செய்திகள் :

ஜெம் வீரமணி வழக்கு: மேலும் ஒரு சிறுமி புகார்; வீரமணியின் மேலாளர் கைது!

post image

சென்னை பெருநகர காவல்துறையின் விபச்சார தடுப்பு பிரிவில் Pendrive -ஒன்றை கொடுத்த என்.ஜி.ஓ அமைப்பு ஒன்று, ஜெம் வீரமணி குறித்து பரபரப்பு புகாரைக் கொடுத்தது. அதன்பேரில் போக்சோ உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்த போலீஸார், சிறுமிகளிடம் பாலியல் குற்றங்களில் ஈடுபட்டதாகக் கூறப்படும் பிரபல கிரானைட் தொழிலதிபர் வீரமணி, அவருக்கு உதவிய சாந்தி, சாந்தியின் கணவர் மகேந்திரசிம்ஹன் ஆகியோரை 29.08.2026-ம் தேதி கைது செய்தனர். மேலும் இது தொடர்பான மற்றொரு வீடியோவை வைத்திருந்தும் காவல்துறைக்கு தகவல் தெரிவிக்காத வீரமணியிடம் வேலைப் பார்த்த முன்னாள் ஊழியர் கணேசன் என்பவரை 22.09.2026-ம் தேதி போலீஸார் கைது செய்தனர். அதைத் தொடர்ந்து சிறுமிகளை அழைத்து வந்த குற்றச்சாட்டில் வீரமணியின் டிரைவர்கள் லாசர், பார்த்திபன், பாபு ஆகியோர் 05.10.2026-ம் தேதி கைது செய்யப்பட்டனர்.

சாந்தி

ஜெம் வீரமணி வழக்கை சரியாக விசாரிக்காத குற்றச்சாட்டு எழுந்தது. இதில் சில ஐ.பி.எஸ் அதிகாரிகள், போலீஸார் மீது குற்றம் சுமத்தப்பட்டது. அதனால், டி.ஜி.பி மகேஷ்குமார் அகர்வால், ஜெம் வீரமணி வழக்கை விசாரிக்க சிறப்பு புலனாய்வு குழு ஒன்றை அமைத்து உத்தரவிட்டார். இந்த சிறப்பு புலனாய்வு குழு வீரமணி வழக்கை விசாரித்து வருகிறது. இந்தக் குழுவிடம் ஜெம் வீரமணி மீது அடுத்தடுத்து புகார்கள் வந்த வண்ணம் உள்ளன. இதுவரை ஜெம் வீரமணி மீது ஆறு வழக்குகள் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடந்து வருகிறது. இந்த நிலையில் பாதிக்கப்பட்ட சிறுமி ஒருவர் சிறப்பு புலனாய்வு குழுவிடம் புகார் ஒன்றைக் கொடுத்தார். அதன் அடிப்படையில் 18.10.2026-ம் தேதி ஜெம் வீரமணி மீது ஏழாவதாக மேலும் ஒரு வழக்கை சிறப்பு புலனாய்வு குழுவினர் பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர். விசாரணையில், இந்தச் சம்பவம் வீரமணியின் பெண் தோழியான சாந்தி வீட்டில் நடந்திருப்பது தெரியவந்துள்ளது. அதனால் ஜெம் வீரமணியை போலீஸார் இரண்டு நாள்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரித்தனர். விசாரணையில் கிடைத்த தகவலின் அடிப்படையில் ஜெம் வீரமணியின், லாயட்ஸ் ரோடு வீடு, கானத்தூரில் உள்ள அவரது பண்ணை வீடு மற்றும் அவரது Stone அலுவலகம் ஆகியவற்றில் தீவிர சோதனை நடத்தப்பட்டு சில முக்கிய ஆதாரங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. இந்த நிலையில்தான் வீரமணிக்கு உதவிய ஜெம் கிரானைட் நிறுவனத்தின் மேனஜர் சக்திவேலை போலீஸார் 18.10.2026-ம் தேதி கைது செய்தனர். சக்திவேல் என்பவர் மூலம் வீரமணி சட்ட நடவடிக்கைகளில் இருந்து தப்பிக்க பணப்பரிமாற்றம் நடந்திருப்பது தெரியவந்திருக்கிறது. அதுதொடர்பாக அவரிடம் போலீஸார் துருவி துருவி விசாரித்து வருகிறார்கள். இந்த வழக்கை பொறுத்தவரை இதுவரை பதினொரு சிறுமிகள், வீரமணி மீது புகாரளித்திருக்கிறார்கள். அதனால் சிறப்பு புலனாய்வு குழுவினர் வீரமணி வழக்கை தீவிரமாக விசாரித்து வருகிறார்கள்.

