செய்திகள் :

தமிழ்நாட்டில் குறைந்த GST வசூல் - இதற்கு மக்களின் நுகர்வு தான் முக்கிய காரணமா?

post image

மத்திய அரசு ஜி.எஸ்.டி வசூல் அறிக்கையை வெளியிட்டுள்ளது.

இந்த அறிக்கையில் மாநில ஜி.எஸ்.டி வசூல் குறித்துத் தரவுகள் வெளியாகி உள்ளன.

அதன்படி, 2026-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் மற்றும் 2025-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தை ஒப்பிடுகையில், தமிழ்நாட்டில் ஜி.எஸ்.டி வசூல் 1 சதவிகிதம் குறைந்துள்ளது.

தமிழ்நாட்டின் பக்கத்து மாநிலங்களான கேரளாவும், கர்நாடகாவும் 13 சதவிகிதம் உயர்வாக ஜி.எஸ்.டி வசூல் செய்திருக்கின்றன. ஆந்திரப் பிரதேசத்தின் ஜி.எஸ்.டி வசூல் 7 சதவிகிதம் குறைந்துள்ளது.

‘தமிழ்நாட்டில் ஜி.எஸ்.டி வசூல் 1 சதவிகிதமாகக் குறைந்துள்ளது’ தற்போது பேசுபொருளாகி உள்ளது.

பங்குச்சந்தை நிபுணர் ரெஜி தாமஸ்
பங்குச்சந்தை நிபுணர் ரெஜி தாமஸ்
‘ஏன் இந்தக் குறைவு?’ என்கிற கேள்வியைப் பங்குச்சந்தை நிபுணர் ரெஜி தாமஸிடம் கேட்டோம்.

“ஜி.எஸ்.டி வசூல் என்பது மக்களின் நுகர்வு மூலம் கிடைப்பதாகும். அதாவது மக்கள் ஏதேனும் ஒரு பொருளை வாங்கும்போது, அதில் ஜி.எஸ்.டி வசூலிக்கப்படும்.

இதன் மூலம் அரசிற்கு வருவாய் வரும். இப்போதைக்குத் தமிழ்நாட்டின் ஜி.எஸ்.டி எதனால் குறைந்திருக்கிறது என்கிற தெளிவான அறிக்கை எதுவும் இல்லை.

இதனால், பொதுவாகப் பார்க்கும்போது, கடந்த மாதம், மக்களின் நுகர்வு குறைவாக இருந்திருக்கலாம்.

நுகர்வு என்பது கடைக்குச் சென்று மளிகைப் பொருள்களை வாங்குவது... துணிகள் வாங்குவது மட்டுமல்ல. ரியல் எஸ்டேட் வாங்குவது போன்றவையும் ஆகும்.

சின்னச் சின்னப் பொருள்களை விட, ரியல் எஸ்டேட் மாதிரியான பெரிய விஷயங்களுக்குச் செலவு செய்யும்போது, ஜி.எஸ்.டி வசூல் இன்னும் அதிகமாகும். இது தற்போது குறைந்திருக்கலாம்.

மக்களின் நுகர்வு குறைவாக இருக்கிறது என்பதற்கு இன்னொரு சான்று, தற்போது இந்தியாவிலேயே அதிக தங்க நகைக்கடன் வாங்கும் டாப் மாநிலங்களில் தமிழ்நாடும் ஒன்று.

மத்திய அரசு தரவுகள்
மத்திய அரசு தரவுகள்

மக்களிடம் பணப்புழக்கம் இல்லாமல் போனதால்தான், மக்கள் நகைக்கடன் என்கிற ஆப்ஷனைத் தேர்ந்தெடுத்திருக்கிறார்கள் என்பதைப் புரிந்துகொள்ள முடிகிறது.

ஜி.எஸ்.டி வசூல் 1 சதவிகிதக் குறைவு என்பது பெரிதாகக் கவலைப்படுவதற்குரியது அல்ல. ஆனால், கவனிக்க வேண்டும்.

காரணம், 1 சதவிகிதம் என்பது மிகவும் குறைந்த எண்ணிக்கையே. இது பெருமளவில் எந்தவொரு பாதிப்பையும் பெரிதாக இப்போதைக்குத் தராது.

