செய்திகள் :

"ஜூனியர் ஆர்டிஸ்ட்களுக்கு ஒரு வாரத்திற்குள் ஊதியம்" - நடிகர் சங்க பொதுக்குழு கூட்டத்தில் தீர்மானம்

post image

தென்னிந்திய நடிகர் சங்கத்தின் 70-ஆம் ஆண்டு பொதுக்குழு கூட்டம் இன்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் நடிகர் சங்க உறுப்பினர்கள் பலரும் கலந்துகொண்டனர். மேலும், இந்தக் கூட்டத்தில் சில தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டிருக்கின்றன.

தென்னிந்திய நடிகர் சங்கம்

இதில் திரைப்படப் படப்பிடிப்பில் கலந்துகொள்ளும் துணை நடிகர்களின் எண்ணிக்கையில் 50 சதவீத வாய்ப்பு தென்னிந்திய நடிகர் சங்கத்தின் சார்பாகக் கலந்துகொள்ளும் கலைஞர்களுக்கு வழங்கப்பட வேண்டும் எனவும், நடிகர், நடிகைகள் குறித்து அவதூறான கருத்துகளைப் பரப்புவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருக்கிறது.

இது தொடர்பாக நடிகர் சங்கம் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், "தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்திற்கும், நமது சங்கத்திற்கும் இடையே போடப்பட்ட 26.07.2007 தேதியிட்ட உடன்பாட்டின் விதிகளின்படி நடைமுறைப்படுத்தப்படாமல் இருந்த அம்சமான, மேற்காண் இரு சங்கங்களைச் சார்ந்த பிரதிநிதிகள் மட்டுமே கொண்ட உயர்மட்டக் குழு அமைப்பது குறித்தும், உறுப்பினர்களின் நலனைப் பாதுகாக்கும் நோக்கத்துடன் உருவாக்கப்பட்ட புதிய உடன்படிக்கையில் மேலும் காலதாமதமின்றி கையொப்பமிட்டு நடைமுறைப்படுத்தவும் தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்தை அன்புடனும், பணிவுடனும் வலியுறுத்தும் தீர்மானத்திற்கு பேரவையின் ஒப்புதல் பெறப்பட்டுத் தீர்மானமாக நிறைவேற்றப்பட்டது.

நடிகர் சங்கம் 70-வது பொதுக்குழு கூட்டம்
நடிகர் சங்கம் 70-வது பொதுக்குழு கூட்டம்

தென்னிந்திய நடிகர் சங்கத்திற்கும் தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்திற்கும் இடையே முன்பே ஏற்பட்ட உடன்படிக்கையின் அடிப்படையில், திரைப்படப் படப்பிடிப்பில் கலந்துகொள்ளும் துணை நடிகர்களின் எண்ணிக்கையில் 50 சதவீத வாய்ப்பு தென்னிந்திய நடிகர் சங்கத்தின் சார்பாகக் கலந்துகொள்ளும் கலைஞர்களுக்கு வழங்கப்பட வேண்டும் என 26.07.2007 தேதியிட்ட ஒப்பந்தம் மூலமாக ஏற்றுக்கொள்ளப்பட்டு தொடர்ந்து கேயார், கலைப்புலி எஸ். தாணு, விஷால், முரளி ராமசாமி என தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்தின் கடந்த காலத் தலைவர்கள் அனைவராலும் நடைமுறைப்படுத்தப்பட்டு இருந்த நிலையில், கடந்த சில வருடங்களாக அது பின்பற்றப்படாமல் இருப்பதற்கும், அதைத் தடுக்கும் விதமாகச் செயல்படும் தென்னிந்திய திரைப்படத் தொழிலாளர்கள் சம்மேளனம் சார்ந்த பிரதிநிதிகளுக்கும் கடும் கண்டனம் தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பேரவையில் ஒப்புதல் பெறப்பட்டுத் தீர்மானமாக நிறைவேற்றப்பட்டது.

திரைப்படங்களில் பிரதான கதாபாத்திரங்களில் நடிக்கும் நமது சங்க உறுப்பினர்கள் இனி தயாரிப்பு நிறுவனங்களோடு ஒப்பந்தம் செய்துகொள்வதைக் கட்டாயமாக்கும் தீர்மானத்திற்கு பேரவையில் ஒப்புதல் பெறப்பட்டுத் தீர்மானமாக நிறைவேற்றப்பட்டது. தயாரிப்பு நிறுவனங்களோடு ஊதியம் சார்ந்த மற்றும் பிற புகார்களை நமது சங்கத்தில் வழங்கும்போது பிரதான கதாபாத்திரங்களில் நடிப்பவர்கள் உரிய ஒப்பந்த நகலையும் இணைத்து வழங்கினால் மட்டுமே (இது இனி முற்றிலும் புதிதாகப் பங்கெடுக்கும் படப்பிடிப்புகளுக்கு மட்டுமே பொருந்தும்) அந்தப் புகார் குறித்த நடவடிக்கை எடுக்கப்படும் என்ற தீர்மானத்திற்கு பேரவையில் ஒப்புதல் பெறப்பட்டுத் தீர்மானமாக நிறைவேற்றப்பட்டது. திரைப்படப் படப்பிடிப்புகளில் காட்சிப்படுத்தும் பின்னணி மற்றும் கூட்டத்தில் பொதுமக்களாகப் பணியாற்றும் தென்னிந்திய நடிகர் சங்க உறுப்பினர்களுக்கு, படப்பிடிப்பு நடந்த ஒரு வார காலத்திற்குள் திரைப்படத் தயாரிப்பு நிறுவனம் உரிய ஊதியம் வழங்க வேண்டும்.

