செய்திகள் :

தமிழக தலைமைச் செயலாளர் சாய்குமாருக்கு 6 மாதங்கள் பணி நீட்டிப்பு: மத்திய அரசு ஒப்புதல்!

post image

தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளராக உள்ள சாய்குமார் ஐஏஎஸ்-க்கு மேலும் 6 மாதங்கள் பணி நீட்டிப்பு வழங்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

தமிழ்நாடு அரசின் பரிந்துரையைத் தொடர்ந்து, அகில இந்திய சேவைகள் தொடர்பான விதிகளின் அடிப்படையில் மத்திய அரசு இந்த அனுமதியை வழங்கியுள்ளது. இதன்மூலம், வரும் ஆகஸ்ட் 31-ஆம் தேதி ஓய்வு பெறவிருந்த டாக்டர் சாய்குமார், மேலும் ஆறு மாதங்கள் தலைமைச் செயலாளராக தொடர உள்ளார்.

டாக்டர் சாய்குமார் கடந்த ஏப்ரல் 8-ஆம் தேதி தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளராக பொறுப்பேற்றார். அப்போது தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருந்ததால், இந்திய தேர்தல் ஆணையத்தின் ஒப்புதலுடன் அவர் அந்தப் பொறுப்புக்கு நியமிக்கப்பட்டார்.

சாய்குமார் ஐ.ஏ.எஸ்

2026 சட்டப்பேரவைத் தேர்தலுக்குப் பிறகு முதல்வர் ஜோசப் விஜய் தலைமையிலான அரசு பதவியேற்றதைத் தொடர்ந்து பல்வேறு துறைகளில் மூத்த ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டபோதும், தலைமைச் செயலாளராக இருந்த சாய்குமார் தொடர்ந்து பதவியில் நீடித்தார்.

புதிய அரசு அமைந்தபின் தலைமைச் செயலாளரை மாற்றுவது வழக்கமான நிர்வாக மாற்றமாக கருதப்பட்டாலும், இந்த முறை அந்த நடைமுறை பின்பற்றப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ்நாடு அரசு கடிதம் எழுதி கோரிக்கை வைத்ததன் அடிப்படையில் அதை பரிசீலித்த மத்திய அரசு, 6 மாத பணி நீட்டிப்புக்கு தற்போது ஒப்புதல் வழங்கியுள்ளது.

தலைமைச் செயலகம்
தலைமைச் செயலகம்

டாக்டர் சாய்குமார், தமிழ்நாட்டின் மூத்த ஐ.ஏ.எஸ் அதிகாரிகளில் ஒருவராகக் கருதப்படுகிறார். மதுரை, தர்மபுரி, விருதுநகர் உள்ளிட்ட மாவட்டங்களில் மாவட்ட ஆட்சியராகப் பணியாற்றியுள்ள அவர், தமிழ்நாடு மின்சார வாரியம், தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகம், நகராட்சி நிர்வாக ஆணையம், பொதுப்பணித்துறை உள்ளிட்ட முக்கிய துறைகளில் பல்வேறு உயர் பதவிகளை வகித்துள்ளார். மேலும், அதிமுக ஆட்சிக் காலத்தில் அப்போதைய முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமியின் முதன்மைச் செயலாளராகவும் பணியாற்றியுள்ளார்.

கரூர் மதியழகனுக்கு வாரியத் தலைவர் பதவி? - விருப்பப்பட்டு வழங்கும் முதல்வர் விஜய்?

தவெகவின் கரூர் மத்திய மாவட்டச் செயலாளரான மதியழகனுக்கு முக்கியமான வாரியம் ஒன்றின் தலைவர் பதவி கொடுக்கப்படவிருக்கிறதாம். முதல்வர் விஜய்யே தனிப்பட்ட முறையில் விருப்பப்பட்டு மதியழகனின் பெயரை டிக் அடித்திர... மேலும் பார்க்க

பழனி முருகன் கோயில் நில மோசடி; பத்திரப்பதிவை ரத்து செய்து உயர் நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவு!

பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி கோயில் செயல் அலுவலர் மதுரை அமர்வில் மனுவினைத் தாக்கல் செய்திருந்தார். அதில், `பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமிகள் மடத்திற்குச் சொந்தமானதாகக் கூறப்படும் இடத்தின் ஆவ... மேலும் பார்க்க

ஓசூரிலேயே நிறுத்தப்படும் பெங்களூரு பேருந்துகள்; மேகதாது பிரச்னை எதிரொலி: இரு மாநில எல்லையில் பதற்றம்

மேகதாது பகுதியில் காவிரியாற்றின் குறுக்கே புதிய அணை கட்ட, கர்நாடக அரசு தீவிர முயற்சி செய்து வருகிறது. ஏற்கெனவே காவிரியில் தமிழகத்திற்கான உரிய தண்ணீரை திறந்து விடாமல் பிரச்னை நீடித்து வரும் நிலையில், க... மேலும் பார்க்க

காமராசரின் 124-வது பிறந்தநாள் விழா: முட்புதர் மண்டிக்கிடக்கும் மணிமுத்தாறு அணை நினைவுத்தூண்

மழைநீர், வீணாகக் கடலில் கலப்பதைத் தடுத்து விவசாயத்திற்கு பயன்படும் வகையில் பல அணைகள் கட்டப்பட்டது, தமிழகத்தை ஆட்சி செய்த மறைந்த முன்னாள் முதல்வர் கர்மவீரர் காமராசர் ஆட்சி காலத்தில்தான். அவர் ஆட்சி செய... மேலும் பார்க்க

"மோடி சொன்ன ஒரு வார்த்தை; Ironman இலக்கை நோக்கி என்னைத் திருப்பியது!" - அண்ணாமலை

நாளைய பத்திரிகையாளர்களை உருவாக்கும் விகடன் குழுமத்தின் கனவுத் திட்டமான 'மாணவப் பத்திரிகையாளர்' திட்டத்தின் கூட்டுப் பயிற்சி முகாம், ஜூலை 11 மற்றும் 12-ம் தேதிகளில் சென்னையில் உற்சாகமாக நடைபெற்றது.மாநி... மேலும் பார்க்க