருமான அன்பில் மகேஸ் பொய்யாமொழி மீது, கடந்த ஆட்சியில் தனியார் பள்ளிகளுக்கு அங்கீகாரம் வழங்கியதில் பல கோடி ரூபாய் அளவில் முறைகேடு நடந்ததாக புக... மேலும் பார்க்க