செய்திகள் :

'ஜல்லிக்கட்டு போட்டிகளுக்குத் தடை விதிக்க அரசு முயல்கிறதா?'-தவெக எம்எல்ஏ பேச்சுக்கு டிடிவி கண்டனம்

post image

தமிழர்களின் பாரம்பரியத்தோடும், பண்பாட்டோடும் பின்னிப் பிணைந்த வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டிகள் இளைஞர் சமுதாயத்தைச் சீரழிக்கின்றன என்று சோழவந்தான் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் கருப்பையா பேசியிருப்பது சர்ச்சையைக் கிளப்பி இருக்கிறது.

அரசியல் தலைவர்கள் பலரும் தவெக எம்எல்ஏ கருப்பையா பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். அந்தவகையில் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரனும் தனது கண்டனத்தைத் தெரிவித்திருக்கிறார்.

கருப்பையா
கருப்பையா

இதுதொடர்பாக அவர் வெளியிட்டிருக்கும் எக்ஸ் தளப்பதிவில், "சோழவந்தான் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் கருப்பையா அவர்களின் பேச்சு கடும் கண்டனத்திற்குரியது.

சட்டமன்ற உறுப்பினர்களைத் தக்கவைத்துக் கொள்ள மக்கள் வரிப் பணத்திலிருந்தே கார் வழங்கலாம் என்று முடிவெடுத்த தவெக, அதனை தனது இரு சட்டமன்ற உறுப்பினர்களை வைத்தே எப்படி அவையில் முன் மொழிந்ததோ அதே போல ஜல்லிக்கட்டு விளையாட்டிற்கு உலக அளவில் புகழ்பெற்ற அலங்காநல்லூரை உள்ளடக்கிய சோழவந்தான் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினரை வைத்தே இத்தகைய இழிவான பேச்சைச் சட்டமன்றத்தில் பதிவு செய்திருப்பதன் மூலம், வருங்காலத்தில் ஜல்லிக்கட்டு போட்டிகளுக்குத் தடை விதிக்க தவெக அரசு முயல்கிறதா? என்ற சந்தேகம் அனைவரின் மத்தியிலும் எழுந்திருக்கிறது.

அலங்காநல்லூரில் தொடங்கி சென்னை மெரினா வரை, தமிழகம் முழுவதும் மாணவர்கள், இளைஞர்கள் உள்ளிட்ட அனைத்துத் தரப்பு மக்களும் வெகுண்டெழுந்து, ஒன்றுதிரண்டு நடத்திய போராட்டத்தின் விளைவாகப் பெற்ற நமது பாரம்பரிய உரிமையை கொச்சைப்படுத்தும் வகையிலான தவெக சட்டமன்ற உறுப்பினரின் பேச்சு அவைக்குறிப்பில் இருந்து நீக்கப்படாமல் இருப்பதன் மூலம், இது முன்கூட்டியே திட்டமிட்ட செயலா? என்ற கேள்வி எழுவதைத் தவிர்க்க முடியவில்லை.

தமிழர்களின் வீரம் மற்றும் பண்பாட்டின் அடையாளமாகவும், விவசாய வாழ்வியலின் அங்கமாகவும் திகழும் ஜல்லிக்கட்டு குறித்த சோழவந்தான் தொகுதி சட்டமன்ற உறுப்பினரின் இழிவான பேச்சுதான் தவெகவின் நிலைப்பாடா? என்பதை அக்கட்சித் தலைமை வெளிப்படையாக அறிவிக்க வேண்டும்.

முதல்வர் விஜய்
முதல்வர் விஜய்

எனவே, வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டிகளையும், அதற்காகப் போராடிய மக்களின் உணர்வையும், பங்களிப்பையும் கொச்சைப்படுத்தும் வகையிலான தவெக சட்டமன்ற உறுப்பினரின் பேச்சை மாண்புமிகு சட்டப் பேரவைத் தலைவர் அவர்கள் அவைக்குறிப்பில் இருந்து நீக்குவதோடு, தனது பேச்சுக்கு வருத்தம் தெரிவித்து, அப்பேச்சைத் திரும்பப் பெற வேண்டும் என தவெகவின் சோழவந்தான் சட்டமன்ற உறுப்பினரை வலியுறுத்துகிறேன்" என்று கண்டனம் தெரிவித்திருக்கிறார் டிடிவி தினகரன்.

