செய்திகள் :

``தமிழக அரசில் 8 தலித் அமைச்சர்கள் இருந்தும் சேலம் அம்பேத்கர் சிலையைத் திறக்கவில்லை" - பா.ரஞ்சித்

post image

டெல்லியில் மாணவர்கள் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்தும், நீட் தேர்வை முழுவதுமாக ரத்து செய்யக்கோரியும், நீலம் பண்பாட்டு மையம் மற்றும் நீலம் மாணவர் இயக்கம் சார்பில் போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது.

சென்னை, எழும்பூரில் உள்ள ராஜரத்தினம் மைதானத்தில் நடைபெறும் இந்தப் போராட்டத்தில் இயக்குநர்கள் அமீர், வெற்றிமாறன், பா.ரஞ்சித், நடிகர்கள் மன்சூர் அலிகான், கலையரசன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

அதில் பேசிய இயக்குநர் பா.ரஞ்சித், ``நீட் தேர்வு வினாத்தாள் கசிவு மற்றும் முறைகேடுகளுக்கு எதிராக இந்தியா முழுவதும் மாணவர்கள் தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இந்தச் சூழலில், "நாம் எதுவுமே செய்யவில்லையா?" என்று இயக்குநர் வெற்றிமாறன் கேட்ட கேள்வி மற்றும் நடிகை ரேவதியின் ஆதங்கம் ஆகியவையே முக்கிய உந்துதலாக அமைந்தது.

ban neet protest - Neelam
ban neet protest - Neelam

'சிஜேபி' (CJB) அமைப்பும், அதன் போராட்ட வடிவமும் ஒரு புரட்சிகரமான நகர்வாகும். தொடக்கத்தில், அம்பேத்கர் படத்தையும் 'ஜெய் பீம்' முழக்கத்தையும் ஏந்திப் போராடிய அந்த இளைஞரைப் பார்க்கும்போது, சமூகத்தின் சாதியப் பார்வைகளால் அவர்களுக்கு ஏதேனும் ஆபத்து வந்துவிடுமோ என்ற பயம் இருந்தது.

ஆனால், சாதி, மத எல்லைகளைக் கடந்து இந்திய அளவிலான ஏராளமான இளைஞர்கள் இன்று அந்த அமைப்பின் பின்னால் திரண்டு போராடுவதைப் பார்க்கும்போது பெரும் நம்பிக்கை பிறக்கிறது. வாழ்க்கையில் முதல்முறையாக, இளைஞர்களின் எழுச்சியைக் கண்டு நானும் ஒரு 'இந்தியன்' என்ற உணர்வைப் பெறுகிறேன்.

இங்குள்ள கல்வி அமைப்பில் நிலவும் சமத்துவமின்மையை 'ஜெய் பீம்' என்னும் கோட்பாடே கேள்வி கேட்கிறது. இடஒதுக்கீடு மூலமாகத் தலித் மாணவர்கள் குறைந்த மதிப்பெண் பெற்று உள்ளே வருகிறார்கள் என்று காலம் காலமாகப் போலி குற்றச்சாட்டுகள் சுமத்தப்படுகின்றன. ஆனால், நீட் தேர்வில் வெறும் 120 மதிப்பெண்கள் மட்டுமே பெற்று, பண பலத்தால் பலர் மருத்துவக் கல்லூரிகளில் சேர்வதைக் கண்டு இங்கு யாரும் கேள்வி கேட்பதில்லை.

பொருளாதார ரீதியாகவும், வர்க்க ரீதியாகவும் நீட் தேர்வில் நிலவும் இந்த அநீதியையும் சமத்துவமின்மையையும் புரிந்து கொண்டு இளைஞர்கள் இப்போதுதான் அதற்கு எதிராகப் போராடத் தொடங்கியுள்ளனர்.

ban neet protest - Neelam
ban neet protest - Neelam

நீட் தேர்வை எதிர்க்கும் தமிழ்நாட்டில், அறவழியில் போராடும் மாணவர்களை காவல்துறையைக் கொண்டு ஒடுக்குவது தவறான அணுகுமுறையாகும். பாசிச பா.ஜ.க அரசு மாணவர்களை ஒடுக்குவதை எதிர்பார்க்கலாம். ஆனால் நீட்டை எதிர்க்கும் தமிழக அரசு மாணவர்களை அடியாள்களைப் போலக் காவல்துறையை வைத்து தாக்குவது ஏற்றுக்கொள்ள முடியாதது.

அதேபோல, தமிழக அரசில் 8 தலித் அமைச்சர்கள் இருந்தும், பழங்குடியின மற்றும் ஒடுக்கப்பட்ட மக்களின் கோரிக்கைகளுக்கோ அல்லது சேலத்தில் 6 ஆண்டுகளாகத் திறக்கப்படாமல் இருக்கும் அம்பேத்கர் சிலையைத் திறப்பதற்கோ எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. அரசு அதிகாரிகளின் சாதியக் காழ்ப்புணர்ச்சியும், ஓட்டு வங்கி அரசியலுக்காக ஆட்சியாளர்கள் செய்யும் சமரசங்களுமே இதற்கு முதன்மைக் காரணம்.

