செய்திகள் :

தமிழ்நாடு `டு' மேற்கு வங்கம்; எக்ஸிட் போல் குறித்து மல்லிகார்ஜுன கார்கே சொன்னது என்ன?

post image

புதுச்சேரி, கேரளா, மற்றும் அஸ்ஸாம் ஆகிய மூன்று மாநில சட்டமன்றத் தேர்தல்கள் கடந்த 9ஆம் தேதி ஒரே கட்டமாகவும், தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் கடந்த 23ஆம் தேதி ஒரே கட்டமாகவும் நடந்துமுடிந்தது.

இரண்டு கட்டங்களாக வாக்குப் பதிவு நடக்கும் மேற்குவங்கம் மாநிலத்திற்கு முதற்கட்ட வாக்குப் பதிவு கடந்த 23ஆம் தேதி முடிவடைந்த நிலையில், இரண்டாம் கட்ட வாக்குப் பதிவு நேற்று (ஏப்ரல் 29) நடைபெற்றது.

இந்த ஐந்து மாநிலங்களுக்கான தேர்தல் முடிவுகள் மே 4 ஆம் தேதி வெளியாக இருக்கிறது. இதனிடையே இந்தியத் தேர்தல் ஆணையம், ஐந்து மாநிலத் தேர்தலும் நிறைவடைந்த பிறகே தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள் வெளியிட வேண்டும் என்ற கட்டுப்பாடுகளை விதித்திருந்தது.

Tamilnadu - exit poll
Tamilnadu - exit poll

அதன்படி நேற்று மாலை தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள் வெளியாகி இருந்தன. வெளியான கருத்துக் கணிப்புகள் குறித்து அரசியல் தலைவர்கள் கருத்து தெரிவித்துவரும் நிலையில், காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே கருத்துக் கணிப்புகள் குறித்து செய்தியாளர்களிடம் பேசியிருக்கிறார்.

கருத்துக் கணிப்புகள் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், "சில இடங்களில் முடிவுகள் தெளிவாகத் தென்படுகின்றன. சில இடங்களில் முடிவுகள் சற்று குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளன. ஆனால், என் கணிப்பின்படி, தமிழ்நாட்டில் திமுக-விற்குத் தெளிவான பெரும்பான்மை கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது. இது குறித்து நான் திமுக தலைமையுடனும் பேசினேன்.

அதே போன்று கேரளத்தில் காங்கிரஸ் கூட்டணி பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும் என்று எங்கள் களத்தில் உள்ள கட்சி தலைவர்களும், நிர்வாகிகளும் நம்பிக்கையுடன் இருக்கின்றனர்.

அஸ்ஸாம் மாநிலத்தில் நாங்கள் எதிர்பார்த்த எண்ணிக்கையிலான இடங்கள் கிடைக்காது என்று கருத்துக் கணிப்புகள் கூறுகின்றன. ஆனால், அவர்கள் சுட்டிக்காட்டும் எண்ணிக்கையைவிட அதிகமான இடங்கள் எங்களுக்குக் கிடைக்கும் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது.

5 states Exit Poll
5 states Exit Poll

அதேபோல புதுச்சேரியைப் பொறுத்தவரை, பாஜக மற்றும் என்.ஆர். காங்கிரஸுக்கு எதிராக ஒரு போராட்டத்தை முன்னெடுத்துள்ளோம். அங்கும் எங்களுடைய வெற்றிக்கான எதிர்பார்ப்புகள் உள்ளன. போட்டி மிகவும் கடுமையாக உள்ளது. இன்னும் ஓரிரு நாள்கள் பொறுத்திருந்து முடிவுகளைப் பார்க்கலாம்" என்றிருக்கிறார்.

தொடர்ந்து மேற்கு வங்கம் குறித்து கருத்து தெரிவித்த கார்கே, "எங்கள் கட்சி மேற்கு வங்கத்தில் தனது அடித்தளத்தை வலுப்படுத்துவதில் கவனம் செலுத்தி வருகிறது. எங்கள் பலத்தை அங்கு அதிகரித்திருப்பதாக நாங்கள் நம்புகிறோம்" என்று தெரிவித்திருக்கிறார்.

Assam: சிக்கலில் காங்கிரஸ் தலைவர் பவன் கேரா; முன் ஜாமீன் மறுக்கும் நீதிமன்றம்; என்ன பிரச்னை?

இந்த மாதத் தொடக்கத்தில் அஸ்ஸாம் மாநிலத்தின் முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா மீதும், அவரின் மனைவி ரினிகி புயன் சர்மா மீதும் காங்கிரஸ் கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்தது. செய்தியாளர் சந்திப்பில் பேசிய ... மேலும் பார்க்க

`பிரசவ சிகிச்சை அலட்சியம்; நெஞ்சில் அமர்ந்துகொண்டு காலால் அழுத்தம் கொடுத்தனர்'- இளைஞர் குற்றச்சாட்டு

மகாராஷ்டிரா மாநிலம், நாக்பூரில் உள்ள அரசு மருத்துவமனையில் தீப்லதா என்ற பெண் பிரசவத்திற்காகச் சேர்க்கப்பட்டு இருந்தார். அவருக்கு பிரசவ வலி வந்த பிறகும் டாக்டர்கள் அவருக்குப் பிரசவம் பார்க்காமல் 9 மணி ந... மேலும் பார்க்க

`திமுக வரக்கூடாது' - கலக்கத்தில் தவாக டு எதிர்ப்பு காட்டிய நிர்வாகி; அச்சத்தில் அமைச்சர்! | கழுகார்

கலக்கத்தில் த.வா.க"தி.மு.க ஆட்சிக்கு வரக்கூடாது!"தி.மு.க ஆட்சிக்கு வந்துவிடக்கூடாது என, அ.தி.மு.க-வினரைவிட அதிகமாக வேல்முருகனின் தமிழக வாழ்வுரிமைக் கட்சியினர்தான் விரும்புகிறார்களாம். கடைசி நேரத்தில் ... மேலும் பார்க்க

’கட்சி போடுகிற பிச்சை' - துரை வைகோவின் வார்த்தையால் கூண்டோடு வெளியேறிய ஈரோடு நிர்வாகிகள்

ஈரோடு மாவட்டம் அவல் பூந்துறை பேரூராட்சியின் துணைத் தலைவரும் மதிமுகவின் மாநில இளைஞரணி துணைத் தலைவருமான லோ.சோமசுந்தரம் தனது கட்சிப் பொறுப்பை ராஜினாமா செய்திருக்கிறார்.’பதவி, பொறுப்பு என்பதெல்லாம் கட்சி ... மேலும் பார்க்க

திருச்செந்தூர் ட்ரெண்ட்: `கையில் வேலுடன் தரிசனம் செய்த தி.மு.க அமைச்சர்கள்!'

முருகனின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை புரிந்து வருகின்றனர். தற்போது பள்ளி கோடை விடுமுறையை முன்னிட்டு, த... மேலும் பார்க்க

'எங்கும் ட்ரம்ப்; எதிலும் ட்ரம்ப்' அமெரிக்க டாலர், தங்க காசு, பாஸ்போர்ட் - அனைத்திலும் ட்ரம்ப்?

அமெரிக்கா முதல் உலக நாடுகள் வரை அனைத்து இடங்களிலும் நிறைந்திருக்க வேண்டும் என்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் நினைக்கிறார் போலும். வரி.. போர் என அவ்வப்போது உலக நாடுகளில் தாக்கம் ஏற்படுத்தும் ட்ரம்ப், உள்நா... மேலும் பார்க்க