செய்திகள் :

டெல்லி போராட்டம்: "மாணவர்களின் தைரியமான, துணிச்சலான செயல் இது"- சல்மான் கான் ஆதரவு

post image

நீட் தேர்வு முறைகேடுகள் மற்றும் வினாத்தாள் கசிவு விவகாரங்களுக்குப் பொறுப்பேற்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி டெல்லியில் கரப்பான் பூச்சி கட்சியினர் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதனிடையே நாடாளுமன்றத்தை நோக்கி பேரணியாகச் சென்றவர்கள் மீது காவல்துறையினர் தடியடி நடத்தியும், புகைக்குண்டுகளை வீசியும் தாக்குதலில் ஈடுபட்டது சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்நிலையில் இளைஞர்களுக்கு ஆதரவாக அரசியல் தலைவர்கள், திரைப்பிரபலங்கள் குரல் கொடுத்து வருகின்றனர்.

டெல்லி போராட்டம்
டெல்லி போராட்டம்

அந்தவகையில் பாலிவுட் நடிகர் சல்மான் தனது ஆதரவைத் தெரிவித்திருக்கிறார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டிருக்கும் எக்ஸ் தளப்பதிவில், " இது மிகவும் அமைதியான முறையில் நடந்த ஒரு போராட்டமாக இருந்தது, ஆனால் இறுதியில் வன்முறையாக மாறியது மிகவும் வேதனை அளிக்கிறது.

இதில் காயமடைந்த மாணவர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினருக்கு என் ஆழ்ந்த அனுதாபங்கள். வினாத்தாள் கசிவு என்பது மிகவும் தீவிரமான ஒரு பிரச்சனை. நமது நாட்டின் குழந்தைகள் ஒரு சிறந்த கல்வி முறைக்காக ஒன்றிணைந்து நிற்பதையும், அவர்களுக்குப் பெற்றோர்கள் உறுதுணையாக இருப்பதையும் காண்பது மகிழ்ச்சியளிக்கிறது.

அவர்கள் எடுத்த இந்த முடிவை நான் மனதாரப் பாராட்டுகிறேன். அவர்களின் அர்ப்பணிப்பு, உண்மைத்தன்மை மற்றும் தீவிரமாகப் படித்துத் தங்கள் எதிர்காலத்தையும், ஒரு மகத்தான, கற்றறிந்த பாரதத்தையும் உருவாக்க வேண்டும் என்ற அவர்களின் ஆர்வத்தையும் இது காட்டுகிறது.

இந்த போராட்டம் சரியான பாதையில்தான் சென்றுகொண்டிருக்கிறது. மாணவர்கள் இதை மிகவும் அமைதியான முறையில் நடத்தியுள்ளனர். இது மிகவும் தைரியமான மற்றும் துணிச்சலான செயல். கல்வியை நோக்கி உந்தப்பட்ட இந்தத் தலைமுறை இந்தியாவுக்குப் பெருமை சேர்க்கும்.

டெல்லி மாணவர்கள் போராட்டம்
டெல்லி மாணவர்கள் போராட்டம்

இந்தப் பிரச்சனை மாணவர்களுக்கும் கல்வி முறைக்கும் இடையிலானது. இதை அரசியல்வாதிகள் தங்கள் சுயலாபத்திற்காகப் பயன்படுத்திக் கொள்ளக் கூடாது. இதற்கான முழுப் பெருமையும் நமது நாட்டின் மாணவர்களையே சாரும். அரசு அவர்களுக்கு முழு ஆதரவை வழங்கி, கல்வி முறையை மேலும் வலுப்படுத்தும் என்றும் நம்புகிறேன். இது இருதரப்பிற்கும் நன்மையான ஒன்றாகும்.

