செய்திகள் :

ட்ரம்ப் - ஜின்பிங் சந்திப்பு: அமெரிக்காவிற்கு 'ஈரான்' பிரச்னை; சீனாவிற்கு 'தைவான்' பிரச்னை

post image

கிட்டத்தட்ட 9 ஆண்டுகளுக்குப் பிறகு அமெரிக்க அதிபர் ஒருவர் சீனாவிற்குப் பயணம் சென்றிருக்கிறார்.

2017-ம் ஆண்டு ட்ரம்ப், சீனா சென்றிருந்தார். அதன் பிறகு, இப்போது தனது இரண்டாம் ஆட்சிக்காலத்தில் சீனா சென்றிருக்கிறார் ட்ரம்ப்.

இதைத் தாண்டியும், இந்தப் பயணத்தில் இன்னொரு சிறப்பும் உண்டு. ஈரான் போர் நடந்து வரும் சூழலில், சீனா சென்றிருக்கிறார் ட்ரம்ப்.

2018-ம் ஆண்டு அமெரிக்கா விதித்த தடையால், பிற உலக நாடுகள் ஈரானிடம் இருந்து எண்ணெய் வாங்குவதை நிறுத்தியது. ஆனால், எதற்கும் அசராமல் சீனா மட்டும் தொடர்ந்து ஈரானிடம் எண்ணெய் வர்த்தகம் செய்து வந்தது

ஈரான் மீதான போர்
ஈரான் மீதான போர்

ஈரான் போர் நடந்துகொண்டிருந்தபோது கூட, சீனாவிற்கு ஈரானிடம் இருந்து தொடர்ந்து எண்ணெய் சென்றுகொண்டிருந்தது.

ஒரு நாள், 'ஈரானுடன் பேச்சுவார்த்தை நன்கு போய்கொண்டிருக்கிறது' என்றும், அடுத்த நாள், 'ஈரான் மீது தாக்குதல்' என்றும் எப்படி இந்தப் போரை நிறுத்துவது என்று ட்ரம்ப் முழித்துகொண்டிருக்கிறார்.

வருகிற நவம்பர் மாதம் அமெரிக்காவில் 'மிட்-டேர்ம்' தேர்தல் (செனட் தேர்தல்) நடக்க உள்ளது. அதற்குள் இந்தப் போரை முடிப்பதுதான் ட்ரம்பிற்கு நல்லது. அதனால், அவர் ஈரான் போரை எப்படியாவது முடித்துவிட வேண்டும் என்று நினைக்கிறார்.

ஆனால், அவருக்கு அதற்கான வழி தான் தெரியவில்லை.

ட்ரம்பின் சீன பயணத்தின் முக்கிய நோக்கம் - வர்த்தக ஒப்பந்தமும், பிசினஸும்தான் என்றாலும், ஈரான் போர் பேச்சுவார்த்தையை மறுப்பதற்கில்லை.

ட்ரம்ப் தான் மட்டும் சீனாவிற்குச் செல்லவில்லை. அமெரிக்க நிறுவனங்களின் சி.இ.ஓக்கள் எலான் மஸ்க் (டெஸ்லா, ஸ்பேஸ் எக்ஸ்), ஜென்சன் ஹுவாங் (Nvidia), டிம் குக் (ஆப்பிள்) எனப் பலர் சென்றுள்ளனர்.

அமெரிக்காவின் அரசு துறைகளின் செயலாளர்கள் மார்கோ ரூபியோ (வெளியுறவுத் துறை), பீட் ஹெக்ஸெத் (பாதுகாப்புத் துறை), ஸ்காட் பெசென்ட் (கருவூலத் துறை) உள்ளிட்டோரும் சென்றுள்ளனர்.

ஜி ஜின்பிங் - ட்ரம்ப்
ஜி ஜின்பிங் - ட்ரம்ப்

சீனாவில் தரையிறங்கியது ட்ரம்பிற்கு 'சிவப்பு கம்பள' வரவேற்பு வழங்கப்பட்டது. சீனாவின் சட்டப்படி, அந்த நாட்டு அதிபர் யாரையும் விமான நிலையத்திற்கே நேரில் சென்று வரவேற்கமாட்டார்.

அதனால், சீனாவின் துணை அதிபர் ஹான் ஜெங் ட்ரம்பை விமான நிலையத்திற்குச் சென்று வரவேற்றார்.

இப்போது வரை இந்தப் பயணத்தில் சீனாவும் ஹேப்பி... அமெரிக்காவும் ஹேப்பி. பேச்சுவார்த்தை முடிவில்தான் இந்தப் பயணம் வெற்றியா... இல்லையா என்பது தெரிய வரும்.

