செய்திகள் :

ஜெயிலில் ஸ்கெட்ச்; இன்ஸ்டாகிராமில் பிளான்! புதுக்கோட்டையில் சிக்கிய 'அமாவாசை' திருட்டுக் கும்பல்!

post image

கோழி திருடன், ஆடு திருடனுடன் சிறையில் கூட்டணி சேர்ந்து இன்ஸ்டாகிராமில் பிளான் போட்டு, பகலில் பைக்குகளையும், அமாவாசை இரவுகளில் கோயில் உண்டியல்களையுன் கொள்ளையடித்து வந்த 3 பேர் கொண்ட கும்பலை, கடியையும் பொருட்படுத்தாமல் புதுக்கோட்டை மாவட்ட தனிப்படை போலீஸார் அதிரடியாகக் கைது செய்தனர்.

ஒரே இரவில் 3 உண்டியல்கள் காலி!

புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் அருகே உள்ள மேற்பனைக்காடு கிராமத்தில், கடந்த அமாவாசை இரவில் மழைமாரியம்மன் கோயில், வீரமாகாளியம்மன் கோயில் ஆகிய 2 கோயில்களுக்குள் புகுந்த மர்ம கும்பல், ஒரே இரவில் 3 உண்டியல்களை உடைத்து பணத்தைச் சுருட்டிக் கொண்டு தப்பியது. இதே கும்பல் கடந்த மாதம் கொடிக்கரம்பை பகுதியில் திருட முயன்றபோது, ஊர் மக்கள் திரண்டதால் பைக் மற்றும் செல்போனை போட்டுவிட்டு தப்பிச் சென்று, வழியில் நின்ற வேறொரு பைக்கை திருடிச் சென்றது. ஆலங்குடி, ஆவுடையார்கோயில் என வரிசையாக உண்டியல்கள் உடைந்ததால் பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர்.

சில்லரை மூட்டையுடன் சிக்கிய திருடன்

இதையடுத்து ஆலங்குடி டிஎஸ்பி மனோகரன் தலைமையில் அமைக்கப்பட்ட தனிப்படை போலீசார், அமாவாசை நாளில் நாள் குறித்துத் தூக்கும் கும்பல் குறித்து தீவிர விசாரணை நடத்தினர். சம்பவ இடத்தில் கிடைத்த கைரேகையை வைத்துப் பார்த்தபோது, அறந்தாங்கி அருகே வேதியன்குடியைச் சேர்ந்த காளிதாஸ் என்பவன் மாட்டியுள்ளான். உடனே விரைந்த போலீஸார், திருடிய சில்லரை காசு மூட்டையை தலைக்கு வச்சு சொகுசாகத் தூங்கிக் கொண்டிருந்த காளிதாஸை தூக்கினர்.

சிறையில் போட்ட ஸ்கெட்ச் – இன்ஸ்டாவில் பேச்சு!

காளிதாஸிடம் நடத்திய விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.

"ஜெயிலில் இருந்தபோது திருநாளூர் கோழி திருடன் விஜய், தஞ்சாவூர் ஆடு திருடன் நாகராஜ் ஆகியோருடன் பழக்கம் ஏற்பட்டது. வெளியே வந்ததும் இன்ஸ்டாகிராமில் குரூப் போட்டு பேசி பிளான் பண்ணுவோம். பகலில் ஊர் ஊராகப் போய் நோட்டம் விட்டு பைக்குகளைத் தூக்குவோம். இரவில் கோயில் உண்டியலை உடைத்து காசைப் பிரித்து ஜாலியாக சரக்கடிப்போம்" என வாக்குமூலம் கொடுத்தான்.

‘பிடிக்க வந்தா கடிப்பான் சார்!’

மேலும், "நாகராஜைப் பிடிக்கப் போகும்போது மட்டும் ரொம்ப உஷாரா இருங்க சார், யார் வந்தாலும் கடித்துவிட்டு தப்பி ஓடிடுவான்" என காளிதாஸ் போட்டுக் கொடுத்துள்ளான். போலீஸ் டீம் நாகராஜை வளைத்துப் பிடித்தபோது, அவன் எதிர்பாராதவிதமாக 2 போலீசாரைக் கொடூரமாகக் கடித்துக் குதறினான்.

