செய்திகள் :

தவெக: ``திமுக - அதிமுக கூட்டணி அமைந்தால் பேரழிவு!” - நடிகர் விஷால் எச்சரிக்கை

post image

தமிழக அரசியலில் அடுத்தடுத்து பரபரப்பான சூழல்கள் நிலவி வரும் வேளையில், நடிகர் விஷால் வெளியிட்டுள்ள அறிக்கை அரசியல் வட்டாரத்தில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழக சட்டமன்றத் தேர்தலில் 108 இடங்களை வென்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தும், தவெக-வை ஆட்சியமைக்க அழைக்காத ஆளுநரின் முடிவை எதிர்த்து விஜய் தரப்பு நீதிமன்றம் செல்லத் திட்டமிட்டுள்ளது. பெரும்பான்மைக்குத் தேவையான ஆதரவு கடிதங்கள் இல்லை என ஆளுநர் ஆர்.வி. அர்லேகர் தரப்பு தெரிவித்துள்ளது.

விஜய்
விஜய்

மறுபுறம், ஒரு புதிய தேர்தலைத் தவிர்க்கவும், தவெக-வைத் தடுக்கவும் திமுக - அதிமுக கூட்டணியில் ஆட்சி அமைக்க திட்டமிட்டு வருவதாக தகவல்கள் கசிகின்றன. எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராகவும், திமுக வெளியிலிருந்து ஆதரவு அளிக்கவும் ஆலோசிக்கப்படுவதாகக் கூறப்படுகிறது. அதேநேரம், தவெக-வுடன் கூட்டணி இல்லை என்பதில் இபிஎஸ் உறுதியாக உள்ளார்.

இந்த "அதிர்ச்சி" கூட்டணி முயற்சி மக்கள் தீர்ப்பைப் புறக்கணிக்கும் செயல் என தவெக சாடியுள்ளது. ஒருவேளை திமுக - அதிமுக இணைந்து ஆட்சியமைக்க முயன்றால், தவெக-வின் 108 எம்.எல்.ஏ-க்களும் ஒட்டுமொத்தமாகப் பதவி விலகத் தயாராக இருப்பதாகவும், இதன் மூலம் அரசியல் நெருக்கடியை ஏற்படுத்த அக்கட்சித் தலைமை திட்டமிட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. தமிழக அரசியலில் இது ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க விபரீத சூழலை உருவாக்கியுள்ளது.

நடிகர் விஷால்
நடிகர் விஷால்

இந்த நிலையில், நடிகர் விஷால் தன் எக்ஸ் பக்கத்தில், ``அடுத்த அரசாங்கத்தை அமைப்பதற்கு, த.வெ.க அல்லாத வேறு ஏதேனும் ஒரு தரப்பு, குறிப்பாகக் கற்பனைக்கே எட்டாததும் அதிர்ச்சியூட்டக் கூடியதுமான திமுக-அதிமுக கூட்டணி அதிகாரத்திற்கு வருமானால், ஒரு குடிமகனாகவும் வாக்காளனாகவும் நான் காண்கின்ற விளைவு, சாமானிய மக்கள் மத்தியில் பேரழிவுமிக்கதாகவும் விபரீதமானதாகவும் அமையும். இது எவருக்கும் சற்றும் ஏற்புடையதாக இருக்காது." எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

TVK: "தவெக மட்டுமே பெரும்பான்மையுடன் ஆட்சியமைக்கும்" - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பேபி பதில்

தமிழக வெற்றிக் கழகம் ஆட்சி அமைப்பதற்கு விடுதலைச் சிறுத்தைகள், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் ஆகிய கட்சிகளின் ஆதரவை நாடி வருகின்றது. இந்த நேரத்தில், ANI-க்குக் கொடுத்த பேட்டியில் மார்க்சி... மேலும் பார்க்க

திமுக - அதிமுக: 'ஜானகி அம்மையாருக்கு கலைஞர் அளித்த பதில்'- விளக்கும் மூத்த பத்திரிகையாளர்

தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியாகி சில நாட்கள் கடந்துள்ள நிலையில் அரசியலில் அடுத்தடுத்த அதிரடிகள் அரங்கேறி கொண்டிருக்கின்றன. இந்தத் தேர்தலில் 108 தொகுதிகளில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியா... மேலும் பார்க்க

'காத்திருப்பு; எமோஷன்; கூட்டல் கழித்தல் கணக்குகள்' - எப்படியிருக்கிறது பனையூர்?| Detailed Report

தமிழக அரசியல் களம் பரபரப்பான சூழலை எட்டியிருக்கிறது. பெரும்பான்மையை நிரூபித்து ஆட்சியைப் பிடிக்க திரைமறைவில் காய்களை நகர்த்தி பல தரப்பினரும் முயன்று கொண்டிருக்கின்றனர். இரண்டு முறை ஆளுநரை சந்தித்து ஆட... மேலும் பார்க்க

"பாஜக-வின் ஆசியோடு அதிமுக-விடம் திமுக பேசிக்கொண்டிருக்கிறது" - மாணிக்கம் தாகூர்

தவெக ஆட்சியமைக்க திமுக - அதிமுக இணைகிறது... தவெகவில் இணைந்து திமுகவிற்கு காங்கிரஸ் துரோகம் போன்ற பேச்சுகள்... விமர்சனங்கள் எழுந்துகொண்டு இருக்கின்றன. இந்த நேரத்தில் காங்கிரஸ் மீதான விமர்சனங்களுக்கு தன... மேலும் பார்க்க

'மக்களவையில் வேற இடம் கொடுங்க, காங்கிரஸுடன் எங்களால்.!'- மக்களவை சபாநாயருக்கு கனிமொழி கோரிக்கை

நடந்து முடிந்துள்ள தமிழக சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க. கட்சி தோல்வியைத் தழுவிய நிலையில், த.வெ.க அதிக இடங்களை வென்ற தனிக்கட்சியாக உள்ளது. ஆனாலும் தனிப்பெரும்பான்மை ஆட்சி அமைப்பதற்கான எண்ணிக்கை த.வெ.கவி... மேலும் பார்க்க

`உலக நாடுகளுக்கு 10% வரி சட்டத்திற்குப் புறம்பானது' - நீதிமன்ற தீர்ப்பு; மீண்டும் சறுக்கிய ட்ரம்ப்

கடந்த ஏப்ரல் மாதம், அமெரிக்க அதிபர் ட்ரம்ப் உலக நாடுகளின் மீது பரஸ்பர வரியை அறிவித்தார். வரி அமலாகும் தேதியில் பல நீட்டிப்புகள் இருந்தாலும், ஆகஸ்ட் மாதம் பரஸ்பர வரி அமலுக்கு வந்தது. பரஸ்பர வரியை 'சட்ட... மேலும் பார்க்க