வரும் வெள்ளிக்கிழமைதான் ட்ரம்பின் சீன பயணம் முடிகிறது.

ஈரான் போரில் சீனாவின் உதவி தேவையில்லை என்று பயணத்திற்கு முன் ட்ரம்ப் தெரிவித்திருக்கிறார். ஆனால், நிச்சயம் சீனப் பயணத்தில் ஈரான் குறித்த பேச்சுவார்த்தை எழும் என்பது உலகம் அறிந்ததே.

இன்னொரு பக்கம், சீனாவிற்கு அமெரிக்கா, தைவான் விஷயத்தில் தலையிடக் கூடாது என்று நினைக்கிறது.

ட்ரம்பின் ஈரான் போர் நிறுத்த ஆசை; சீன அதிபர் ஜின்பிங்கின் 'அமெரிக்கா தலையிடாத தைவான் பிரச்னை' ஆசை எல்லாம் நிறைவேறுகிறதா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

’செங்கோட்டையன் வேண்டுகோளை ஏற்று.!’ - தவெகவுக்கு தாவும் கோவை அதிமுக நிர்வாகிகள்!

நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க. தோல்வியடைந்து இருப்பதோடு, மூன்றாவது இடத்திற்கும் தள்ளப்பட்டுள்ளது. இந்த நிலையில் கோவை மாவட்டத்தில் உள்ள அக்கட்சி நிர்வாகிகள் அடுத்தடுத்து கட்சியில் இருந்து... மேலும் பார்க்க

"திமுகவைக் குறைத்து மதிப்பிட்டால், அது அரசியல் புரிதல் இல்லை என்றே அர்த்தம்" - கார்த்தி சிதம்பரம்

தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் திமுக ஆட்சியை வீழ்த்தி, 108 இடங்கள் வென்று விஜய்யின் தவெக, கூட்டணிக் கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சி அமைத்திருக்கிறது. ஆட்சியமைக்க பெரும்பான்மைக்கு 118 இடங்கள... மேலும் பார்க்க

'அதிமுகவுக்கு மினிமம் 5 அமைச்சர்கள்!' - டிமாண்ட் ஏற்றும் வேலுமணி டீம்; இறுதிக்கட்ட ஆலோசனையில் விஜய்?

விஜய் முதல்வராகப் பொறுப்பேற்று 5 நாள்கள் ஆகிவிட்டன. அவருடன் 9 அமைச்சர்களும் பதவியேற்றருந்தனர். அவர்களுக்கான இலாக்கா இன்னும் ஒதுக்கப்படவில்லை. எஞ்சிய அமைச்சர்களும் இன்னும் அறிவிக்கப்படவில்லை. இந்நிலையி... மேலும் பார்க்க

`விஜய் என்னை காப்பாற்றாமல் விடுவாரா?' - எஸ்.காமராஜின் சட்டமன்ற பல்டியும் பின்னணியும்!

சட்டமன்றத் தேர்தல் முடிவு வெளியாகி த.வெ.க தலைமையில் மே 10-ம் தேதி ஆட்சியும் அமைந்துவிட்டது. ஆனால், முடிவு வெளியான அன்றிலிருந்து ஒவ்வொரு நாளும் தமிழக அரசியல் களம் அதகளம் ரணகளம்தான். அதில் உச்சகட்டமாக ப... மேலும் பார்க்க

மகளிர் உரிமைத் தொகை: "ரூ.2500-னு சொல்லிட்டு ரூ.1000கூட தராம இழுத்தடிக்கிறது..."- ஸ்டாலின் கண்டனம்

2021-2026 தி.மு.க ஆட்சிக் காலத்தில் 'கலைஞர் மகளிர் உரிமைத்தொகை' திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. இத்திட்டத்தின் கீழ், தகுதியுள்ள பெண்களுக்கு மாதந்தோறும் ரூ. 1,000 அவர்களது வங்கித் தொகையில் நேரடியாக வரவ... மேலும் பார்க்க

`மிரட்டிய எடப்பாடி; தனித்துச் சென்ற வேலுமணி டு லிஸ்ட் எடுக்கும் உதயநிதி.!' | கழுகார் அப்டேட்ஸ்

தனித்துச் சென்ற வேலுமணி!""மிரட்டிய எடப்பாடி...அ.தி.மு.க-வில், வேலுமணி தலைமையில் 25 சட்டமன்ற உறுப்பினர்கள் அணிவகுத்துள்ளனர். அமித் ஷாவுக்கு நெருக்கமானவரான சென்னையைச் சேர்ந்த பிரபல கட்டட தொழிலதிபர் வழிய... மேலும் பார்க்க