செய்திகள் :

'தவெகவின் குதிரை பேரத்தை பார்த்து ஆளுநர் அமைதியாக இருப்பது ஏன்?'- அதிமுக எம்.பி இன்பதுரை

post image

சென்னை கிண்டியில் உள்ள லோக் பவனில் ஆளுநர் அர்லேகரை அதிமுக கொறடா அக்ரி கிருஷ்ணமூர்த்தி, இன்பதுரை எம்.பி. உள்ளிட்டோர் சந்தித்து புகார் அளித்திருக்கின்றனர்.

குதிரை பேரம் தொடர்பாக நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி ஆளுநரிடம் மனு அளித்திருக்கின்றனர்.

ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர்
ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர்

மனு அளித்த பிறகு செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய அதிமுக எம்.பி இன்பத்துரை, " எங்களின் புகாரில் ஆளுநர் உரிய நடடிக்கை எடுப்பார் என நம்புகிறேன்.

தவெகவின் குதிரை பேரத்தை பார்த்து ஆளுநர் அமைதியாக இருப்பது ஏன்? அதை அனுமதிக்க மாட்டேன் என தவெக ஆட்சி அமைக்கும் முன்பே அவர் கூறியிருந்தார். ஆனால் இப்போது என்ன நடக்கிறது.

குதிரை பேரம் நடைபெறுவது அப்பட்டமாக தெரிந்தும் ஆளுநர் என்ன செய்து கொண்டிருக்கிறார். குதிரை பேரம் மிகவும் ஆபத்தானது. அரசமைப்பு சட்டத்துக்கு புறம்பானது" என்று கூறியிருக்கிறார்.

அதிமுக கொறடா கிருஷ்ணமூர்த்தி
அதிமுக கொறடா கிருஷ்ணமூர்த்தி

தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த அதிமுக கொறடா அக்ரி கிருஷ்ணமூர்த்தி, " அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் வழிகாட்டுதலில் ஆளுநரை சந்தித்துள்ளோம்.

அதிமுக எம்எல்ஏ-களை விலை கொடுத்து வாங்கிக் கொண்டிருக்கிறது தவெக. ஆளுநரின் அதிகாரத்தின் பேரில் நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று தெரிவித்திருக்கிறார்.

"Right Party, Wrong Leader"- அதிமுகவில் இருந்து விலகியது குறித்து வைகைச்செல்வன் விளக்கம்

அதிமுகவில் இருந்து விலகிய வைகைச்செல்வன் முதல்வர் விஜய் தலைமையில் தவெகவில் இணைந்திருக்கிறார். தவெகவில் இணைந்த பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த பேசிய வைகைச்செல்வன், "ஒரு உப்பை போல சுத்தமான தலைவராக இருப்ப... மேலும் பார்க்க

தமிழகத்தில் குதிரை பேரம், அதிகார துஷ்பிரயோகம்: ஆளுநரிடம் திமுக நேரில் புகார்!

தமிழகத்தில் தற்போதைய ஆட்சியில் குதிரை பேரமும், அதிகார துஷ்பிரயோகமும் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளதாக தி.மு.க அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி குற்றம் சாட்டியுள்ளார். இது தொடர்பாக தி.மு.க மாநிலங்களவை உறு... மேலும் பார்க்க

``லஞ்சம் வாங்கி நியமிக்கப்பட்ட அரசு வழக்கறிஞர்கள்; இதுதான் தூய சக்தி ஆட்சியா?" - டிடிவி தினகரன்

தமிழ்நாட்டில் தவெக தலைமையிலான புதிய அரசு பொறுப்பேற்றுள்ள சூழலில், அதன் ஆட்சி நிர்வாகம் மற்றும் அமைச்சர்கள் மீதான புகார்களை முன்வைத்து எதிர்க்கட்சிகள் தங்களது விமர்சனக் கணைகளைத் தொடுக்கத் தொடங்கியுள்ளன... மேலும் பார்க்க

"இது RSS-ன் வெறுப்பரசியல்" - விஸ்வநாதன் மீதான புகாருக்கு மாணிக்கம் தாகூர் கண்டனம்

தமிழிக பொறுப்பு ஆளுநர் அர்லேகரை இன்று (ஜுலை.4) தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் நேரில் சென்று புகார் அளித்திருந்தார். அந்தப் புகாரில், "கடந்த ஜூன் 21-ஆம் தேதி, மதுரையில் நடைபெற்ற மராத்தான் ஓட்டப்... மேலும் பார்க்க

திருவாரூர்: குட்கா விற்க லஞ்சம்; 2 ஆண்டுகளாக மாதம் ரூ.5,000 வாங்கிய 2 போலீஸார் சஸ்பெண்ட்

திருவாரூர் மாவட்டம் குடவாசல் தாலுக்கா, அத்திக்கடை பகுதியில் பாஸ்கர் என்பவர் கடந்த 5 ஆண்டுகளாக மேலாக பெட்டிக்கடை நடத்தி வந்துள்ளார்.இவர் கடையில் சட்ட விரோதமாக குட்கா,பான் மசாலா போன்ற தடை செய்யப்பட்ட போ... மேலும் பார்க்க

"காவிரிக்காக ஜெயிலுக்குப் போக நான் தயார்" - மேகதாது அணை விவகாரம் குறித்து அன்புமணி

கர்நாடகத்தில், காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்ட திட்டமிடும் கர்நாடக அரசைக் கண்டித்தும், இத்திட்டத்தை முழுமையாகக் கைவிட வலியுறுத்தியும் பாமக தலைவர் அன்புமணி 'மேகதாது அணை தடுப்போம், காவிரி காப்ப... மேலும் பார்க்க