செய்திகள் :

தஞ்சை: காமராசர் மார்கெட்டில் மூடிக் கிடக்கும் கழிவறைகள் - சிரமத்தில் வியாபாரிகள்!

post image

தஞ்சாவூர் மாவட்டம், வடக்கு வீதியில் இருக்கும் காமராசர் காய்கறி மார்க்கெட்டில் மூன்று கழிவறைகள் கட்டப்பட்டிருந்தும் ஒன்றுகூட பயன்பாட்டில் இல்லை என அப்பகுதி மக்கள் கூறியதையடுத்து, அங்கு சென்று அப்பகுதி மக்களிடம் இது குறித்து கேட்டறிந்தோம்.

நம்மிடம் பேசியவர்கள், "தஞ்சாவூர்ல மிக பழைமையான மார்கெட் என்றால் அது காமராசர் மார்கெட்தான். இது சுமார் 60 ஆண்டுகளுக்கு மேல் செயல்பட்டு வருகிறது. இந்த மார்க்கெட் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் சுமார் ₹20.26 கோடி செலவில் 4.1 ஏக்கர் பரப்பளவில் நவீனமயமாக்கப்பட்டு, 2023 ஆம் ஆண்டு புதிய பொலிவுடன் கட்டப்பட்டது. ஆனால், இங்கு ஒன்றுக்கு மூன்று கழிவறைகள் இருந்தும், ஒன்றுகூட இப்போது பயன்பாட்டில் இல்லை.‌ இங்கு ஒரு நாளைக்கு ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வந்து போகிறார்கள். இங்கு 500-க்கும் மேற்பட்ட கடைகள் இருக்கின்றன. காய்கறி, பழக்கடை, பல்பொருள் அங்காடி என அனைத்து கடைகளும் இங்கு இருக்கிறது. இந்த முக்கியமான இடத்தில் பொதுக் கழிவறை இருந்தும் பயன்பாடின்றி இருப்பது மிகவும் சிரமமாக இருக்கிறது.

இங்கு வேலை செய்பவர்கள் எல்லாம் பக்கத்தில் இருக்கும் மைதானத்தில்தான் இயற்கை உபாதைகளை கழிக்கிறோம். ஆண்கள்கூட எப்படியாவது சமாளித்துக் கொள்கிறோம். ஆனால் இங்குள்ள பெண்கள்தான் ஆத்திர அவசரத்துக்கு ஒதுங்கக்கூட இடம் இல்லாமல் கஷ்டப்படுகிறார்கள்.

ஆண்கள், பெண்கள் என இரு பாலருக்கும் தனித்தனியே கழிவறை இருந்தும், பயன்பாடு இன்றி பூட்டியே இருக்கிறது. புது கழிவறை கட்டி மூன்று ஆண்டுகளாகிறது. ஆனால் அதனால் எந்த பயனும் இல்லை.

இப்போது புது கழிவறை முன்புறம் பார்க்கிங் இடமா போச்சு. ஏற்கெனவே இருந்த கழிவறையும் சீரமைக்கப்படாமல் இருக்கிறது. நாங்களும் அதிகாரிகளிடம் கழிவறைகளை திறக்கக் கோரிக்கை விடுத்தோம். ஆனால் யாரும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. வியாபாரிகள் இவ்வளவு பேர் இங்கு இருக்கிறோம்... அவசரத்துக்கு என்ன செய்வோம்? எங்களோட சிரமம் அதிகாரிகளுக்கு புரியவில்லை. இங்கிருக்கிற கழிவறைகளை உடனடியாக சீரமைத்து திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்" எனக் கோரிக்கை விடுக்கின்றனர்.

`பக்குவமானவர்; அவர் திமுக-வில் இணைந்தால் வரவேற்பேன்!' - ஓபிஎஸ் குறித்து திருமாவளவன்

திருச்சி விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த திருமாவளவன்,"அ.தி.மு.க ஆட்சிக்கு வந்தால் கருணைத்தொகை பத்தாயிரம் ரூபாய் வழங்கப்படும் என எடப்பாடி தெரிவித்திருக்கிறார். தேர்தல் காலத்து வாக்குறுதிகள்... மேலும் பார்க்க

சென்னை: மின்சார ரயில் சேவை பாதிப்பு; அவதியுறும் பொதுமக்கள்; திமுக எம்.பி-க்கள் கண்டனம்!

சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் நடைமேடை மறுசீரமைப்பு பணிகள் காரணமாக புறநகர் மின்சார ரயில் சேவை பாதிக்கப்பட்டு, பொதுமக்கள் கடும் சிரமத்தைச் சந்தித்து வருகின்றனர். ஏற்கெனவே 40 ரயில்கள் ரத்து செய்யப்ப... மேலும் பார்க்க

மாட்டிறைச்சி ஏற்றுமதியில் முன்னணி நிறுவனம்... பாஜக-வுக்கு ரூ.30 கோடி நன்கொடை அளித்த அல்லானா !

இந்தியாவில் குறிப்பாக வடமாநிலங்களில் மாட்டிறைச்சித் தொழிலுக்கு எதிராக சில இந்துத்துவா குழுக்கள் தொடர் போராட்டங்களையும், அதைக் காரணமாக வைத்து சிறுபான்மையினர் மீது தாக்குதல்களையும் நடத்தி வருவதாக குற்றச... மேலும் பார்க்க

எச்சரித்த எ.வ.வேலு; தட்டிக்கொடுத்த விஜய் - வேலூர் TVK வேட்பாளர் ரேஸில் முந்தும் வினோத் கண்ணன்!

வேலூர் அகரம்சேரியில், நேற்று நடைபெற்ற த.வெ.க நிர்வாகிகள் சந்திப்புக் கூட்டத்தில், வினோத் கண்ணன் என்பவர் விஜய்யின் கவனத்தை ஈர்த்து பேசுபொருளாகவும் மாறியிருக்கிறார். விஜய் பேசி முடித்தப் பிறகு அவருக்கு ... மேலும் பார்க்க

`அதிதீவிர சிகிச்சையில் நல்லகண்ணு' - ராஜீவ் காந்தி மருத்துவமனை அறிக்கை சொல்வது என்ன?

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு, வயோதிகம் காரணமாக வீட்டில் ஓய்வில் இருந்தார். நூற்றாண்டு விழா கொண்டாடப்பட்ட அவருக்கு கடந்த சில மாதங்களாகவே உடல்நிலை சரியில்லாமல் இருந்தது. அவ்வப்போத... மேலும் பார்க்க

'விஜய்க்கு உடம்பு சரியில்லன்னா கூட கவர்மெண்ட் ஆஸ்பத்திரிக்குதான் போவாரு' - கனவை பகிரும் ஆதவ் அர்ஜூனா

தவெக சார்பில் வில்லிவாக்கம் தொகுதியில் செயல்வீரர்கள் கூட்டம் நடத்தப்பட்டிருந்தது. தவெக சார்பில் வில்லிவாக்கம் தொகுதியில் ஆதவ் அர்ஜூனா போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்படும் நிலையில் நிர்வாகிகள் மத்தியி... மேலும் பார்க்க