செய்திகள் :

"தனிப்பட்ட முறையில் ஒவ்வொருதருக்கும் ஒவ்வொரு கருத்து இருக்கலாம், ஆனால்.!"- மாணிக்கம் தாகூர் சூசகம்

post image

ஆட்சியில் பங்கு, அதிகாரத்தில் பங்கு என்று காங்கிரஸில் சிலர் பேசி வந்தனர். மேலும், தவெக தலைவர் விஜய்யை காங்கிரஸ் நிர்வாகி பிரவீன் சக்கரவர்த்தி நேரில் சந்தித்துப் பேசினார்.

மாணிக்கம் தாகூரும் அதிரடி பதிவுகளை பதிவிட்டு வந்தார். இதனால் காங்கிரஸ் - தவெக-வுடன் கூட்டணி வைக்குமோ? என்ற சந்தேகங்கள் எழுந்தன.

இப்படி திமுக - காங்கிரஸ் இடையே தொடர்ந்து மோதல் போக்கு நிலவிக்கொண்டே இருந்த நிலையில் சென்னை வந்த காங்கிரஸ் அமைப்பு பொதுச்செயலாளர் கே.சி. வேணுகோபால், "திமுக-வுடன் சேர்ந்து வகுப்புவாதச் சக்திகளை எதிர்ப்போம். திமுக கூட்டணியில்தான் காங்கிரஸ் உள்ளது.

ராகுல் காந்தி, ஸ்டாலின்
ராகுல் காந்தி, ஸ்டாலின்

கூட்டணி தொடர்பான தனிநபர் கருத்து, காங்கிரஸ் கட்சியின் கருத்து கிடையாது. கட்சியின் அறிவுறுத்தலை மீறிப் பேசினால் காங்கிரஸ் தலைமை நடவடிக்கை எடுக்கும்" என்று திமுக - காங்கிரஸ் பஞ்சாயத்திற்கு ஒரு முற்றுப்புள்ளி வைத்திருந்தார்.

இது ஒருபுறம் இருக்க, ஆட்சியில் பங்கு என்ற கோரிக்கையை ஓரங்கட்டிய காங்கிரஸ் தலைமை, 30 சட்டசபை தொகுதிகள், 2 ராஜ்யசபா சீட் கொடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியதாகவும் ஆனால், 27 சட்டசபை தொகுதிகள், 1 ராஜ்யசபா இடங்கள் மட்டுமே தர முடியும் என்று திமுக தலைவர் ஸ்டாலின் உறுதியாக இருப்பதாகவும் தகவல் வெளியாகி வருகின்றன.

இந்நிலையில், திமுகவுடன் 2வது கட்ட பேச்சுவார்த்தையை காங்கிரஸ் இன்று மேற்கொள்கிறது.

இந்த சூழலில் காங்கிரஸ் கட்சி தலைமை எடுக்கும் முடிவை அனைவரும் ஏற்போம் என்று காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூர் தெரிவித்திருக்கிறார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டிருக்கும் பதிவில், " தனிப்பட்ட முறையில் ஒவ்வொருதருக்கும் ஒவ்வொரு கருத்து இருக்கலாம். ஆனால் தனிநபர்களை விட கட்சி பெரியது.

மாணிக்கம் தாகூர்
மாணிக்கம் தாகூர்

தலைமை முடிவு செய்யும் போது அதனை ஏற்றுக்கொள்வோம். ஏனெனில் ஒற்றுமையே நமது மிகப்பெரிய சக்தி" என்று பதிவிட்டிருக்கிறார். இன்று திமுக - காங்கிரஸ் கூட்டணி உறுதியாகிவிடும் என்பதை தான் சூசகமாக பதிவிட்டிருக்கிறார் என்று பேசப்படுகிறது.

போர் எதிரொலி: இந்தியாவில் சமையல் எரிவாயு தட்டுப்பாட்டைத் தவிர்க்க மத்திய அரசு நடவடிக்கை!

ஈரான், இஸ்ரேல், அமெரிக்கா இடையேயான போர் சூழல் காரணமாக ஹார்முஸ் ஜலசந்தி மூடப்பட்டு உலக அரங்கில் பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு உருவாகும் நிலை ஏற்பட்டிருக்கிறது. மத்திய கிழக்கு போர் சூழலால், இந்தியாவில் சம... மேலும் பார்க்க

ஈரான் போர் நீடித்தால் ஒரு பேரல் கச்சா எண்ணெய் விலை 150 டாலர்களை தொடுமா? - கத்தார் அதிர்ச்சி தகவல்

ஏழாவது நாளாக ஈரானில் தொடர்ந்து கொண்டிருக்கிறது போர். இந்தப் போர் முடியும் என்பதற்கான அறிகுறி கண்ணுக்கு எட்டும் தூரம் வரை தெரியவில்லை. எண்ணெய் வளம் மிகுந்த ஈரானில் போர் நடந்து வருகிறது... அது முக்கிய வ... மேலும் பார்க்க

"இந்தியா எங்களது சந்தையை 'இப்படி' பிடிக்க முடியாது; சீனாவிடம் செய்த தவறு இனி இல்லை" - அமெரிக்கா

இந்தியா வந்திருக்கிறார் அமெரிக்காவின் வெளியுறவுத்துறை துணைச் செயலாளர் கிறிஸ்டோபர் லாண்டாவ். அவர் டெல்லியில் தான் கலந்துகொண்ட நிகழ்வில் பேசியுள்ளதாவது..."20 ஆண்டுகளுக்கு முன்பு, நாங்கள் சீனாவிடம் செய்த... மேலும் பார்க்க

`4,000 ஓட்டுக்காக கம்யூனிஸ்ட்டுக்கு தொகுதியை கொடுப்பதா?' - அறிவாலயத்தில் குமுறும் உடன்பிறப்புகள்

இன்றோடு விருப்ப மனுக்களை வாங்கி முடிக்கிறது அறிவாலயம். சீட்டுக்காக உடன்பிறப்புகள் முட்டி மோதிக் கொண்டிருக்கும் நிலையில், 'ஐயா நீங்க சீட்டை கட்சிக்காரன் யாருக்கு வேணா கொடுங்க, ஆனா தொகுதியை மட்டும் கம்ய... மேலும் பார்க்க

3 பேர்; 40 நாட்கள்; 4000 கி.மீ பயணம்; 234 தொகுதிகள் - பயணத்தை தொடங்கிய VIKATAN ELECTION EXPRESS

தமிழக சட்டமன்றத் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், கள நிலவரங்களை மக்களிடம் இருந்து நேரடியாக பெற்று், அதை உங்களிடம் சேர்க்க விகடனின் ‘The Imperfect Show’ குழுவினர் தயாராகிவிட்டனர். இதற்காக பிரத்யே... மேலும் பார்க்க