`அண்ணாமலையைக் கைதுசெய்ய வேண்டும்'- தாக்கரே கட்சி போர்க்கொடி... காரணம் என்ன?
ஜனநாயகன்: "ஒட்டுமொத்த திரையுலகமும் அரசுடன் பேச்சுவார்த்தையை நடத்த வேண்டிய நேரம் இது"- கமல்ஹாசன்
‘ஜனநாயகன்’ திரைப்படத்துக்கு தணிக்கை சான்றிதழ் வழங்கும் விவகாரம் பெரும் சர்ச்சையை உருவாக்கியுள்ள நிலையில் பலரும் விஜய்க்கு ஆதரவாகவும், தணிக்கை வாரியத்திற்கு எதிராகவும் குரல் கொடுத்து வருகின்றனர்.
அந்தவகையில் நடிகரும், மக்கள் நீதி மய்யத்தின் தலைவருமான கமல்ஹாசன் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறார்.
அதில், " இந்திய அரசியலமைப்புச் சட்டம் கருத்து சுதந்திரத்தை உறுதி செய்துள்ளது. சினிமா என்பது ஒரு தனிநபரின் உழைப்பு மட்டுமல்ல, எழுத்தாளர்கள், தொழில்நுட்ப வல்லுநர்கள், கலைஞர்கள், திரையரங்கு உரிமையாளர்கள் மற்றும் நியாயமான மற்றும் சரியான நேரத்திலான செயல்முறையை நம்பி வாழும் சிறு வணிகங்கள் அடங்கிய ஒரு அமைப்பின் கூட்டு முயற்சியாகும்.
இதில் தெளிவின்மை ஏற்படும்போது தான் படைப்பாற்றல் தடைபடுகிறது. பொருளாதாரம் சீர்குலைகிறது. பொதுமக்களின் நம்பிக்கை பலவீனமடைகிறது.
அதனால், தற்போது தணிக்கை சான்றிதழுக்கான கால வரம்பு, வெளிப்படைத்தன்மை, நீக்கப்படும் காட்சிகளுக்கான நியாயமான காரணங்களை எழுத்துபூர்வமாக ஒப்படைப்பது உள்ளிட்ட கொள்கைகளை மறுபரிசீலனை செய்ய வேண்டிய தேவை எழுந்துள்ளது.
ஒட்டுமொத்த திரையுலகமும் இணைந்து அரசுடன் ஆக்கப்பூர்வமான, அர்த்தமுள்ள பேச்சுவார்த்தையை நடத்த வேண்டிய நேரம் இது. இத்தகைய சீர்திருத்தம் படைப்புச் சுதந்திரத்தைப் பாதுகாக்கும். அரசியலமைப்பு மதிப்புகளை நிலைநிறுத்தும்" என்று தெரிவித்திருக்கிறார்.



















