செய்திகள் :

தஞ்சாவூர் புதிய பேருந்து நிலையம் அருகே டாஸ்மாக் கடை மூடல் - நிம்மதியடைந்த பொதுமக்கள்!

post image

தமிழக அரசு, கல்வி நிலையங்கள் மற்றும் வழிபாட்டுத் தலங்களுக்கு அருகில் உள்ள மதுக்கடைகளை மூட உத்தரவிட்டது. இதன்படி, தஞ்சாவூர் மாவட்டத்தில் 20-க்கும் மேற்பட்ட கடைகள் மூடப்பட உள்ளன.

அவற்றுள் மிகவும் கவனம் பெற்றது, தஞ்சாவூர் புதிய பேருந்து நிலையம் அருகிலுள்ள டாஸ்மாக் கடை. நீண்டகாலமாக இக்கடை அப்பகுதி மக்களுக்கும் பெண்களுக்கும் பெரும் இடையூறாக இருந்து வந்தது.

பேருந்து நிலையம் என்பதால் இருபத்தி நான்கு மணி நேரமும் மக்கள் நடமாட்டம் அதிகமாக இருக்கும்.

ஆனால், மதுப் பிரியர்களின் செயல்களால், பெண்கள் அப்பகுதியில் நடந்து செல்லவே அஞ்சினர்.

இக்கடையை மூட வேண்டும் என்று பொதுமக்களும் பல்வேறு சமூக அமைப்புகளும் தொடர்ந்து குரல் கொடுத்து வந்தனர். ஆனால், யாரும் நடவடிக்கை எடுக்க முன் வரவில்லை. ஆறு மாதங்களுக்கும் மேலாக கோரிக்கைகள் தொடர்ந்த நிலையில், புதிய அரசின் உத்தரவுப்படி இக்கடைக்கு நிரந்தரப் பூட்டு விழுந்தது.

இது குறித்து அப்பகுதி வியாபாரிகளும் ஊழியர்களும் கூறுகையில், "ஒவ்வொரு நாளும் இந்த வழியில் மிகுந்த அச்சத்துடனேயே சென்று வந்து கொண்டிருந்தோம். இரவு நேரங்களில் குடிகாரர்களின் கூட்டத்தினூடே நடக்கவே முடியாது.

ஆபாசமான வார்த்தைகள், கேலிகள் என்று அருவருப்பாக இருக்கும். இப்போது இக்கடைக்கு பூட்டு விழுந்தது, மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. இதோடு நிறுத்திவிடாமல், தமிழகம் முழுவதும் கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருள்களையும் ஒழித்தால், இந்த அரசுக்கு மக்கள் என்றென்றும் நன்றிக்கடன்பட்டிருப்பார்கள்!" என்று தெரிவித்தனர்.

‘இதுதான் உங்களது நாகரிக அரசியலா ஜோசப் விஜய்?’ – வானதி சீனிவாசன் சாடல்!

பா.ஜ.க தேசிய மகளிரணி தலைவர் வானதி சீனிவாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழர்களின் தொன்மையான சோழர் பெருமையை 300 ஆண்டுகளுக்குப் பிறகு மீட்டெடுத்த பிரதமர் நரேந்திர மோடிக்கு ஒரு சின்ன பாராட்டுகூட தெரிவி... மேலும் பார்க்க

'இந்தியாவில் சிறுபான்மையினருக்கு பாதுகாப்பு இல்லையா?' - நெதர்லாந்து பிரதமருக்கு இந்தியா தக்க பதில்

இந்திய பிரதமர் மோடி ஐக்கிய அரபு அமீரகம், நெதர்லாந்து, ஸ்வீடன், நார்வே, இத்தாலி என ஐந்து நாடுகள் பயணத்தை மே 15 முதல் மே 20 வரை மேற்கொண்டிருக்கிறார். மோடி நெதர்லாந்து செல்வதற்கு முன்பு, அவரது பயணம் குறி... மேலும் பார்க்க

`இந்திய ரூபாய்-ன் வீழ்ச்சியை அரசு கண்டும் காணாமலும் இருப்பது இதனால்தான்' - நிபுணர் சொல்வதென்ன?

அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாய் மதிப்பு தொடர்ந்து சரிந்துகொண்டே வருகிறது. தற்போது சந்தையில் ஒரு டாலருக்கு ரூ.96-ஐ தாண்டி வர்த்தகம் ஆகிறது. இந்திய ரூபாயின் மதிப்பு தொடர்ந்து சரிந்து வருவதால், வ... மேலும் பார்க்க

`மு.க.ஸ்டாலினுக்கு நன்றி சொல்லி வெளியேறியிருக்கலாம்!’ - திமுக - காங்கிரஸ் முறிவு குறித்து நாராயணசாமி

``தோல்விக்கு பொறுப்பேற்கிறேன்...!’புதுச்சேரி முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி நேற்று 17-ம் தேதி தன்னுடைய இல்லத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, ``சட்டமன்றத் தேர்தலில் மக்கள் கொடுத்திருக்கும்... மேலும் பார்க்க

`தவெக ஆட்சிக்கு வந்தபின்பும் அதே நிலை தான் நீடிக்கிறதோ?' - சட்டம் ஒழுங்கு குறித்து டிடிவி தினகரன்

தமிழ்நாட்டில் புதிய ஆட்சியாக தமிழக வெற்றிக் கழகம் பொறுப்பேற்றிருக்கிறது. முதல்வராக சி.ஜோசப் விஜய் தலைமையிலான நிர்வாகம் நடந்து வருகிறது. இந்த நிலையில், தமிழ்நாட்டின் சட்டம் ஒழுங்கு சீர்கேடு தொடர்வதாக அ... மேலும் பார்க்க

“ஆரவாரத்தால் அதிர போகும் சேப்பாக்கம்.!” - தோனியின் `Last' என்ட்ரியை காண வரும் முதல்வர் விஜய்?

சேப்பாகத்தில் இன்று நடைபெறும் சென்னை சூப்பர் கிங்ஸ் - ஹைதராபாத் அணிகளுக்கு இடையேயான போட்டியின் போது சேப்பாக்கம் மைதானமே கூடுதல் உற்சாகமாக இருக்கப்போகிறது.இந்தியாவில் நடந்துவரும் ஐ.பி.எல் தொடர் கிரிக்க... மேலும் பார்க்க