செய்திகள் :

டெல்லி பெண்களுக்கு ரூ.2500 : 3 குழந்தைக்குள் இருந்தால் தகுதி; பணம் கையில் கிடைக்காது!' - முழு விவரம்

post image

டெல்லி சட்டமன்ற தேர்தலுக்கு முன்பு பா.ஜ.க அறிவித்த தேர்தல் அறிக்கையில் பெண்களுக்கு ஒவ்வொரு மாதமும் ரூ.2500 உதவித்தொகை வழங்கப்படும் என்று தெரிவித்து இருந்தது. தற்போது அத்திட்டத்திற்கு மாநில அமைச்சரவை ஒப்புதல் கொடுத்து இருக்கிறது.

டெல்லி `லக்ஷ்மி யோஜனா' என்ற அத்திட்டத்திற்கு தகுதி பெற நிபந்தனைகள் மற்றும் செலவுக் கட்டுப்பாடுகளுடன் கூடிய நீண்ட பட்டியல் வெளியாகி இருக்கிறது. அவற்றில் குடும்பத்தில் மூன்றுக்கும் மேற்பட்ட குழந்தைகளைக் கொண்ட பெண்கள் திட்டத்திற்குத் தகுதி பெற மாட்டார்கள். இந்த திட்டத்தில் டெல்லியில் சுமார் 17 லட்சம் பெண்கள் பயனடைவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஆனால் இந்த நிபந்தனைகள் காரணமாக எத்தனை பெண்கள் பட்டியலில் இருந்து நீக்கப்படுவார்கள் என்ற விபரம் வெளியிடவில்லை.

இந்தத் திட்டம் மற்ற மாநிலங்களில் செயல்படுத்தப்படுவது போன்ற வழக்கமான பணப் பரிமாற்றத் திட்டங்களிலிருந்து வேறுபடுகிறது. இத்திட்டத்தில் பயனாளிகள் நேரடியாகத் தங்கள் வங்கிக் கணக்குகளில் பணத்தைப் பெற முடியாது.

அதற்கு பதிலாக, அவர்கள் முழுத் தொகையையும் தொடர்ச்சியான வைப்புத்தொகை (RD) அல்லது நிலையான வைப்புத்தொகையில் (FD) முதலீடு செய்யலாம். அல்லது மத்திய வங்கியின் டிஜிட்டல் நாணய (CBDC) பணப்பையின்(வாலட்) மூலம் ஒரு பகுதியை மட்டும் பெற்றுக்கொள்ள முடியும். அதனை பயன்படுத்தி வீட்டுக்கு தேவையான பொருட்களை வாங்கிக்கொள்ளலாம்.

பயனாளிகளுக்கு இரண்டு விருப்ப தேர்வுகள் முன்வைக்கப்பட்டுள்ளது. முதலாவதாக, வீட்டுச் செலவிற்காக ஒவ்வொரு மாதமும் ரூ.1,000 CBDC வாலட்டில் வரவு வைக்கப்படும். அதே நேரத்தில் எஞ்சிய ரூ.1,500 தானாகவே RD அல்லது FD கணக்கில் டெபாசிட் செய்யப்படும். பயனாளி இரண்டாவது விருப்பத்தைத் தேர்வுசெய்தால், முழுத் தொகையான ரூ.2,500 ஒவ்வொரு மாதமும் ஒரு RD அல்லது FD இல் முதலீடு செய்யப்படும், இது காலப்போக்கில் ஒரு பெரிய தொகையாக கிடைக்கும்.

இது குறித்து மூத்த அரசு அதிகாரி ஒருவர் கூறுகையில், ''பயனாளிகளுக்கு உடனடி நிதி உதவி மற்றும் நீண்டகால நிதிப் பாதுகாப்பு ஆகிய இரண்டையும் ஊக்குவிக்கும் வகையில் இந்த இரண்டு விருப்பங்கள் கொண்ட கட்டமைப்பு வடிவமைக்கப்பட்டுள்ளது. இது, உடனடித் தேவைகளைப் பூர்த்தி செய்வதோடு, பயனாளிகள் காலப்போக்கில் ஒரு சேமிப்புத் தொகையை உருவாக்குவதை உறுதி செய்கிறது.