மாணவர்களுக்குச் சாதகமான, நல்ல முடிவு கிடைக்கும் என்று நம்பிப் பிரார்த்திக்கிறேன். கல்வி கற்க விரும்பும் உங்கள் அனைவருக்கும் இறைவனின் அருள் கிடைக்கட்டும். கல்விதான் அடுத்த 'ட்ரெண்ட்' மற்றும் 'ஃபேஷனாக' மாற வேண்டும். அது ஆண்டுக்காண்டு மேலும் பிரபலமடைய வேண்டும். எந்தளவுக்கு என்றால், வெளிநாட்டினர் அனைவரும் இந்தியாவில் வந்து படிக்கும் அளவுக்கு இந்தியா ஒரு சிறந்த கல்விக் கூடமாக மாற வேண்டும்" என்று பதிவிட்டிருக்கிறார்.

Ramayana: "ராமாயணா முதல் பாகத்தின் பட்ஜெட் மட்டும் ரூ.4000 கோடி கிடையாது!" - கணக்கு சொல்லும் யஷ்

நிதேஷ் திவாரி இயக்கத்தில் உருவாகி வரும் 'ராமாயணம்' திரைப்படம், இந்திய சினிமாவிலேயே அதிக பட்ஜெட் முதலீட்டில் தயாரிக்கப்படும் திரைப்படமாகப் பேசப்பட்டு வருகிறது. Ramayana Movieஇப்படத்தின் தயாரிப்பாளர் நம... மேலும் பார்க்க

குளிர்பானத்தில் மயக்க மருந்து; 33 வயது நடிகையை பாலியல் வன்கொடுமை செய்த 73 வயது இயக்குநர்

பாலிவுட் படங்களான 'படே தில் வாலா' (Bade Dil Wala) மற்றும் 'ஜோரு கா குலாம்' (Joru Ka Ghulam) உள்ளிட்ட படங்களை இயக்கியவர் ஷகீல் நூரானி (73). திரைப்படத் தயாரிப்பாளர் மற்றும் இயக்குநரான ஷகீல் நூரானி மீது ... மேலும் பார்க்க

Spotify: முதல் முயற்சி; ஸ்பாட்டிஃபையில் வெளியாகும் முதல் குறும்படம்! - பிஜாய் நம்பியார் மனைவி பேட்டி

ஆடியோ வடிவத்திற்கு என பிரத்யேகமாக இயங்கி வந்த 'ஸ்பாட்டிஃபை' தளத்தில், இப்போது குறும்படங்களும் வெளிவரத் தொடங்கியிருக்கின்றன. 'டுயட்' என்ற குறும்படத்தை ஸ்பாட்டிஃபை தளத்தில் வெளியிட்டிருக்கிறார்கள். இந்த... மேலும் பார்க்க

Pradeep Rawat: ரத்தப் புற்றுநோயால் 'கஜினி' பட வில்லன் காலமானார்

'லகான்', 'கஜினி', 'வீரம்' உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்த நடிகர் பிரதீப் ராவத் நேற்று காலமானார். ரத்தப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுச் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று காலமானார். இவருக்கு வயது 74. ... மேலும் பார்க்க

Ramayana: "அந்தச் சம்பவத்துக்காக மட்டுமே சூர்ப்பணகை நினைவுகூரப்படுகிறார்; ஆனா..."- ரகுல் ப்ரீத் சிங்

இயக்குநர் நிதேஷ் திவாரி இயக்கத்தில் உருவாகியிருக்கும் 'ராமாயணா' படத்தின் முதல் பாகத்தின் டிரெய்லர் கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளியாகியிருந்தது. இப்படத்தில் சூர்ப்பணகை கதாபாத்திரத்தில் நடிகை ரகுல் ப... மேலும் பார்க்க

Gen Z: "இளைஞர்களைத் தவறான பாதைக்கு அழைத்துச் செல்லாதீர்கள்" - விமர்சனங்களுக்கு கங்கனா ரனாவத் பதில்

நடிகையும் பாஜக நாடாளுமன்ற உறுப்பினருமான கங்கனா ரனாவத், சமீபத்தில் Gen z இளைஞர்களின் போராட்ட முறைகள் மற்றும் வாழ்க்கை முறையை விமர்சித்து பேசிய சில கருத்துக்கள் சமூக வலைத்தளங்களில் பெரும் சர்ச்சையையும் ... மேலும் பார்க்க