செய்திகள் :

தனுசு: `எதையும் சமாளிக்கும் தைரியம்; வீண் செலவுகள் வேண்டாம்!’ | 2026 வாக்கிய சனிப்பெயர்ச்சி பலன்கள்

post image
தனுசு ராசிக்கு அதிபதி குரு. தனுசு ஸ்திரமும் சரமும் சம பங்கில் கலந்த ராசி. இதை `உபய ராசி’ என்று ஜோதிடம் சொல்லும். புகழ் பாடி, காக்கா பிடித்து காரியம் சாதிப்பது இவர்களுக்குப் பிடிக்காது. அனுபவ அறிவால் வெற்றியை ஈட்டும் பண்பாளர்கள் இவர்கள்.
தனுசு - சனிப்பெயர்ச்சி பலன்கள் 2026

தனுசு ராசிக்காரர்களுக்கான 11 பலன்கள்:

1. உங்கள் ராசிக்கு, வாக்கிய பஞ்சாங்கப்படி 6.3.2026 முதல் 24.4.2028 வரை, சுகவீடான 4-ம் வீட்டில் அமர்கிறார் சனிபகவான். அர்த்த்ராஷ் டம சனி ஆயிற்றே எனச் சிலர் யோசிக்கலாம். சஞ்சலம் தேவையில்லை. எதையும் சமாளிக்கும் மனப்பக்குவத்தைப் பெறுவீர்கள்.

2. சனிபகவான் ஆட்சிபெற்று அமர்வதால், குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும். குடும்பத்தில் உங்கள் கை ஓங்கும். சிலர், சொந்த ஊரை விட்டு இடம்பெயர்வார்கள். அதேநேரம், பிள்ளைகளின் நடவடிக்கை யில் கூடுதல் கவனம் செலுத்துங்கள். இந்த ராசியைச் சேர்ந்த பெண்களுக்கு பணியில் முன்னேற்றம் உண்டு. புது டிசைனில் நகைகள் சேரும்.

3. எனினும் சனிபகவானின் நிலைப்படி, இந்தக் காலக்கட்டத்தில் சின்னச் சின்ன வேலைகளிலும் அலைச்சல் உண்டாகலாம். மற்றவர்களை நம்பி முக்கிய பொறுப்புகளை ஒப்படைக்கவேண்டாம். செலவு கள் அதிகரிக்கும். வீடு வாங்குவது, கட்டுவது கொஞ்சம் இழுபறியாகி முடியும். கட்டட அனுமதி பெறுவது அவசியம்.

4. எதன் பொருட்டும் அதிக வட்டிக்குக் கடன் வாங்கவேண்டாம். தாய்வழிச் சொத்துகளில் சிக்கல்கள் வரலாம். நீண்ட நாட்களாக எதிர்பார்த்துக் காத்திருந்த வெளிநாட்டு விசா இப்போது கிடைக்கும். இரவு நேரப் பயணங்களில் கவனம் தேவை.

சனி பகவான்

5. சனி பகவான் பூரட்டாதி சாரத்தில் செல்லும்போது - 6.3.2026 முதல் 2.4.2026 வரை உங்களுக்கும் அம்மாவுக்கும் உடல்நலனில் அக்கறை அவசியப்படும். அரசுக்குச் செலுத்த வேண்டிய வரிகளை முறையாகச் செலுத்திவிடுங்கள்.

6. எனினும், சனி பகவான் 2.4.2026 முதல் 14.4.2027 வரை உத்திரட்டா தியில் செல்லும் காலத்தில், பணவரவு, செல்வாக்கு உண்டு. புதிய சொத்து வாங்குவீர்கள். அரசு வேலைகள் உடனே முடியும்.

7. அவரே ரேவதியில் பயணிக்கும்போது, புது வேலை கிடைக்கும். சம்பளம் உயரும். கணவன் மனைவிக்கு இடையே மனக்காசப்புகள் விலகும். போட்டிகளில் வெற்றி பெறுவீர்கள்.

8. 15.7.2026 முதல் 30.11.2026 வரை மற்றும் 28.7.2027 முதல் 13.12.2027 வரை சனிபகவான் வக்ரத்தில் செல்வதால் மனக்குழப்பங்கள் இருக்கும். வீண் செலவுகளைக் கட்டுப்படுத்துங்கள். ஓரளவு பண வரவு உண்டு. எனினும், வீண் செலவுகளைக் கட்டுப்படுத்துங்கள்.

9. இந்தச் சனிப்பெயர்ச்சிக் காலத்தில் சனி பகவான், உங்கள் ராசியைப் பார்ப்பதால், அவ்வப்போது சோர்வு, அலைச்சல் வந்து போகும். அடிக்கடி கோபப்படுவீர்கள். எனினும் 6-ம் இடமும் சனிப் பார்வையைப் பெறுவதால் பணப்புழக்கம் அதிகரிக்கும். வருங்காலத்திற்காகச் சேமிப்பீர்கள்.