இன்றைய 'ஜெய் பீம்' முழக்கமும், மாணவர்களின் எழுச்சியும் இந்திய அளவில் ஒரு புதிய பாய்ச்சலை உருவாக்கியுள்ளன.

ban neet protest - Neelam
ban neet protest - Neelam

எனவே, தமிழக அரசு நீட் தேர்வுக்கு எதிராகப் போராடும் மாணவர்களை ஒடுக்காமல், அவர்கள் அறவழியில் போராடுவதற்கு மெரினா போன்ற இடங்களில் பாதுகாப்பான இடத்தை அமைத்துக் கொடுக்க வேண்டும்.

வெறும் அறிக்கைகளோடு நிறுத்திக் கொள்ளாமல், முதல்வரும் அரசும் மாணவர்களோடு களம் கண்டு நின்று போராடி, இந்த அநீதியான நீட் தேர்வை முற்றிலுமாக ஒழித்தெடுக்க வேண்டும் என்பதே பிரதான கோரிக்கையாகும்" என்றார்.

`ஆளுங்கட்சி ஆகிவிட்டோம்' தவெக கூட்டணியை உறுதி செய்த திருமா; பாமக-வுக்கு வைத்த செக்! - பின்னணி என்ன?

தவெக அமைச்சரவையில் அமைச்சர் வன்னி அரசு இடம்பெற்றிருந்தாலும் எந்தக் கூட்டணியில் விசிக இருக்கிறது என்பதை தெளிவாக கூறாமல் திருமாவளவன் குழப்பி வந்தார். 'திமுகவுடன் எங்களது நட்பு தொடர்கிறது' என்று திமுகவிற... மேலும் பார்க்க

மேகமலை: `துணை ராணுவப் படையை அனுப்ப நேரிடும்; முழுமையாக இடித்து அகற்றுங்கள்'- உச்ச நீதிமன்றம் அதிரடி

மேகமலை புலிகள் சரணாலயம் மற்றும் மாஞ்சோலையைச் சுற்றியுள்ள பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிகளில் உள்ள ஆக்கிரமிப்புகளையும், இலவம் பஞ்சு தோட்டங்களையும் முழுமையாக அப்புறப்படுத்த உச்ச நீதிமன்றம் மிகக் கடுமையான உத்... மேலும் பார்க்க

`முதலமைச்சரை மிஞ்சிய சூப்பர் பவரின் கையில் ஆட்சி இருக்கிறதா?'- திமுக கேள்வி

`முதலமைச்சரை மிஞ்சிய சூப்பர் பவரின் கையில் ஆட்சி இருக்கிறதா?' என திமுக கேள்வி எழுப்பியிருக்கிறது.இது தொடர்பாக வெளியாகியிருக்கும் அறிக்கையில், `நேற்றைய தினம் அதிகார ஆணவத்திமிரோடு, “திண்டுக்கல் மாவட்டம்... மேலும் பார்க்க

`மூன்று தமிழர்களைச் சுட்டுக் கொன்றுவிட்டு, ஆணவத்தோடு டி.கே.சிவக்குமார் பேசுவதா?' - சீமான் கண்டனம்

`கர்நாடக வனப்பகுதியில் மூன்று அப்பாவித்தமிழர்களை ஈவிரக்கமற்றுச் சுட்டுக்கொன்றுவிட்டு, எங்கள் மாநிலத்தின் விவகாரத்தில் தலையிடாது, உங்கள் வேலையைப் பாருங்கள் எனத் துளியும் குற்றவுணர்ச்சியோ, பொறுப்புணர்ச்... மேலும் பார்க்க

"அந்தத் தண்ணீரைக் குடிக்கிறாங்க, கோயிலுக்கு அபிஷேகம் பண்றாங்க" - கூவம் நதி குறித்து சௌமியா அன்புமணி

தமிழக சட்டப்பேரவையில் இன்று நிதிநிலை அறிக்கை, நீர்வளம், ஊரக வளர்ச்சி, சுற்றுலாத்துறை மானிய கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் சட்டமன்ற விவாதத்தின்போதுபேசிய பாமக எம்எல்ஏ சௌமியா அன்ப... மேலும் பார்க்க

"தவெக 10 சீட்டுக்கு மேல் ஜெயித்தால்..." - சவாலில் தோற்றதால் மீசையை மழித்த அதிமுக மாசெ

அ.தி‌.மு.க-வின் நீலகிரி மாவட்ட செயலாளராகத் தற்போது பதவி வகித்து வருகிறார் வழக்கறிஞர் பால‌. நந்தகுமார். மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவால் 2012-ம் ஆண்டு நீலகிரி மாவட்ட செயலாளர் பதவி வழங்கப்பட்டது. அ... மேலும் பார்க்க