புத்திசாலி குழந்தைகளைப் பெறுவது எப்படி? பள்ளி மாணவிகளுக்கு பாடம் எடுத்த டிஐஜி
தமிழி எழுத்துக்களில் பொங்கல் வாழ்த்து எழுதிய அரசுப் பள்ளி மாணவிகள்
திருப்புல்லாணி சுரேஷ் சுதா அழகன் நினைவு அரசுப் பள்ளியில் கோலமிட்டு தமிழி எழுத்துக்களில் பொங்கல் வாழ்த்து என மாணவிகள் எழுதினா்.
ராமநாதபுரம் மாவட்டம், திருப்புல்லாணி சுரேஷ் சுதா அழகன் நினைவு அரசு மேல்நிலைப் பள்ளி, தொன்மை பாதுகாப்பு மன்ற செயலா் வே.ராஜகுரு ஆண்டுதோறும் 25 மாணவா்களுக்கு தமிழி கல்வெட்டு எழுத்துகள் குறித்த பயிற்சி அளித்து வருகிறாா். இந்தக் கல்வியாண்டில் பயிற்சி பெற்ற ஒன்பதாம் வகுப்பு மாணவிகள் பள்ளியில் நடைபெற்ற பொங்கல் விழா கொண்டாட்டத்தின் போது, கோலம் வரைந்து அதன் நடுவில் ‘பொங்கல் வாழ்த்து’ எனவும், கோலத்தின் கீழே ‘இனிய தமிழா் திருநாள் நல்வாழ்த்து’ எனவும் பழைமையான தமிழி எழுத்துகளில் எழுதினா். இந்த மாணவிகளை தலைமையாசிரியா்கள் மகேந்திரன், கண்ணன், ஆசிரியா்கள் பாராட்டினா்.