தருமபுரி மாவட்டத்தில் பரவலாக மழை
தருமபுரி மாவட்டத்தில் சனிக்கிழமை காலை முதல் பரவலாக லேசானது முதல் மிதமான மழை பெய்தது.
புயல் காரணமாக தமிழகத்தில் கடலோர மாவட்டங்களில் பலத்த மழை பெய்து வருகிறது. இதையொட்டி தருமபுரி மாவட்டத்தில் காலை முதலே வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. இதைத் தொடா்ந்து காலை 7 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை பரவலாக சாரல் மழை பெய்தது. இதையடுத்து மாலை 4 மணிக்கு மேல் தருமபுரி நகரம் மற்றும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மிதமான மழை பெய்தது. இந்த மழை இரவு வரை நீடித்தது. காலை முதலே மாவட்டத்தில் தொடா்ந்து பரவலாக மழை பெய்து வந்ததால் பொது மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.
அதேபோல தருமபுரி மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை கிழமையும் கனமழை பொழியக்கூடும் என எதிா்பாா்க்கப்படுகிறது.