Zozo: `இந்தியாவில் பிறந்து, உலக மேடையை நோக்கி' - 11 வயதேயான இளம் ஸ்டார்ட்அப் நிற...
டாக்டரைக் கரம்பிடித்தார் சரண்யா - பொன்வண்ணன் தம்பதியின் இளைய மகள்; சென்னையில் இன்று வரவேற்பு!
சரண்யா - பொன்வண்ணன் தம்பதியின் இளைய மகள் சாந்தினியின் திருமண வரவேற்பு சென்னையில் இன்று மாலை நடக்கிறது.
நடிகர் பொன்வண்ணன் நடிகை சரண்யா தம்பதிக்கு பிரிய தர்ஷினி, சாந்தினி என இரண்டு மகள்கள். இருவருமே டாக்டர்கள்.
மூத்த மகள் பிரியதர்ஷினிக்கு 2021 ஆம் ஆண்டு விக்னேஷ் என்பவருடன் திருமணம் நடந்தது நினைவிருக்கலாம்.
மகப்பேறு மருத்துவராக இருக்கிற இரண்டாவது மகள் சாந்தினிக்கு நீலகிரியைச் சேர்ந்த டான் பிலிப் பாபு என்பவருடன் பிப்ரவரி இரண்டாம் தேதி கோபிசெட்டிபாளையத்திலுள்ள ஒரு சர்ச்சில் வைத்து திருமணம் நடைபெற்றது.

முன்னதாக டானின் சொந்த ஊரான குன்னூரில் கடந்த டிசம்பர் மாதம் இருவருக்கும் நிச்சயதார்த்தம் நடைபெற்றது. அதில் இரண்டு குடும்பங்களுக்கும் நெருக்கமான உறவினர்கள், நண்பர்கள் கலந்து கொண்டனர்.
சினிமா துறையினர் மற்றும் சென்னை நண்பர்களுக்காக சென்னையில் இன்று வரவேற்பு நடக்கிறது. கடற்கரை சாலையில் உள்ள திருமண மண்டபம் ஒன்றில் இன்று நடக்கும் வரவேற்பில் நடிகர், நடிகைகள் உள்ளிட்ட பிரபலங்கள் பலரும் திரளாகக் கலந்து கொள்வார்களென எதிர்பார்க்கப்படுகிறது.
