ஆனால், இது தொடர்ந்தால், மாநிலத்தில் வருவாய் பெருமளவு அடிப்படும்” என்று விளக்கினார்.

மணல் கடத்தலில் ரூ.1000 கோடி ஊழல்? - மராத்தா இட ஒதுக்கீடு போராட்டக்காரர் மனோஜ் ஜராங்கே மீது புகார்

மகாராஷ்டிராவில் மராத்தா இட ஒதுக்கீடு கோரி போராட்டம் நடத்தி வருபவர் மனோஜ் ஜராங்கே பாட்டீல். ஏற்கனவே பல முறை இதற்காக உண்ணாவிரதம் இருந்துள்ளார். தற்போது மீண்டும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். தற்போது மனோ... மேலும் பார்க்க

"தியாகி இமானுவேல் சேகரன், சமூக நீதியை நிலைநாட்டுவதற்காக தன் உயிரைத் தந்தவர்" - குடியரசு துணைத்தலைவர்

"தியாகி இமானுவேல் சேகரனைப் போன்ற தேசிய உள்ளம் கொண்ட மகத்தான மனிதர்களைப் போற்றுவது இந்தத் தேசத்திற்கே பெருமை" என்று குடியரசு துணைத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.இமானுவேல் சேகரன் நினைவிடம்வி... மேலும் பார்க்க

“சுயநலத்தை மறுத்து நாட்டின் நலனைப் பார்த்தால் தடை?” - BRICS-ல் ட்ரம்ப் மீது புதின் மறைமுகத் தாக்கு!

டெல்லியில் நடக்கும் பிரிக்ஸ் மாநாட்டிற்காக இந்தியாவிற்கு வந்திருக்கிறார் ரஷ்ய அதிபர் புதின். இந்தியப் பிரதமர் மோடி உடனான தனிப்பட்ட சந்திப்பிற்குப் பிறகு, பிரிக்ஸ் வணிக மன்றத்தின் தலைவர்கள் அமர்வில் ப... மேலும் பார்க்க

மேற்கு வங்கம் அசைவ உணவு சர்ச்சை: கோயிலில் மீன் வறுவல் சாப்பிட்ட முதல்வர்; என்ன சொல்கிறது பாஜக?

நாட்டின் பிற பகுதிகளில், கோவிலில் அசைவ உணவு உண்பது அனுமதிக்கப்படாத ஒன்றாக இருக்கிறது. ஆனால் தமிழகத்தில் சில கோயில்களில் அசைவ உணவு போடப்படுகிறது. கோயில்களில் அசைவ உணவுக்கு இருக்கும் நடைமுறையை மாற்றும் ... மேலும் பார்க்க

BRICS: "ஒரு நாட்டின் பொருளாதாரப் பாதுகாப்பும், பிராந்தியப் பாதுகாப்பும் தனித்தனியல்ல" - ஈரான் அதிபர்

டெல்லியில் பிரிக்ஸ் உச்சிமாநாடு நடைபெற்று வருகிறது. இந்த மாநாட்டில் கலந்துகொள்ளப் பல்வேறு உலகத் தலைவர்கள் இந்தியாவிற்கு வந்திருக்கிறார்கள். அதில் ஈரான் அதிபர் மசூத் பெசெஷ்கியானும் ஒருவர். இன்று மாநாட்... மேலும் பார்க்க

"பிரிக்ஸ் தொழில்முறைக் கவுன்சிலிடம் எனக்கு 'மூன்று' வேண்டுகோள்கள்!" - BRICS மாநாட்டில் மோடி பேச்சு

தற்போது டெல்லியில் பிரிக்ஸ் உச்சிமாநாடு நடைபெற்று வருகிறது. இந்த மாநாட்டில் பல்வேறு உலகத் தலைவர்கள் கலந்து கொண்டிருக்கின்றனர். இந்த ஆண்டு பிரிக்ஸ் தலைமை சுழற்சி முறையில் இந்தியாவிற்கு வந்துள்ளதால், இந... மேலும் பார்க்க