செய்திகள் :

ட்ரம்ப் மீது அத்தனை காதல்: மதுரோ டு கிரீன்லேண்ட் - வெள்ளை மாளிகையின் வித்தியாச காதலர் தின போஸ்ட்

post image

இன்று பிப்ரவரி 14 - காதலர் தினம்.

காதலர் தின வாழ்த்தை ஒவ்வொரு விதமாக தெரிவித்துக் கொண்டிருக்கிறார்கள். இந்த நேரத்தில் புதிய ஸ்டைலில் அமெரிக்க அதிபர் ட்ரம்பிற்கு காதலர் தின வாழ்த்தைக் கூறியுள்ளது, வெள்ளை மாளிகை.

வெள்ளை மாளிகை தனது எக்ஸ் பக்கத்தில் நான்கு போட்டோக்களைப் பகிர்ந்து 'உங்களுக்காக' என்று பதிவிட்டுள்ளது. இங்கு 'உங்களுக்காக' என்று தெரிவித்திருப்பது ட்ரம்பை தான்.

வெள்ளை மாளிகை
வெள்ளை மாளிகை

முதல் போட்டோவில், வெனிசுலா அதிபர் மதுரோ கைதுப் போட்டோவைப் பகிர்ந்து, 'நீங்கள் எனது இதயத்தைக் கைப்பற்றியிருக்கிறீர்கள்' என்றும்...

இரண்டாவது போட்டோவில், ட்ரம்ப் கையெழுத்திட்ட 4547-வது நிர்வாக ஆணையைப் பகிர்ந்து, 'நீங்கள் என் காதலர்' என்றும்...

மூன்றாவது போட்டோவில், சட்டத்திற்குப் புறம்பாக குடியேறிய வெளிநாட்டினரை ட்ரம்ப் வெளியேற்றியது குறித்து, 'ஜனநாயக கட்சியினருக்கு சட்டத்திற்குப் புறம்பாக குடியேறியவர்கள் மீது எத்தனை காதலோ, உங்கள் மீது அத்தனை காதல்' என்றும்...

நான்காவது போட்டோவில், கிரீன்லேண்டை இதய வடிவில் உருவகப்படுத்தியும்...

- பதிவிட்டிருக்கிறது.

4547-வது நிர்வாக ஆணை என்பது 2025-ம் ஆண்டு ஜனவரி 1-ம் தேதி முதல் 2028-ம் ஆண்டு டிசம்பர் 31-ம் தேதி வரை அமெரிக்காவில் பிறக்கும் குழந்தைகளுக்காக, அவர்களது எதிர்காலத்திற்கு 1,000 டாலர்கள் வழங்கப்படுகிறது.

`தங்களுக்கு என்ன பலன் என பார்க்காமல் கட்சி நலனை பாருங்கள்!'- ஓ.பி.எஸ்ஸை விமர்சித்த டிடிவி தினகரன்?

மதுரையில் அமமுக கட்சியின் செய்தி தொடர்பாளர் வெற்றி பாண்டியனின் புதுமனை புகுவிழாவில் அக்கட்சியின் பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன் கலந்து கொண்டார்.பின் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், "நயினார் நாக... மேலும் பார்க்க

ஏழைகளின் இறைச்சி முதல் தீபாவளி பருப்பு வரை! - புவிசார் குறியீடு பெற்ற இந்தியாவின் டாப் 6 பருப்புகள்

உணவுப் பயிர்கள், கைவினைப் பொருள்கள், உணவுப் பொருள்கள், பாரம்பர்ய தயாரிப்புகள், தோட்டப்பயிர்கள், மசாலாக்கள் போன்றவற்றிற்குப் பொதுவாக புவிசார் குறியீடு வழங்கப்படுகிறது. இந்த புவிசார் குறியீடு இருந்தால் ... மேலும் பார்க்க

`தஞ்சாவூர் தொகுதி உனக்கு தான்' திமுக மாவட்ட செயலாளரின் வாக்குறுதி; குழப்பத்தில் நிர்வாகிகள்!

2026 சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வருகிறது. அரசியல் கட்சிகள் தேர்தலை எதிர்கொள்ள மும்முரம் காட்டி வருகின்றனர். குறிப்பாக கூட்டணி, எந்ததெந்த தொகுதிகளில் போட்டியிடுவது, யாரை வேட்பாளராக நிறுத்தலாம் போன்ற ப... மேலும் பார்க்க

"நாங்கள் கேட்பது நீங்கள் தோல்வி அடைந்த இடங்களை தான்"- ராஜகண்ணப்பனுக்கு மாணிக்கம் தாகூர் பதிலடி

தமிழக சட்டமன்றத் தேர்தல் நெருங்கும் நிலையில் அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. இந்தச் சூழலில் ஆட்சியில் பங்கு, அதிகாரத்தில் பங்கு என்ற விவகாரம் திமுக - காங்கிரஸ் கூட்டணிகள... மேலும் பார்க்க

Vijay : தவெக vs சேகர் பாபு vs தவெக; துறைமுகம் தொகுதியின் முக்கோண மோதல்!

கடந்த வாரத்தில் துறைமுகம் தொகுதியில் திமுகவினருக்கும் தவெகவினற்கும் இடையே நடந்த மோதலின் சூடு இன்னமும் அந்தப் பகுதியில் தணியவில்லை. களமிறங்கி விசாரித்ததில் நமக்கும் தொகுதிக்குள் நிலவும் முக்கோண மோதல் க... மேலும் பார்க்க

புதுச்சேரியில் உள்துறை அமைச்சர் அமித் ஷா! - கூட்டணிக்கு இழுத்தடிக்கும் முதல்வர் ரங்கசாமியுடன் ஆலோசனை

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் ஏப்ரல் மாதம் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற இருக்கிறது. அதை முன்னிட்டு கூட்டணிகளை இறுதி செய்யும் பணிகளில் இறங்கியிருக்கிறது பா.ஜ.க. அதனடிப்படையில் நேற்று திருச்சிக்கு வந... மேலும் பார்க்க