பெருந்துறை: நிர்வாணமாக காட்டுக்குள் கிடந்த செவிலியரின் உடல் - போலீஸ் விசாரணை!

ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்துார், பூங்குளம் பகுதியைச் சேர்ந்தவர் ரஞ்சித் இவரின் மனைவி உத்திரா. திருப்பூர் மாவட்டம் பல்லகவுண்டன்பாளையத்தில் வாடகை வீட்டில் வாழ்ந்து வந்துள்ளனர். ரஞ்சித் குமார் கட்டட ... மேலும் பார்க்க

ஏ.டி.எம் கார்டு, ஓ.டி.பி நம்பரைப் பயன்படுத்தி மோசடி - ரூ.10.96 லட்சத்தை இழந்த கரூர் முதியவர்!

கரூர் மாவட்டம், குளித்தலை, காவேரி நகரை சேர்ந்தவர் ராமசாமி (வயது: 71). இவருடைய மொபைல் எண்ணை தொடர்பு கொண்ட மர்ம நபர்கள், இந்தியன் வங்கியில் இருந்து பேசுவதாக கூறி, ``உங்கள் ஏ.டி.எம் கார்டு லாக் ஆகி விட்ட... மேலும் பார்க்க

அஸ்ஸாம் நபரின் ஆவணம் மூலம் போலி வங்கிக் கணக்கு; ரூ.2.28 லட்சம் லஞ்சம் பெற்ற இன்ஸ்பெக்டர் மீது வழக்கு

கேரள மாநிலம் கோட்டயம் மாவட்டம், வைக்கம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் இயங்கும் டிப்பர், டாரஸ் லாரிகள், சட்டவிரோத மண் கடத்தல் கும்பல்கள் மற்றும் பல்வேறு வழக்குகளின் குற்றவாளிகளை தப்பிக்க வைக்க... மேலும் பார்க்க

"ஒன்றுமில்லாதவரை அமைச்சராக்கினேன்"- ரூ.210 கோடிக்கு ஊழல் செய்ததாக BJP பெண் அமைச்சர்மீது கணவர் புகார்

உத்தரகாண்ட் மாநிலத்தைச் சேர்ந்த அமைச்சர் ரேகா ஆர்யா, தனது கணவர் பப்பு கிர்தாரி என்று அழைக்கப்படும் கிர்தாரி லால் சாஹு தன்னை அடித்து கொடுமைப்படுத்தியதாகவும், கொலை செய்ய முயன்றதாகவும், தனது மைனர் குழந்த... மேலும் பார்க்க

நாகப்பட்டினம்: ரூ.270 கோடி மதிப்பிலான 135 கிலோ மெத் கடத்தல்; சிக்கிய தவெக நிர்வாகி; 4 பேர் கைது

நாடப்பட்டினம் சிந்தாமணி மெயின் ரோடு பகுதியைச் சேர்ந்தவர் பூபாலன்(42) தவெக-வில் மாவட்ட செயற்குழு உறுப்பினர். இவரது மனைவி பிரேமியா இலங்கையைச் சேர்ந்தவர். வழக்கறிஞரான பூபாலன் தவெகவின் நாகை மாவட்டச் செயலா... மேலும் பார்க்க

ஈரோடு: பள்ளி மாணவர்களைக் குறிவைத்து போதை மாத்திரை விற்பனையா? 420 மாத்திரைகள் பறிமுதல்; 6 பேர் கைது

ஈரோடு மாநகர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் போதை மாத்திரை புழக்கம் அதிகரித்து வரும் நிலையில், குறிப்பிட்ட சில பகுதிகளில் விற்பனை நடைபெறுவதாக மக்கள் தகவல் தெரிவித்துள்ளனர். இதன் அடிப்படையில் ஈர... மேலும் பார்க்க