செய்திகள் :

``தமிழ்நாடு அரசை சீராக நடத்திடும் முதல்வர் ஸ்டாலினுக்கு நன்றி'' - நடிகர் நாசர் வெளியிட்ட வீடியோ

post image

தமிழ் சினிமாவில் நடிகரும் சிறந்த ஓவியருமான சிவக்குமார், பல வெற்றிப்படங்களை கொடுத்துள்ளார். தமிழ் சினிமாவில் 1965-ம் ஆண்டு வெளியான 'காக்கும் கரங்கள்’ என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகர் சிவக்குமார்.

இவர் கடைசியாக 2001-ல் வெளியான அஜித், ஜோதிகாவின் ’பூவெல்லாம் உன் வாசம்’ படத்தில் நடித்திருந்தார். சில சீரியல்களிலும் நடித்திருக்கிறார். தற்போது நடிப்பை நிறுத்திவிட்டு, பல கல்லூரி நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு சொற்பொழிவாற்றி வருகிறார்.

நடிகர் சிவகுமார்
நடிகர் சிவகுமார்

இந்நிலையில், தமிழ்நாடு இசை மற்றும் கவின் பல்கலைக் கழகம் சார்பில் நடிகர் சிவகுமார், ஓவியர் சந்துரு ஆகியோருக்கு மதிப்புமிக்க டாக்டர் பட்டம் வழங்கப்பட்டுள்ளது. சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் முதல்வர் ஸ்டாலின் கலந்துகொண்டு இந்த பட்டத்தை வழங்கினார்.

அதைத் தொடர்ந்து பலரும் நடிகர் சிவக்குமாருக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துவருகின்றனர்.

அதன் தொடர்ச்சியாக தென்னந்திய நடிகர் சங்கத் தலைவரும், நடிகருமான நாசர் சமூக ஊடகப் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டிருக்கிறார். அதில், ``அன்பும், அரணும், அனுபவமும், அறிவும், சொல்லும் செயலும், கனிவும் கற்பித்தலுமாய் திகழும் எங்கள் அண்ணன் வழிகாட்டி பாசமிகு திரு சிவகுமார் அவர்கள் இன்று மதிப்புறு முனைவர் பட்டம் பெற்றமைக்கு தென்னிந்திய நடிகர் சங்கம் மட்டுமல்ல, ஒட்டுமொத்த தமிழ் சமுதாயமே வாநிறை வாழ்த்துகளை தெரிவிக்கிறது.

 நாசர்
நாசர்

இப்பெருமையை சூட்டியதற்கு தமிழ்நாடு ஜெ.ஜெயலலிதா இசை மற்றும் கவின்கலை பல்கலை கழகத்திற்கும், தன் பொற்கரங்களால் வழங்கிய தமிழ்நாடு அரசை சீராக நடத்திடும் மாண்புமிகு முதல்வர் ஸ்டாலின் அவர்களுக்கும் தென்னிந்திய நடிகர் சங்கம் தங்கள் பன்னூறு நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறது." எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

கொம்பு சீவி: `13 வருடத்தில் நிறையப் படங்களில் நடித்திருக்கலாம், ஆனால் என் தம்பி!' - விஜய பிராபகரன்

பொன் ராம் இயக்கத்தில், சண்முக பாண்டியன் நடிப்பில் வெளியாகயிருக்கும் திரைப்படம் ‘கொம்பு சீவி’. இதில் சரத்குமார் முக்கிய கதாபாத்திரத்திலும் புதுமுக நடிகை தார்னிகா நாயகியாகவும் நடித்திருக்கின்றனர். மேலும... மேலும் பார்க்க

படையப்பா: ``அப்பாவோட பேட்டியை நான் தான் இயக்குனேன், அதுவே.!'' - சௌந்தர்யா ரஜினிகாந்த் நெகிழ்ச்சி

ரஜினியின் 75-வது பிறந்தநாளை முன்னிட்டு டிசம்பர் 12ஆம் தேதி 'படையப்பா' திரைப்படம் ரீ-ரிலீஸ் செய்யப்பட்டது.ரீ-ரிலீஸிலும் இப்படத்திற்கு பார்வையாளர்களிடமிருந்து நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.இந்நிலையில்... மேலும் பார்க்க

Ajith: `அஜித்தை வைத்து ரேஸிங் படமா?' - மலேசியாவில் சிறுத்தை சிவா சொன்ன பதில்!

நடிகர் அஜித் குமார் தற்போது மலேசியாவில் நடைபெற்று வருகிற ஆசியா அளவிலான கார் பந்தயமான ஏசியன் லீ மேன் சீரிஸில் அவரது அஜித்குமார் ரேஸிங் அணியும் இந்தியாவின் தலைசிறந்த கார் ரேஸரான நரைன் கார்த்திகேயனுடன் இ... மேலும் பார்க்க

`விஜய் அண்ணன்... விஜய் அண்ணன்தான்; எஸ்.கே தம்பி...' - நடிகர் சூரி

வெற்றிமாறனின் `விடுதலை' படத்தில் கதை நாயகனாகச் சூரிக்குக் கிடைத்த வரவேற்பை அடுத்து, `கொட்டுக்காளி', `கருடன்', 'மாமன்' எனத் தொடர்ந்து ஹிட் கொடுத்தார் நடிகர் சூரி. இப்போது மதிமாறன் புகழேந்தி இயக்கத்தில்... மேலும் பார்க்க