செய்திகள் :

`தங்களுக்கு என்ன பலன் என பார்க்காமல் கட்சி நலனை பாருங்கள்!'- ஓ.பி.எஸ்ஸை விமர்சித்த டிடிவி தினகரன்?

post image

மதுரையில் அமமுக கட்சியின் செய்தி தொடர்பாளர் வெற்றி பாண்டியனின் புதுமனை புகுவிழாவில் அக்கட்சியின் பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன் கலந்து கொண்டார்.

பின் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், "நயினார் நாகேந்திரன் பொதுவாக அப்படி பேசுபவர் கிடையாது. தனிப்பட்ட விமர்சனங்களை தவிர்க்க வேண்டும்.

திமுக ஐம்பதாயிரம் ரூபாய் அறிவித்தாலும் அவர்களுடைய ஆட்சி முடிவுக்கு வந்து விடும். விவசாயிகள் அரசு அலுவலர்கள், மருத்துவர்கள், செவிலியர்கள், ஆசிரியர்கள் எல்லோரும் போராடி கொண்டிருக்கிறார்கள். திமுக தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை. ஆட்சி முடியும் தருவாயில் உள்ளது. தமிழ்நாட்டில் கூலிப்படைகள் உருவாகிற அளவிற்கு போதைப்பொருள்கள் பள்ளிக்கூடங்களின் அருகிலேயே கிடைக்கிறது.

அம்மாவின் தொண்டர்கள் எல்லாம் ஓரணியில் திரண்டு விட்டதால் அவர்களுக்கு பயம் ஏற்பட்டுள்ளது தெரியவருகிறது. ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மக்களுக்கு கொடுக்க வேண்டிய தொகையை மடை மாற்றி பெண்களின் உரிமை தொகையாக கொடுத்திருக்கிறார்கள். இது தேர்தல் பயத்தையும், தோல்வி பயத்தையும் காட்டுகிறது.

அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன்

தேசிய ஜனநாய கூட்டணிக்கு வருவது குறித்து ஓபிஎஸ்-தான் முடிவெடுக்க வேண்டும். அம்மாவின் ஆட்சி அமைக்க வேண்டும் எனச் சொன்னவர்கள் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு ஆதரவு அளிப்பார்கள், அப்படி இல்லை என்றால் அவர்களுடைய முகத்திரை கிழிந்துவிடும். அது யாராக இருந்தாலும் சரி. கடந்த ஏழு எட்டு ஆண்டுகளில் யாரெல்லாம் அம்மாவின் தொண்டர்கள் ஒன்றிணைய வேண்டும் எனப் பேசினார்களோ அவர்கள் தங்களுக்கு என்ன பலன் என பார்க்காமல் கட்சியின் வெற்றிக்கு உறுதுணையாக இருக்க வேண்டும். பிரிந்து சென்ற அம்மாவின் தொண்டர்கள் எல்லோரும் ஒன்றாக சேர்ந்து விட்டோம். இன்னும் ஒரு சிலர் வெளியில் இருக்கிறார்கள். அவர்களும் வர வேண்டும்" என்றார்.

அண்ணா அறியாலயத்தில் ஒருபக்கம் ரெய்டு; மறுப்பக்கம் கூட்டணி பேச்சு! - காங்கிரஸ் ஆடிய அரசியல் ஆடுபுலி

`ஆட்சியில் பங்கு'அரசியல் ஆடுபுலி 05ஆட்சியில் பங்கு வேண்டும் என்கிற கோரிக்கையோடு, அதிமுக கூட்டணியில் பாஜகவும், திமுக கூட்டணியில் காங்கிரசும், 2026 சட்டமன்ற பொதுத்தேர்தலுக்கான கூட்டணிப் பேச்சினைத் தொடங்... மேலும் பார்க்க

ஏழைகளின் இறைச்சி முதல் தீபாவளி பருப்பு வரை! - புவிசார் குறியீடு பெற்ற இந்தியாவின் டாப் 6 பருப்புகள்

உணவுப் பயிர்கள், கைவினைப் பொருள்கள், உணவுப் பொருள்கள், பாரம்பர்ய தயாரிப்புகள், தோட்டப்பயிர்கள், மசாலாக்கள் போன்றவற்றிற்குப் பொதுவாக புவிசார் குறியீடு வழங்கப்படுகிறது. இந்த புவிசார் குறியீடு இருந்தால் ... மேலும் பார்க்க

`தஞ்சாவூர் தொகுதி உனக்கு தான்' திமுக மாவட்ட செயலாளரின் வாக்குறுதி; குழப்பத்தில் நிர்வாகிகள்!

2026 சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வருகிறது. அரசியல் கட்சிகள் தேர்தலை எதிர்கொள்ள மும்முரம் காட்டி வருகின்றனர். குறிப்பாக கூட்டணி, எந்ததெந்த தொகுதிகளில் போட்டியிடுவது, யாரை வேட்பாளராக நிறுத்தலாம் போன்ற ப... மேலும் பார்க்க

"நாங்கள் கேட்பது நீங்கள் தோல்வி அடைந்த இடங்களை தான்"- ராஜகண்ணப்பனுக்கு மாணிக்கம் தாகூர் பதிலடி

தமிழக சட்டமன்றத் தேர்தல் நெருங்கும் நிலையில் அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. இந்தச் சூழலில் ஆட்சியில் பங்கு, அதிகாரத்தில் பங்கு என்ற விவகாரம் திமுக - காங்கிரஸ் கூட்டணிகள... மேலும் பார்க்க

Vijay : தவெக vs சேகர் பாபு vs தவெக; துறைமுகம் தொகுதியின் முக்கோண மோதல்!

கடந்த வாரத்தில் துறைமுகம் தொகுதியில் திமுகவினருக்கும் தவெகவினற்கும் இடையே நடந்த மோதலின் சூடு இன்னமும் அந்தப் பகுதியில் தணியவில்லை. களமிறங்கி விசாரித்ததில் நமக்கும் தொகுதிக்குள் நிலவும் முக்கோண மோதல் க... மேலும் பார்க்க

ட்ரம்ப் மீது அத்தனை காதல்: மதுரோ டு கிரீன்லேண்ட் - வெள்ளை மாளிகையின் வித்தியாச காதலர் தின போஸ்ட்

இன்று பிப்ரவரி 14 - காதலர் தினம். காதலர் தின வாழ்த்தை ஒவ்வொரு விதமாக தெரிவித்துக் கொண்டிருக்கிறார்கள். இந்த நேரத்தில் புதிய ஸ்டைலில் அமெரிக்க அதிபர் ட்ரம்பிற்கு காதலர் தின வாழ்த்தைக் கூறியுள்ளது, வெள்... மேலும் பார்க்க