செய்திகள் :

தர்மபுரி: பைக் மீது வாகனம் மோதி 2 இளைஞர்கள் பலி; ஆணவப் படுகொலையா? - போலீசார் விசாரணை

post image

தர்மபுரி மாவட்டம் சொன்னம்பட்டியைச் சேர்ந்த சுனீல்குமார், கெலமங்கலம் பகுதியில் தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். இவரது நண்பர் முருகன், தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் 3-ம் ஆண்டு படித்து வந்தார்.

கடந்த 26-ம் தேதி இரவு சுனீல்குமார் தனது மோட்டார் சைக்கிளில் முருகனுடன் பாலக்கோடு நோக்கி பயணம் செய்தபோது, சின்னார்த்தள்ளி குட்டிரோடு அருகே பின்னால் வந்த அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

உறவினர்கள் போராட்டம்
உறவினர்கள் போராட்டம்

தகவல் அறிந்த பாலக்கோடு போலீசார், இருவரின் உடலையும் மீட்டு தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். ஆனால் மரணத்தில் மர்மம் உள்ளதாகக் கூறி, சொன்னம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த 200க்கும் மேற்பட்ட உறவினர்கள் பாலக்கோடு காவல் நிலையத்தை முற்றுகையிட்டனர்.

இது திட்டமிட்டு செய்யப்பட்ட ஆணவப்படுகொலை என உறவினர்கள் குற்றம் சாட்டினர்.

உயிரிழந்த இருவரும் அதே பகுதியைச் சேர்ந்த இரண்டு கல்லூரி மாணவிகளை காதலித்து வந்துள்ளனர். வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால் மாணவிகளின் வீட்டில் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. மேலும், மாணவிகளின் உறவினர்கள் சுனீல்குமார் மற்றும் முருகன் இருவரையும் “கொலை செய்து விடுவோம்” என்று மிரட்டியதாக கூறப்படுகிறது.

இளைஞர் உயிரிழப்பு
இளைஞர் உயிரிழப்பு

இதனால், உயிரிழந்தவர்களின் உறவினர்கள் “இது விபத்து அல்ல… திட்டமிட்டு செய்யப்பட்ட ஆணவப்படுகொலை” எனவும், குற்றவாளிகளை கைது செய்யும் வரை உடலை வாங்க மாட்டோம் என்றும் கூறியதால், காவல் நிலையம் முன்பு பரபரப்பு நிலவியது.

பாலக்கோடு டிஎஸ்பி ராஜசுந்தர் நடத்திய பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து அவர்கள் கலைந்து சென்றனர். இது தொடர்பாக வழக்கு பதிவு செய்த பாலக்கோடு காவல்துறையினர் “இது ஆணவப்படுகொலையா அல்லது விபத்தா?” என்ற இரு கோணங்களிலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கோவா தீ விபத்து: `எப்படியும் போனை எடுத்து பேசுவார்னு நினச்சேன்’ - கணவன், 3 சகோதரிகளை பறிகொடுத்த பெண்

கோவா சுற்றுலாவுக்கு மிகவும் பிரபலமான இடம். அதுவும் டிசம்பர் மற்றும் ஜனவரி மாதம் உலகம் முழுவதும் இருந்து கோவாவுக்கு சுற்றுலா பயணிகள் ஆயிரக்கணக்கில் வருவது வழக்கம். கோவாவில் உள்ள இரவு நேர மதுபான விடுதிக... மேலும் பார்க்க

Goa: திடீரென பற்றிய தீ; 25 பேர் பலியான சோகம், பதற வைக்கும் வீடியோ காட்சிகள் - என்ன நடந்தது?

கோவாவின் ஆர்போராவில் உள்ள 'பிர்ச் பை ரோமியோ லேனில்' நேற்றிரவு பாலிவுட் பேங்கர் நைட் பார்ட்டி நடந்தது. அதிக சத்தமுள்ள இசைக்கு நூற்றுக்கணக்கானவர்கள் நடனமாடிக் கொண்டாடினர். அப்போது திடீரென தீ விபத்து ஏற்... மேலும் பார்க்க

கோவா: நைட் கிளப்பில் தீ‌ விபத்து; 25 பேர் உயிரிழப்பு - தீப்‌பற்றியது எப்படி?

நேற்று நள்ளிரவு, கோவா ஆர்போராவில் உள்ள ரோமியோ லேன் நைட் கிளப்பில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.இதில் 22 ஆண்கள், 3 பெண்கள் என மொத்தம் 25 பேர் உயிரிழந்துள்ளனர். இதில் சிலர் வெளிநாட்டைச் சேர்ந்தவர்கள்.என்ன ந... மேலும் பார்க்க

உ.பி: தேர்வு எழுதிக்கொண்டிருந்த 12 வயது மாணவனுக்கு மாரடைப்பு: சுருண்டு விழுந்து உயிரிழந்த பரிதாபம்!

இன்றைய காலக்கட்டத்தில் இளம் வயதினருக்கு மாரடைப்பு ஏற்படுவது அதிக அளவில் நடந்து வருகிறது. உத்தரப்பிரதேச மாநிலம், லக்னோவில் உள்ள தனியார் பள்ளியில் ஆறாம் வகுப்பு படித்து வந்தவர் அமய் சிங்(12). இம்மாணவன் ... மேலும் பார்க்க

கீழக்கரையில் கொடூர விபத்து: நகர்மன்ற தலைவர் கார் மோதி ஐயப்ப பக்தர்கள் உள்பட 5 பேர் பலி

ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் இன்று அதிகாலை ஐயப்பப் பக்தர்கள் பயணம் செய்த கார்மீது கீழக்கரை நகர்மன்றத் தலைவரின் சொகுசு கார் அதிவேகத்தில் மோதியதில் 5 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். மேலும் இருவரி... மேலும் பார்க்க

MH370: மாயமான மர்ம விமானம்; 10 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் தேடும் மலேசியா!

உலக விமான போக்குவரத்து வரலாற்றில் மிகவும் புதிரான கதை மலேசியா ஏலைன்ஸின் MH370 விமானத்தினுடையது. 10 ஆண்டுகளுக்கு முன்பு மர்மமாக காணாமல் போன இந்த விமானத்தை தேடும் பணியை இந்த மாத இறுதியில் மீண்டும் தொடங்... மேலும் பார்க்க