செய்திகள் :

'தவெக கூட்டத்தில் திமுகவினர் பாட்டில் வீச்சு?' - மேடையிலேயே கொந்தளித்த ஆதவ்! - என்ன நடந்தது?

post image

தவெக சார்பில் வில்லிவாக்கத்தில் அக்கட்சியின் தேர்தல் மேலாண்மைப் பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜூனா போட்டியிடுகிறார். இன்று தனது தொகுதியில் ஆதவ் ஒரு பொதுக்கூட்டத்தையும் நடத்தி வருகிறார். அந்தக் கூட்டத்தில் திமுக-வினர் கண்ணாடி பாட்டில்களை வீசி தாக்குவதாக ஆதவ் கொந்தளித்திருக்கிறார்.

ஆதவ்
ஆதவ்

கூட்டத்தில் நாஞ்சில் சம்பத் பேசிக்கொண்டிருக்கையில் திடீரென எழுந்து மைக் முன் வந்த ஆதவ் ஒரு கண்ணாடி துண்டை காண்பித்து, 'கூட்டத்தில் பெண்கள் அமர்ந்திருக்கும் பகுதியில் திமுக-வினர் கண்ணாடி பாட்டில்களை உடைத்து வீசி தாக்குகின்றனர்.

அவர்களை காவல்துறை உடனடியாக கைது செய்ய வேண்டும். எங்களுக்கு எவ்வளவு கொடுமை செய்கிறீர்கள்? கரூரிலிருந்து எவ்வளவு இடைஞ்சல்கள்? எங்களுக்கு நியாயம் கிடைக்காமல் நான் இங்கிருந்து நகரமாட்டேன். கைதாகினாலும் பரவாயில்லை' என கொந்தளித்து பேசியிருந்தார்.

பாட்டில்
பாட்டில்

திடீரென ஆதவ் கொந்தளித்ததால் கூட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது. ஆதவ்வின் பேச்சை தொடர்ந்து கூட்டத்தில் இடையூறு செய்த சிலர் கைது செய்யப்பட்டிருப்பதாக தகவல். கைதைத் தொடர்ந்து பொதுக்கூட்டமும் தொடர்ந்து நடந்து வருகிறது.

'கச்சா எண்ணெய்' இறக்குமதியில் தள்ளாடும் நாடுகள்; ஆனால் இந்த உலோகத்தை அதிகமாக இறக்குமதி செய்யும் சீனா

அமெரிக்கா - ஈரான் போரால் உலகமே கச்சா எண்ணெய், எல்.பி.ஜியை உற்று நோக்கி வருகிறது.இந்த நேரத்தில், சீனா சத்தமே இல்லாமல் வெள்ளியை இறக்குமதி செய்கிறது.ப்ளூம்பெர்க் குறிப்பிட்டுள்ள சீனாவின் அறிக்கையின் படி,... மேலும் பார்க்க

தமிழகத்தில் பறக்கும் படை வேட்டையில் சிக்கியது இத்தனை கோடிகளா? - அர்ச்சனா பட்நாயக் வெளியிட்ட தகவல்

தமிழ்நாட்டில் இதுவரை பறிமுதல் செய்யப்பட்ட பரிசுப்பொருட்கள் மற்றும் பணம் குறித்த விவரங்களை தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்திருக்கிறார். தமிழக சட்டமன்... மேலும் பார்க்க

மணிப்பூர்: தீப்பந்தத்துடன் வீதிக்கு வந்த பெண்கள்; உடைந்த நம்பிக்கையும் ஓயாத கலவரமும்;என்ன நடக்கிறது?

மணிப்பூர் மாநிலத்தில் 2023 மே மாதம் மெய்தி - குக்கி என இரு சமூகத்தினரிடையே தொடங்கிய கலவரம் இன்றுவரை நீடித்து வருகிறது. இந்தக் கலவரத்தில் இதுவரை 260-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர், ஆயிரக்கணக்கானோர... மேலும் பார்க்க

"எங்களது ராணுவத்திற்கு உத்தரவிட்டுள்ளேன்" - ட்ரம்ப் பதிவு; நம்பிக்கையில் பாகிஸ்தான்; மௌனத்தில் ஈரான்

நேற்று பாகிஸ்தான் தலைநகரான இஸ்லாமாபாத்தில் நடக்கவிருந்த அமெரிக்கா – ஈரான் பேச்சுவார்த்தை திட்டமிட்டது போல நடக்கவில்லை. அமெரிக்கா தரப்பில் இருந்து அமெரிக்காவின் துணை அதிபர் ஜே.டி.வான்ஸ், சிறப்பு தூதர் ... மேலும் பார்க்க

மேற்கு வங்கம் : பிரசார களத்துக்கு வந்த 'மீன்கள்' ; மேற்கு வங்கத்தை அசைக்கும் உணவு யுத்தம்!

கொல்கத்தாவின் பாரக்பூர் தொகுதியின் பா.ஜ.க வேட்பாளரான கௌஸ்தவ் பக்சி, பாரம்பரிய உடை அணிந்து கையில் ஒரு மீனுடன் வீடு வீடாகச் சென்று வாக்கு சேகரித்து வருகிறார். அவருக்குப் பின்னால் மேளதாளங்கள் முழங்க ஆதரவ... மேலும் பார்க்க