செய்திகள் :

தருமபுரி: பெற்ற குழந்தையை குப்பையில் வீசிய கல்லூரி மாணவி; விசாரணையில் வெளியான அதிர்ச்சித் தகவல்

post image

பிறந்து சிலமணி நேரமே ஆன பெண் சிசுவை குப்பையில் வீசிச்சென்ற கல்லூரி மாணவியின் செயல், தருமபுரியில் அதிர்ச்சி ஏற்படுத்திய நிலையில் தற்போது அந்த மாணவி மீது வழக்குப் பதிவு செய்து காவல்துறை விசாரித்து வருகிறது.

குழந்தை
குழந்தை

தருமபுரி மாவட்டம் நல்லம்பள்ளி அருகே பாகலஹள்ளியில் நேற்று முன் தினம் பிறந்து சில மணி நேரமே ஆன பெண் சிசுவை யாரோ வீசிச்செல்ல இதை அப்பகுதியிலுள்ள மக்கள் பார்த்து சிசுவை மீட்டு பாளையம்பத்தூர் அரசு ஆரம்ப சுகாதர நிலையத்தில் ஒப்படைத்தனர்.

மருத்துவர்களின் முதலுதவி சிகிச்சைக்குப்பின் அந்தச் சிசுவை தொட்டில் குழந்தைகள் மையத்தில் ஒப்படைத்தனர். பின்பு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவரின் புகாரின் அடிப்படையில் தொப்பூர் காவல்துறையினர் விசாரணை செய்தனர்.

குற்றம்

விசாரணையில் திருமணம் ஆகாத கல்லூரி மாணவி ஒருவர் கர்ப்பமான நிலையில் குழந்தையைப் பெற்று யாருக்கும் தெரியாமல் வீசிச்சென்றது தெரிய வந்தது.

இதைத் தொடர்ந்து அந்தக் கல்லூரி மாணவி மீது வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்தச் சம்பவம் அப்பகுதி மக்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

`மானாமதுரை சம்பவம் சாதிய மோதலா?' - விளக்கமளித்த சிவகங்கை எஸ்.பி!

நெல்லை மாவட்டம், நாங்குநேரியில் நடந்த கொடூரத்தின் ஈரம் இன்னும் காயவில்லை. அதற்குள், அதே பாணியில் சிவகங்கை மாவட்டம், மானாமதுரை அருகே உள்ள இடைக்காட்டூர் என்ற கிராமத்தில் ஒரு பரபரப்பு சம்பவம் அரங்கேறியிர... மேலும் பார்க்க

Holi: பாட்டி மீது கலர் தண்ணீரை அடித்த பேரன்; கோபமான பாட்டியால் விபரீதத்தில் முடிந்த ஹோலி விளையாட்டு

ஹோலி பண்டிகையின்போது ஒருவர் மீது ஒருவர் கலர் பொடியைத் தூவுவது வழக்கம். அவ்வாறு கலர் பொடியைத் தூவுவது சில நேரங்களில் சண்டையில் முடிந்துவிடும். மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூர் அருகில் உள்ள கொராடி என்ற இடத்... மேலும் பார்க்க

சேலம்: "தாழ்த்தப்பட்ட உன்னைத் திருமணம் செய்ய முடியாது" - காதலனின் சாதி ஆணவத்தால் மாணவி தற்கொலை

சேலம் மாவட்டம் இளம்பிள்ளை பகுதியைச் சேர்ந்த சக்திவேலின் மகன் கார்த்திகேயன். மாற்று சாதியைச் சேர்ந்த கார்த்திகேயன், சேலம் மாவட்டத்தில் உள்ள தனியார் கல்லூரி ஒன்றில் மூன்றாம் ஆண்டு தமிழ் இலக்கியம் பயின்ற... மேலும் பார்க்க

விருதுநகர்: திருமணம் செய்வதாகக்கூறி ஆபாச வீடியோ - பெண்ணை மிரட்டி ரூ.80 லட்சம் பறித்த போலீஸ்

விருதுநகரில் பெண் ஒருவர் பியூட்டி பார்லர் மற்றும் துணி தைக்கும் கடை நடத்தி வந்தார். இவரது கணவர், கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். இந்த பெண்ணிடம், விருதுநகர் மாவட்டம், ஆமத்தூர் காவல்நிலையத... மேலும் பார்க்க

சென்னை: வீட்டு ஓனர் வீட்டில் கைவரிசை காட்டிய பெண் - போலி சாவி தயாரித்தது அம்பலம்

சென்னை, தண்டையார்பேட்டை, விநாயகபுரம் 10-வது தெருவில் வசித்து வருபவர் முருகன். இவரின் மனைவி பவானி. இவர் கடந்த 02.03.2026-ம் தேதி திருவொற்றியூர், வடிவுடையம்மன் கோயிலில் சாமி தரிசனம் செய்து விட்டு, இரவு ... மேலும் பார்க்க

ராணிப்பேட்டை: விஷவாயு தாக்கி மயங்கிய 4 தொழிலாளிகள் - பாதுகாப்பு உபகரணம் வழங்காமல் அலட்சியம்

ராணிப்பேட்டை சட்டமன்றத் தொகுதிக்குஉட்பட்ட வி.சி.மோட்டூர் பகுதியில் தோல் பதனிடும் தொழிற்சாலை கழிவுநீர் சுத்திகரிப்பு நிறுவனமான `ராணிடெக்’ செயல்பட்டு வருகிறது. இன்று காலை, ராணிடெக்கிற்குச் சொந்தமான கழிவ... மேலும் பார்க்க