நடிகர் சங்கம் 70-வது பொதுக்குழு கூட்டம்
நடிகர் சங்கம் 70-வது பொதுக்குழு கூட்டம்

அவ்வாறு ஊதியம் வழங்கத் தவறினால், ஊதியம் வழங்கப்படும் வரையில் தொடர்புடைய தயாரிப்பு நிறுவனத்துடன் நமது சங்க உறுப்பினர்கள் வேலை ஒத்துழைப்பு அளிக்காமல் தவிர்க்கும் தீர்மானத்திற்கு பேரவையில் ஒப்புதல் பெறப்பட்டுத் தீர்மானமாக நிறைவேற்றப்பட்டது.

சமூக வலைத்தள ஊடகங்களில் பார்வையாளர்களைக் கவர்ந்திழுக்கும் நோக்கத்துடன் பிரபலமான நடிகர் / நடிகையர்களைக் குறித்து அவதூறாக, ஆபாசமாக, சர்ச்சைக்குரிய வகையில் விமர்சனங்களை முன்வைத்தும், முகாந்திரமற்ற தங்களது கற்பனைக் கருத்துகளை முன்வைத்து பரப்புபவர்கள், நமது சங்க உறுப்பினர்களாக இருந்தாலும் கூட, அவர்கள் மீது நமது சங்கம் மூலமாக காவல்துறையில் புகார் அளித்து முதல் தகவல் அறிக்கை பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இது போன்ற செயல்களில் ஈடுபடுபவர்களுக்குச் சட்டப்பூர்வமாகக் கடுமையான தண்டனை பெற்றுத் தருவதற்கு உரிய நடவடிக்கைகள் எடுக்க சங்க நிர்வாகத்திற்கு அதிகாரம் வழங்கும் பேரவையின் ஒப்புதல் பெறப்பட்டுத் தீர்மானமாக நிறைவேற்றப்பட்டது." எனக் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

Suriya: "ஒரு முட்டாள் பதிவு போட்டான் என்பதற்காக..." - ரசிகர்கள் கூட்டத்தில் சூர்யா

சூர்யாவுக்கு 'கருப்பு', 'விஸ்வநாத் & சன்ஸ்' என இரண்டு படங்கள் இந்த ஆண்டு வெற்றியைப் பெற்றுத் தந்திருக்கின்றன. அத்தோடு தீபாவளி வெளியீடாக மலையாள இயக்குநர் ஜீத்து ஜோசப் இயக்கத்தில் அவர் நடித்திருக்கு... மேலும் பார்க்க

Dorothy: "இனி படம் எடுக்க வேண்டாம் என்றிருந்தேன்; ஆனால், 'டோரதி' படம்..." - இயக்குநர் மிஷ்கின்

இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் வெளியான 'டோரதி' திரைப்படம் நல்ல விமர்சனங்களைப் பெற்று வருகிறது. திரைத்துறையின் முக்கிய இயக்குநர்கள் பலரும் இப்படத்தைப் பார்த்துப் பாராட்டிப் பேசி வருகிறார்க... மேலும் பார்க்க

"அரசு OTT தளம் குறித்து வெகு விரைவில் நல்ல செய்தி" - என்ன சொல்கிறார் அமைச்சர் ராஜ்மோகன்?

தமிழ்த் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர் சங்கத்தின் 6 ஆவது ஆண்டு பொதுக்குழுக் கூட்டத்தில் வெற்றி பெற்ற திரைப்படங்களின் தயாரிப்பாளர்களுக்கு அமைச்சர் ராஜ்மோகன் விருதுகளையும் பதக்கங்களையும் வழங்கினார்.அமைச்ச... மேலும் பார்க்க

"என்னை விட நல்ல கதைகள் வைத்திருக்கும் அவர்களுக்கு ஏதாவது செய்யுங்கள்" - 'மொத ராத்திரி' இயக்குநர்

அறி​முக இயக்​குநர் ராஜா கருப்​ப​சாமி இயக்​கத்​தில் ரிஷி​காந்த், அனிஷ்மா அனில்​கு​மார், சேத்​தன் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியாகியிருந்த படம் ‘மொத ராத்​திரி’.மைத்ரி மூவி மேக்​கர்ஸ் தயாரித்திருந்த இப்​ப... மேலும் பார்க்க

'நான் தமிழ் ஈழப்பெண்'- நடிகை மைத்ரேயி ராமகிருஷ்ணன் பேச்சுக்கு எழுந்த எதிர்ப்பு! பின்னணி என்ன?

நெட்பிளிக்ஸில் 2020 ஆம் ஆண்டு வெளியான 'Never Have I Ever' தொடர் மூலம் புகழ்பெற்றவர் மைத்ரேயி ராமகிருஷ்ணன். கன்னடாவில் பிறந்து வளர்ந்த மைத்ரேயி ராமகிருஷ்ணன். தமிழ் பின்னணியைக் கொண்டவர். இலங்கை இவரது பூ... மேலும் பார்க்க

Dorothy: ``கார்த்திக் சுப்புராஜ் மீது பொறாமையாக இருக்கிறது" - இயக்குநர் மணிரத்னம்

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சனந்த், ரிஷிகாந்த், கீர்த்தி சுரேஷ் உள்ளிட்ட பலர் நடிப்பில் நேற்று (செப்டம்பர் 25-ம் தேதி) வெளியான படம் டோரதி. இந்தப் படத்துக்கு கலவையான விமர்சனங்கள் குவிந்து வருகின்... மேலும் பார்க்க