ஆர்.எஸ்.எஸ்ஸின் நண்பர், விஷ்ணு ரெட்டியின் உறவினர்.. கிரண்குமார் ரெட்டி தமிழ்நாட்டின் ஆளுநரா?

தமிழ்நாட்டின் ஆளுநராக ஆந்திர முன்னாள் முதல்வர் கிரண்குமார் ரெட்டி நியமிக்கபட வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தற்போது கேரள ஆளுநராக இருக்கும் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேக்கர், கடந்த மார்ச் முதல் த... மேலும் பார்க்க

65 பில்லியன் பேரல் எண்ணெய்... டிரம்பின் “உலகின் மிகப்பெரிய ஒப்பந்தம்” பின்னணி என்ன?

அமெரிக்கா, வெனிசுலாவின் 65 பில்லியன் பேரல் நிரூபிக்கப்பட்ட எண்ணெய் இருப்பில் பெரும்பான்மைக் கட்டுப்பாட்டைப் பெறும் புதிய ஒப்பந்தத்தை அறிவித்துள்ளது. அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இதை “உலக வரலாற்றில... மேலும் பார்க்க

திருவாரூர்: அரசு மருத்துவமனை வளாகத்தில் சுகாதார சீர்கேடு! - கண்டுகொள்வார்களா அதிகாரிகள்?

உடல்நலத்தைப் பாதுகாத்துக்கொள்ளவும், நோயிலிருந்து குணமடையவும் மருத்துவமனையை நாடி வரும் மக்களுக்கு, அந்த மருத்துவமனை வளாகமே சுகாதாரமான சூழலை வழங்க வேண்டியது அவசியம். ஆனால், திருவாரூர் அரசு மருத்துவக் கல... மேலும் பார்க்க

H-1B: அமெரிக்காவில் வேலை இழந்தால் கிடைக்கும் 60 நாள்கள் அவகாசம்... ட்ரம்ப் அரசின் முடிவால் பிரச்னை!

அமெரிக்காவில் வேலைவாய்ப்பு அடிப்படையிலான குடியேற்றமற்ற விசாக்களில் (Non-immigrant visas) பணிபுரிபவர்கள், வேலை இழந்த பிறகு சட்டப்பூர்வமாகத் தங்குவதற்காக வழங்கப்பட்டு வரும் அதிகபட்ச 60 நாள் அவகாசத்தை (G... மேலும் பார்க்க

'நானே மாடுபிடி வீரர்தான்...!' - சட்டமன்ற ஜல்லிக்கட்டு பேச்சு பற்றி எம்.எல்.ஏ கருப்பையா!

'இளைஞர்களை சீரழிக்கும் ஜல்லிக்கட்டு விளையாட்டு' என தவெக எம்.எல்.ஏ கருப்பையா சட்டமன்றத்தில் பேசியிருந்தார். சமூகவலைதளங்களில் அதிகமாக பகிரப்பட்டு வரும் அவரின் பேச்சுக்கு ஆதரவும் எதிர்ப்பும் எழுந்து வருக... மேலும் பார்க்க

பதவியேற்ற 25 நாளில் பதவியை ராஜினாமா செய்த அமைச்சர்! - எதிர்ப்புக்கு பணிந்த டி.கே.சிவகுமார்!

எதிர்க்கட்சிகளின் எதிர்ப்பு மட்டுமின்றி சொந்தக்கட்சியினரின் நெருக்கடியால் பொறுப்பேற்ற 25 நாட்களில் அமைச்சர் நாகேந்திரா, பதவியை ராஜினாமா செய்த சம்பவம், கர்நாடகாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. டி.கே.சி... மேலும் பார்க்க