10.வியாபாரிகளே, போட்டிகள் அதிகரிக்கும். வாடிக்கையாளர் களைக் கனிவாக நடத்துங்கள். வெளிநாட்டுத் தொடர்புடைய நிறுவனங்கள் மூலம் விபரீத லாபம் உண்டாகும். கொடுக்கல் வாங்க லில் கறாராக இருங்கள். எலெக்ட்ரானிக்ஸ், கம்ப்யூட்டர், மூலிகை வகைகளால் அதிக ஆதாயம் அடைவீர்கள்.

11. உங்கள் ராசிக்கு 10-ம் இடமான கன்னியிலும் சனி பார்வை விழுகிறது. உத்தியோகத்தில் வேலைச்சுமை அதிகரிக்கும். புதுப் பொறுப்புகளும் உங்களை நம்பி தரப்படும். சிலர், வேறு நிறுவனத்திற்கு மாறுவீர்கள். உத்தியோகஸ்தர்களுக்குப் பதவி உயர்வு, சம்பள உயர்வு கிடைக்கும். கணினித் துறையினருக்குப் பார்வைக் கோளாறு, தசைப் பிடிப்பு வந்து நீங்கும். புதிய சலுகைகள் தேடி வரும்.

மீனம்: ஜென்மச் சனி என்ன செய்யும்? சிக்கலற்ற விஷயங்கள் இவைதான் | 2026 வாக்கிய சனிப்பெயர்ச்சி பலன்கள்

2026 வாக்கிய சனிப்பெயர்ச்சி பலன்கள்மீனம்மீன ராசிக்கு அதிபதி குரு. ஆன்மிக விஷயத்தில் நாட்டம், இரக்கம், சட்டதிட்டத்தில் மதிப்பு, நாகரிகமான வாழ்வு, இப்படித்தான் வாழவேண்டும் என்பதில் பிடிப்பு, சமுதாய முன்... மேலும் பார்க்க

கும்பம்: `விலகப்போகும் சனி... வாழ்க்கை மாறுமா?' | 2026 வாக்கிய சனிப்பெயர்ச்சி பலன்கள்

2026 வாக்கிய சனிப்பெயர்ச்சி பலன்கள்கும்பம்பொதுவாகவே, கும்ப ராசிக்கு உச்சம்பெற்ற சனி உயர்வுக்குக் காரணமாவார். நீசம் பெற்றால் செவ்வாயின் பலத்தால் உயர்வை எட்டவைப்பார். கட்டுக்கோப்பான உடல், சுகாதாரமான சூழ... மேலும் பார்க்க

மகரம் : `தொட்டது துலங்கும்; சொந்தவீடு யோகம் உண்டு!' | 2026 வாக்கிய சனிப்பெயர்ச்சி பலன்கள்

2026 வாக்கிய சனிப்பெயர்ச்சிமகரம்மகர ராசியின் அதிபதி சனி. உழைப்பால் ஈட்டிய பெருமைகள், செல்வங்கள் இவர்களின் வாழ்வை வளமாக்கும். இந்த ராசிக்காரர்கள், ஒரு வேலையை ஏற்றால் முடிக்கும் வரை விடமாட்டார்கள். பொறு... மேலும் பார்க்க

விருச்சிகம்: `பணப்பை நிரம்பும்; ஆனால் இந்த விஷயங்களில் கவனம்!’ | 2026 வாக்கிய சனிப்பெயர்ச்சி பலன்கள்

2026 வாக்கிய சனிப்பெயர்ச்சி பலன்கள்விருச்சிகம்இந்த ராசியின் அதிபதி செவ்வாய். இதில் பிறந்த அன்பர்களுக்கு, எண்ணம், செயலில் ஸ்திரத்தன்மை பளிச்சிடும். எந்த விஷயத்திலும் வெற்றியை இழக்க விரும்பமாட்டார்கள். ... மேலும் பார்க்க

துலாம்: `ராஜ யோகம் காத்திருக்கிறது; வாழ்க்கை மாறும்!' | 2026 வாக்கிய சனிப்பெயர்ச்சி பலன்கள்

2026 வாக்கிய சனிப்பெயர்ச்சி பலன்கள்துலாம்இந்த ராசியின் அடையாளம் தராசு. இந்த ராசியில் சனி உச்சனாக இருப்பார். சூரியன் நீசம் பெறுவார். மென்மையான அணுகு முறை, சுயமரியாதை, செல்வாக்கைக் காப்பதில் தனிக் கவனம்... மேலும் பார்க்க

கன்னி: கண்டகச் சனி - `பதற்றம் வேண்டாம், ஆனால் கவனம்' ஏன்? | 2026 வாக்கிய சனிப்பெயர்ச்சி பலன்கள்

2026 வாக்கிய சனிப்பெயர்ச்சி பலன்கள்கன்னிகன்னி - ராசிச் சக்கரத்தின் 6-வது ராசி. ராசிக்கு அதிபதி புதன். சனியும் சுக்கிரனும் இந்த ராசிக்காரர்களுக்கு நன்மை செய்வார்கள். இந்த ராசியில் பிறந்த நீங்கள், புத்த... மேலும் பார்க்க