செய்திகள் :

தமிழக காவல்துறையைச் சேர்ந்த 8 பேருக்கு மத்திய அரசின் சிறப்பு விருது அறிவிப்பு

post image

புதுதில்லி: தமிழக காவல்துறையைச் சேர்ந்த 8 பேர் உள்ள 463 பேருக்கு 2024 ஆம் ஆண்டிற்கான மத்திய உள்துறை அமைச்சகத்தின் 'திறன் பதக்க' விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2018 முதல் பல்வேறு மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் காவல் துறை, மத்திய பாதுகாப்பு அமைப்புகள், மத்திய,மாநில தடய அறிவியல், புலனாய்வு பிரிவு ஆகியவற்றில் சிறப்பு நடவடிக்கை, புலனாய்வு, நுண்ணறிவு, தடய அறிவியல் ஆகிய நான்கு பிரிவுகளில் சிறப்பாக பணியாற்றும் அதிகாரிகளுக்கு 'மத்திய உள்துறை அமைச்சகம் பதங்களை வழங்கி கௌரவித்து வருகிறது.

இந்து விருது சிறந்த பணியை அங்கீகரிப்பதற்கும், உயர் தொழில்முறை தரங்களை மேம்படுத்துவதற்கும், சம்பந்தப்பட்ட அலுவலர், அதிகாரிகளின் மன உறுதியை ஊக்குவிக்கும் வகையில் வழங்கப்படுகிறது. அதன்படி, ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 31 ஆம் தேதி, அதாவது சர்தார் வல்லபாய் படேலின் பிறந்த நாளன்று இந்த பதக்கம் அறிவிக்கப்பட்டு வருகிறது.

இதையும் படிக்க |இந்திய - சீன எல்லையில் தீபாவளி இனிப்புகள் பரிமாற்றம்!

இந்த நிலையில் 2024 ஆம் ஆண்டுக்கான இந்த விருது தமிழக காவல்துறையைச் சேர்ந்த 8 பேர் உள்பட பல்வேறு மாநிலங்களின் காவல்துறை, மத்திய ஆயுதக் காவல் படை (சிஏபிஎஃப்), மத்திய காவல் அமைப்பு (சிபிஓ) ஆகியவற்றின் 463 பேருக்கு விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஆண்டு வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பின்படி, தமிழக காவல்துறையைச் சேர்ந்த 8 பேர் உள்ள 463 பேருக்கு 2024 ஆம் ஆண்டிற்கான மத்திய உள்துறை அமைச்சகத்தின் 'திறன் பதக்க' விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக புலனாய்வுப் பிரிவில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள் வந்திதா பாண்டே, கே. மீனா,காவல் ஆய்வாளர்கள் எம். அம்பிகா, என். உதயகுமார், எஸ். பாலகிருஷ்ணன், ஏசிபி சி.கார்த்திகேயன், சி.நல்லசிவம் மற்றும் தடயஅறிவியல் பிரிவு துணை இயக்குநர் சுரேஷ் நந்தகோபால் என 8 பேர் 'மத்திய உள்துறை அமைச்சகத்தின் 'திறன் பதக்க' விருதை பெறுகின்றனர்.

காருக்குள் சிக்கிய 4 குழந்தைகள் மூச்சுத் திணறி பலி

காருக்குள் சிக்கிய 4 குழந்தைகள் மூச்சுத் திணறல் ஏற்பட்டு பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.இந்த சம்பவம் குஜராத் மாநிலம் அம்ரேலி மாவட்டத்தில் உள்ள ரந்தியா கிராமத்தில் சனிக்கி... மேலும் பார்க்க

அக்டோபர் மாதத்தில் 90.83 லட்சம் பேர் மெட்ரோ ரயிலில் பயணம்

சென்னை மெட்ரோ ரயிலில் அக்டோபர் மாதத்தில் 90.83 லட்சம் பேர் பயணித்துள்ளதாக மெட்ரோ ரயில் நிா்வாகம் தெரிவித்துள்ளது.இது தொடர்பாக சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:சென்னை மெட்ரோ ரய... மேலும் பார்க்க

அரைத்த மாவையே அரைக்கிறார் விஜய்: முத்தரசன்

விஜயின் கொள்கை என்பது அரைத்த மாவையே அரைப்பது போன்றதென்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில பொதுச் செயலாளர் முத்தரசன் பேட்டியளித்துள்ளார்.தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் நடைபெற்ற பல்வேறு நிகழ்ச்சிகளில் ... மேலும் பார்க்க

வாயு கசிவு: திருவொற்றியூர் தனியார் பள்ளி தற்காலிகமாக மூடல்!

திருவொற்றியூரில் உள்ள தனியார் பள்ளியில் இன்று மீண்டும் வாயு கசிவு ஏற்பட்டதால், தற்காலிகமாக பள்ளி மூடப்பட்டது.சென்னை திருவொற்றியூர் கிராமத்து தெருவில் தனியார் பள்ளியொன்று இயங்கி வருகிறது. இதில் ஆயிரத்த... மேலும் பார்க்க

அரசியலுக்கு தலைநகரம் மதுரை தான்: பொன் ராதாகிருஷ்ணன்

மதுரை: நடிகா் விஜய் தனது கட்சியின் மாநாட்டில் தவெக ஆட்சி அமைத்தால் மதுரையில் கிளை தலைமைச்செயலகம் அமைக்கப்படும் என்ற அறிவிப்பை வரவேற்றுள்ள பாஜக முன்னாள் மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன், அரசியலுக்கு... மேலும் பார்க்க

கேரள ரயில் விபத்தில் தூய்மைப் பணியாளர்கள் பலி: முதல்வர் நிவாரணம் அறிவிப்பு

சென்னை: கேரளா மாநிலம், ஷோரனூர் அருகே சனிக்கிழமை பிற்பகல் கேரளா எக்ஸ்பிரஸ் ரயில் எதிர்பாராதவிதமாக மோதிய விபத்தில் ரயில் பாதையை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டிருந்த 4 தூய்மைப் பணியாளர்கள் பலியான குடும... மேலும் பார்க்க