செய்திகள் :

தர்மேந்திர பிரதானை தொடர்ந்து அடுத்தகுறி நிதின் கட்கரியா? - எத்தனால் ரூபத்தில் வரும் சிக்கல்!

post image

மத்திய கல்வி அமைச்சராக இருந்த தர்மேந்திர பிரதான், நீட் தேர்வு மோசடி விவகாரத்தில் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். அவர் பதவி விலகவேண்டும் என்று கோரி டெல்லியில் காக்ரோச் ஜனதா கட்சியினர் நடத்திய போராட்டத்திற்கு பணிந்து தர்மேந்திர பிரதான் பதவி விலகவேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது.

இப்போராட்டத்தின்போது மாணவர்கள் மீது பதிவு செய்யப்பட்ட வழக்குகளை ரத்து செய்யவேண்டும் என்றும், அவ்வாறு ரத்து செய்யவில்லை எனில் மீண்டும் போராட்டத்தில் ஈடுபடுவோம் என்று அக்கட்சியினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

தர்மேந்திர பிரதான் பதவி விலகிவிட்ட நிலையில் அடுத்த குறி மத்திய போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரிக்கு வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. நிதின் கட்கரி எரிபொருளில் எத்தனால் கலந்து விற்பனை செய்ய வேண்டும் என்று நீண்ட நாட்களாக கோரி வருகிறார்.

ஆனால் எத்தனால் பயன்படுத்துவதால் வாகனங்களின் பாகங்கள் சேதம் அடைவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. ஆனாலும் நிதின் கட்கரிக்கு எதிராக சமூக ஊடகங்களில் தொடர்ந்து வீடியோக்கள் வந்து கொண்டிருக்கிறது.

டெல்லி போராட்டத்தில் கலந்து கொண்ட மாணவர்கள் போராட்டம் முடிந்த பிறகு கலைந்து சென்ற போது பகிர்ந்துள்ள இன்ஸ்டாகிராம் பதிவில், நிதின் கட்கரிக்கு எதிரான போராட்டத்தில் சந்திப்போம் என்று பகிர்ந்துள்ளனர். அவர்கள் தங்களது பதிவில், தர்மேந்திர பிரதான் போயிட்டார். அடுத்து நிதின் கட்கரிதான் பாக்கி என்று சிலர் சமூக ஊடகங்களில் பகிர்ந்து வருகின்றனர். இது தொடர்பாக இது வரை எந்த போராட்டமும் தொடங்கப்படவில்லை என்றாலும், நிதின் கட்கரிக்கு எதிரான சமூக ஊடக பிரசாரம் தீவிரம் அடைந்து வருகிறது.

இது குறித்து காக்ரோஜ் ஜனதா கட்சியின் தலைவர் அபிஜீத் டிப்கே கூறுகையில், ''எல்லா கரப்பான் பூச்சிகளும் ஒன்று சேர்ந்தால் என்ன செய்யும் என்பது பிரதானின் வெளியேற்றத்தில் தெரிந்து கொள்ளலாம், அடுத்து என்ன நடக்கும் என்று யாருக்குத் தெரியும்''என்று கேட்டுள்ளார். நிதின் கட்கரியின் மகன்கள் எத்தனால் தொழிலில் ஈடுபட்டு இருப்பதால்தான் நிதின் கட்கரி தொடர்ந்து விமர்சனத்திற்கு ஆளாகி வருகிறார்.

மேலும் சிலர் E20 ஜனதா பார்ட்டி என வலைதள பக்ககங்களும் தொடங்கியுள்ளனர்.

கட்காரியைத் தவிர, மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் மற்றும் நிர்மலா சீதாராமன் ஆகியோரும் மீம்ஸ்களின் இலக்காக மாறினர், "வரி ஆன்ட்டி" மற்றும் "விபத்து அமைச்சர்" போன்ற கருத்துகள் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.

கூகுளுக்கு எதிராக வழக்கு

எத்தனால் கலந்த எரிபொருளுடன் தொடர்புடைய தவறாக, புனையப்பட்ட மற்றும் அவதூறான செயற்கை நுண்ணறிவு மூலம் உருவாக்கப்பட்ட டீப்ஃபேக் வீடியோக்கள் மற்றும் டிஜிட்டல் பதிவுகளை நீக்கக் கோரி மெட்டா பிளாட்ஃபார்ம்ஸ், எக்ஸ் கார்ப், கூகுள் எல்எல்சி மற்றும் பிற நிறுவனங்களுக்கு எதிராக சிவில் வழக்குத் தொடர மத்திய போக்குவரத்து அமைச்சர் நிதின் கட்கரிக்கு மும்பை உயர் நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