அதேசமயம் தங்களின் நீண்டகால சேமிப்பை அதிகரிக்க விரும்பும் பயனாளிகள், ஒவ்வொரு மாதமும் முழுத் தொகையான ரூ. 2,500-ஐ தொடர் வைப்பு (RD/FD) மூலம் சேமிக்க முடியும். இந்தத் தேர்வு, திட்டக் காலம் முழுவதும் வட்டியுடன் ஒரு பெரிய தொகையைச் சேர்க்க அவர்களுக்கு உதவுகிறது. பெண்களுக்குத் தேர்வு செய்யும் உரிமையை அளித்து, நிதி நிலைத்தன்மையையும் சொத்து உருவாக்கத்தையும் ஊக்குவிப்பதே இதன் நோக்கமாகும்," என்று தெரிவித்தார்.

லஞ்ச ஊழல் வழக்கில் சிக்கியவருக்கு சிறந்த பணிக்கான விருது; ராமநாதபுரம் நகராட்சி சர்ச்சை!

நாட்டின் 80 வது சுதந்திர தினம் நேற்று நாடு முழவதும் கொண்டாடப்பட்டது. இந்த விழாவின்போது அரசு பணிகளிலும், பொது சேவைகளிலும் சிறந்த பணியாற்றியவர்களுக்கு சிறந்த பணிக்கான விருதுகளும் சான்றிதழ்களும் வழங்குவத... மேலும் பார்க்க

தி.,காங்கிரஸ் அலுவலகத்தில் தற்கொலை செய்துகொண்ட முன்னாள் துணை சபாநாயகர் - மேற்கு வங்கத்தில் அதிர்ச்சி

மேற்கு வங்கத்தில் மம்தா பானர்ஜி முதல்வராக இருந்தபோது துணை சபாநாயகராக பணியாற்றியவர் ஆசிஷ் பானர்ஜி. ராம்பூர்ஹாட்டில் இருந்து ஐந்து முறை எம்எல்ஏ-வாக இருந்தவர். கடந்த முறை நடந்த சட்டமன்றத் தேர்தலில் தோல்வ... மேலும் பார்க்க

பட்டம் விடும் திருவிழா: ECR வானில் பிரமாண்ட வர்ணஜாலம் நிகழ்த்தும் ஆயிரக்கணக்கான பட்டங்கள்!

செங்கல்பட்டு மாவட்டம், கிழக்கு கடற்கறை சாலையில் அமைந்துள்ள தமிழ்நாடு சுற்றுலாத்துறை வளாகத்தில் பல்வேறு நாட்டு காத்தாடிகளும், நம் இந்திய நாட்டு காத்தாடிகளும், தமிழக கலாசாரத்தை சிறப்பிக்கும் காத்தாடிகளு... மேலும் பார்க்க

தடை செய்யப்பட்ட பான் மசாலாவிற்கு விளம்பரம்: நடிகர் ஷாருக் கான், அஜய் தேவ்கனுக்கு நோட்டீஸ்!

மகாராஷ்டிராவில் பான் மசாலாவிற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆனால் பாலிவுட் நடிகர் அஜய் தேவ்கன் மற்றும் நடிகர் ஷாருக் கான் ஆகியோர் விமல் எலைச்சி எனப்படும் ஒருவகை பான் மசாலாவிற்கு தொடர்ந்து விளம்பரம் செய்... மேலும் பார்க்க

மனைவியுடன் ஏற்பட்ட வாக்குவாதத்தில் விபரீதம்: செல்ஃபி எடுப்பதாகக் கூறி, மகளை ஆற்றில் வீசிய தந்தை!

உத்தரப்பிரதேச மாநிலம் ஆக்ரா அருகில் உள்ள கிராமத்தில் வசிப்பவர் ரிங்கு. இவரது மனைவி லட்சுமி. இவர்களுக்கு ஒரு வயதில் ஒரு மகள் இருக்கிறாள். கணவன் மனைவி ஆகிய இரண்டு பேரும் தங்களது மகளுடன் ஆக்ராவை சுற்றிப்... மேலும் பார்க்க