ஆட்களைக் கடித்துவிட்டு தப்ப முயன்ற நாகராஜை, கடியையும் பொருட்படுத்தாமல் ரத்தக் காயத்தோடு போலீஸார் மடக்கிப் பிடித்தனர். தொடர்ந்து கூட்டாளி விஜய்யையும் கைது செய்தனர்.

போலீசுக்கு பாராட்டு

கைதான 3 பேரையும் கீரமங்கலம் காவல் ஆய்வாளர் சத்தியதேவி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தார். அமாவாசை திருடர்களைக் கடியையும் பொருட்படுத்தாமல் பிடித்த தனிப்படை போலீசாருக்கு கிராம மக்கள் பாராட்டு தெரிவித்தனர். இந்த கும்பலைக் காவலில் எடுத்து, அவர்கள் திருடிய பைக்குகளை மீட்க போலீஸார் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு வழக்கு: குற்றஞ்சாட்டும் தவெக; சவால்விடும் திமுக; காத்திருக்கும் நீதி

முந்தைய அ.தி.மு.க ஆட்சியில் 2018, மே 22-ம் தேதி தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான மக்கள் போராட்டத்தில் ஏற்பட்ட கலவரத்தில், 2 பெண்கள் உட்பட 13 பேர் போலீஸாரால் கொல்லப்பட்டனர். 100-க்கும் மேற்பட்டோர... மேலும் பார்க்க

கேரளம்: ஒரு வயது குழந்தையின் கழுத்தை அறுத்து கொன்ற தாய்; திருமண நாளில் இளம்பெண் செய்த கொடூரம்

கேரள மாநிலம் ​திருவனந்தபுரம் மாவட்டம் விளவூர்க்கல் பொற்றா பகுதியைச் சேர்ந்தவர் அபிஜித். மருத்துவப் பிரதிநிதியாகப் பணியாற்றி வருகிறார். இவரது மனைவி கிறிஸ்டி (29). இவர்களுக்கு நான்கு ஆண்டுகளுக்கு முன்பு... மேலும் பார்க்க

காட்பாடி: தேவாலய கட்டுமானப் பணி விபத்தில் 3 பேர் பலி; ஒப்பந்ததாரர் மீது வழக்குப் பதிவு!

வேலூர் மாவட்டம், காட்பாடி அடுத்த ஆந்திர மாநில எல்லையில் மந்தி கிருஷ்ணாபுரம் கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில், புதிதாக சி.எஸ்.ஐ தேவாலயம் கட்டும் பணிகள் நடைபெற்று வந்தன. இந்த நிலையில், நேற்று மாலை கான்க... மேலும் பார்க்க

ஈரோடு: 3.50 ஏக்கர் நிலத்தை ரிஜிஸ்டர் செய்ய ரூ.7 லட்சம் லஞ்சம்; சப்-ரிஜிஸ்டர், பத்திர எழுத்தர் கைது

ஈரோடு மாவட்டம் கவுந்தப்பாடி ராயர் பாளையத்தைச் சேர்ந்தவர் விவசாயி கார்த்திக். இவருக்குச் சொந்தமான மூன்றரை ஏக்கர் நிலத்தைப் பதிவு செய்வதற்காக கவுந்தப்பாடி சப்-ரிஜிஸ்டர் சங்கரை அணுகியுள்ளார். 3.50 ஏக்கர்... மேலும் பார்க்க

சென்னை: 'ஆபாச செய்கை, போட்டோ மார்பிங்' - GST பெண் ஆபீஸருக்கு செக்ஸ் டார்ச்சர்; சக அதிகாரி கைது

சென்னை முகப்பேரில் ஜி.எஸ்.டி அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இந்த அலுவலகத்தில் அதிகாரியாக ஆந்திராவைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் பணியாற்றி வருகிறார். இவருடன் மேற்கு வங்காளத்தைச் சேர்ந்த சவுரவ் என்பவரும் அத... மேலும் பார்க்க

பிரதீப் ராஜ் கொலை: 'கந்துவட்டி பிரச்னை; விநாயகர் சிலை' - சென்னை துணை நடிகர் கொலையின் பின்னணி என்ன?

சென்னை திருவொற்றியூர் மேற்கு மாடவீதியைச் சேர்ந்தவர் ராணி. இவரின் மகன் பிரதீப்ராஜ் (34). இவர் துணை நடிகராகவும் சென்னை துறைமுகத்தில் ஒப்பந்த அடிப்படையிலும் வேலைப்பார்த்து வந்தார். இந்தநிலையில் சில தினங்... மேலும் பார்க்க