"திமுக - அதிமுக கூட்டணிக்கு எந்தக் காலத்திலும் வாய்ப்பில்லை" - திமுக எம்.பி கனிம...
'டார்கெட் வட இந்தியா; பிரண்ட்லி பாமக; கலக்கத்தில் அமைச்சர்' - முதல்வரின் சுதந்திர தின விழா ஹைலைட்ஸ்!
ஜார்ஜ் கோட்டையில் முதல் முறையாகக் கொடியேற்றியிருக்கிறார் முதல்வர் விஜய். கொடியேற்றிய கையோடு அவர் ஆற்றிய உரையிலும் அந்த விழாவிலும் அத்தனை பொலிட்டிக்கல் மெசேஜ்கள் இருந்தன. அவற்றின் ஹைலைட்ஸ் இங்கே.

தன்னுடைய உரையின் போது, ''மக்களுக்குப் பயனளிக்கும் கடந்த கால திட்டங்களை அப்படியே தொடர்கிறோம். உதாரணமாக ஜெயலலிதா மேடம் கொண்டு வந்த அம்மா உணவகம் திட்டத்தை மேம்படுத்தியிருக்கிறோம். அதேமாதிரி, காலை உணவுத்திட்டத்தையும் விரிவுப்படுத்தியிருக்கிறோம்'' எனப் பேசியிருந்தார்.
அம்மா உணவகத்தைப் பற்றி பேசுகையில் ஜெயலலிதாவின் பெயரைக் குறிப்பிட்ட முதல்வர், காலை உணவுத்திட்டத்தைப் பற்றி பேசுகையில் ஸ்டாலினின் பெயரை உள்ளர்த்தத்தோடு தவிர்த்திருந்தார். இது திட்டமிடப்பட்ட தவிர்ப்புதான் எனத் தகவல் சொல்கின்றனர் முதல்வர் வட்டத்துக்கு நெருக்கமானவர்கள்.
சுதந்திர தின உரையாகக் கிட்டத்தட்ட 12 நிமிடங்களுக்குப் பேசியிருந்த முதல்வர் பேசி முடித்துவிட்டு, அவர் பேச்சின் சாராம்சத்தைச் சுருக்கமாக ஆங்கிலத்தில் ஒரு ரீல்ஸ் அளவுக்கு 40-50 செகண்ட்டுகளுக்கு மீண்டும் பேசியிருந்தார்.
'தமிழக மக்கள் ஜாதி மதத்தை உடைத்திருக்கிறார்கள். லஞ்சம் ஊழல் இல்லாத அரசைக் கொடுப்பதுதான் எங்களின் இலக்கு. அதில் உறுதியாக இருக்கிறோம்' என ஆங்கிலத்தில் பேசினார்.

இதுவும் எதேச்சையாகப் பேசப்பட்டதில்லை என்கின்றனர். தமிழகம் தவிர்த்த தென் மாநிலங்கள் மற்றும் வட இந்தியா முழுக்க முதல்வரின் பேச்சு இந்தியிலும் ஆங்கிலத்திலும் AI டப் செய்யப்பட்டு பரப்பப்படுகிறது.
அதன் மூலம் தமிழகம் தவிர்த்து ஏனைய மாநிலங்களிலும் தவெகவுக்கென ஆதரவு பெருகி வருவதாக முதல்வரின் வியூக வகுப்புக்குழு நம்புகிறதாம். அதனால்தான் தமிழகம் தவிர்த்த ஏனைய மாநில மக்களுடன் தொடர்பை ஏற்படுத்த தன்னுடைய க்ளீன் கவர்மெண்ட் மோட்டோவை முதல்வர் ஆங்கிலத்தில் பேசினாராம்.
விழாவில் தகைசால் தமிழர் விருதை காங்கிரஸ் கட்சியின் முன்னாள் மாநிலத் தலைவர் மற்றும் சௌமியா அன்புமணியின் தந்தையுமான கிருஷ்ணசாமிக்கு வழங்கியிருந்தார் முதல்வர் விஜய்.
முதலில் இந்த விருதுக்கு கோட்டையில் டிக் அடிக்கப்பட்ட பெயர் ராமதாஸ்தான் என்கின்றனர் அதிகாரிகள் வட்டாரத்தினர். 'அரசியலிலிருந்து ஒதுங்குகிறேன்' எனச் சமீபத்தில் அறிவித்த ராமதாஸ் தவெக அரசின் அரசியல் அபிலாஷைகளை உணர்ந்து கொண்டு பிடிகொடுக்கவில்லையாம். அதனால்தான் அதே குடும்பத்தில் கிருஷ்ணசாமிக்கு விருது கொடுத்து பாமகவைக் குளிர்வித்திருக்கிறார் முதல்வர் விஜய்.
விசிக முரண்டு பிடிக்க ஆரம்பித்தால் பேக் அப் ஆப்சனாக பாமகவைத் தங்கள் பக்கம் வைத்துக் கொள்ளத்தான் இந்தத் காய் நகர்த்தல்களாம்.

முதல்வர் உரையின்போது மூன்று மாத கால ஆட்சியின் சாதனைகள் எனச் சிலவற்றை குறிப்பிட்டிருந்தார். வேளாண்துறை, நீர்வளம், சுகாதாரம், கனிமம், போக்குவரத்து, மதுவிலக்கு, பத்திரப்பதிவு, வருவாய்த்துறை எனப் பல துறைகளின் திட்டங்களையும் குறிப்பிட்ட முதல்வர் விஜய், இரண்டு நாள்களுக்கு முன்பு நடந்த முதலீட்டாளர்கள் மாநாட்டையும் 100 நாள்களில் கொண்டு வரப்பட்டதாகச் சொல்லும் 1 லட்சம் கோடி முதலீட்டையும் குறிப்பிடவே இல்லை.
முதல்வர் தன்னுடைய துறையைத் தவிர்த்தது எதார்த்தமாக நடந்ததா இல்லை முதல்வருக்கு நெருக்கமான தலைகள் உள்ளடி செய்கின்றனரா எனத் தெரியாமல் கலக்கத்தில் இருக்கிறார் அந்தப் பெண் அமைச்சர்.