கட்கரி தாக்கல் செய்துள்ள மனுவில், எத்தனால் தொடர்பான பொது விவாதம் அல்லது அவரது பணி குறித்த நடவடிக்கைகள் அல்லது அரசாங்கக் கொள்கைகள் மீதான விமர்சனங்களைத் தடுக்கும் நோக்கம் இல்லை என்றும், அதோடு அவரது பொது வாழ்க்கை, அரசாங்கக் கொள்கைகள் அல்லது உத்தியோகபூர்வ செயல்பாடுகள் பற்றிய நியாயமான விமர்சனம், கருத்து வேறுபாடு, விவாதம் அல்லது நேர்மையான கருத்தை வெளிப்படுத்துவதைத் தடுக்கவோ அல்லது கட்டுப்படுத்தவோ முயலவில்லை.

வழக்கைத் தாக்கல் செய்வதன் நோக்கம் எத்தனால் கலந்த பெட்ரோல் (EBP) திட்டம் மற்றும் E20 முன்முயற்சியில் இணையத்தில் உள்ள தகவல் அவரை தவறாக சித்தரிக்கிறது. மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகத்தால் பிரத்தியேகமாக நிர்வகிக்கப்படும் இரண்டு திட்டங்களிலும் தனக்கு எந்தவித பங்கு இல்லை. தவறான, இட்டுக்கட்டப்பட்ட, தீங்கிழைக்கும், முறைகேடான மற்றும் மிகவும் அவதூறான தகவல்கள், கட்கரியின் தனிப்பட்ட தகவல்கள் அவரது ஒப்புதல் இல்லாமல் பயன்படுகிறது என்று குறிப்பிட்டுள்ளார்.

Self Attendance: `இனி குழந்தைகள் பிரசென்ட் சொல்ல வேண்டாம்!' - ஆசிரியையின் ஐடியா; இணையத்தில் வைரல்!

தொடக்கப்பள்ளி மாணவர்களின் வருகைப் பதிவை சுவாரஸ்யமான கற்றல் அனுபவமாக மாற்றியுள்ள டெல்லியைச் சேர்ந்த ஒரு தொடக்கப்பள்ளி ஆசிரியையின் புதுமையான முயற்சி சமூக வலைதளங்களில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.வழக்க... மேலும் பார்க்க

மு.க.அழகிரி மகள் கயல்விழி மீது எஸ்.பி.ஐ வங்கி மேலாளர் காவல்துறையில் தாக்குதல் புகார் - பின்னணி என்ன?

சென்னை அடையாறு எஸ்.பி.ஐ என்.ஆர்.ஐ கிளை மேலாளர் ஹர்ஷீன் சிங் மீது கட்டட உரிமையாளரான கயல்விழி அழகிரி தாக்குதல் நடத்தியதாக போலீஸில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. எஸ்.பி.ஐ ரீஜினல் பிசினஸ் ஆபீஸ் (RBO-II) தலைம... மேலும் பார்க்க

`என் மகனைப் பற்றிய செய்திகளை தவிர்க்கிறேன்; ரத்த அழுத்தம்.! ' - CJP தலைவர் அபிஜித் திப்கே பெற்றோர்

டெல்லியில் காக்ரோச் ஜனதா கட்சி சார்பாக, நீட் தேர்வு முறைகேடு தொடர்பாக காலவரையற்ற போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இப்போராட்டத்திற்கு காக்ரோச் ஜனதா கட்சி தலைவர் அபிஜித் திப்கே தலைமை ஏற்று நடத்தி வருகிறார்... மேலும் பார்க்க

`நாங்கள் சேர்ந்துதான் வாழ்வோம், பிரிக்க முடியாது' - ஒரே வாலிபரை திருமணம்செய்து கொண்ட 3 சகோதரிகள்

ஒன்றாக இரட்டையர்களாக பிறந்த இரண்டு சகோதரிகள் ஒரு வாலிபரை திருமணம் செய்துகொள்வதை கேள்விப்பட்டு இருக்கிறோம். ஒன்றுக்கு மேற்பட்டவரை ஒரே நேரத்தில் திருமணம் செய்து கொள்ள சட்டம் அனுமதிக்காவிட்டாலும், இது போ... மேலும் பார்க்க

CJP: `யார் அனுப்புறாங்கனு தெரியல; ஆனா குவியுது' - ஆன்லைன் ஆர்டர் மூலம் போராட்டகளத்தில் குவியும் உணவு

டெல்லியில் நீட் தேர்வு மோசடி, கல்வி சீர்திருத்தம் உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மாணவர்கள் கரப்பான்பூச்சி ஜனதா கட்சி சார்பாக போராட்டம் நடத்தி வருகின்றனர். இப்போராட்டம் அதிக அளவில் மாணவர்கள் மத்... மேலும் பார்க்க