செய்திகள் :

`தவெக-வில் இணையச் சொல்லி என்னை வற்புறுத்தினார்கள்!'- கைதான அனிதா ராதாகிருஷ்ணன் `பகீர்' குற்றச்சாட்டு

post image

தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூரில் கடந்த 20-ம் தேதி மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பிறந்தநாள் பொதுக்கூட்டத்தில் முன்னாள் அமைச்சரும் திருச்செந்தூர் தொகுதியின் எம்.எல்.ஏ-வுமான அனிதா ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டு பேசினார். அப்போது, முதல்வர் விஜய் குறித்து அவர் ஒருமையிலும், அவதூறான வகையிலும் பேசியதாக புகார் எழுந்தது.

கைது செய்யப்பட்ட அனிதா ராதாகிருஷ்ணன்

இது குறித்து த.வெ.க நகரச் செயலாளர் செல்வம் அளித்த புகாரின் பேரில், ஆத்தூர் காவல் நிலைய போலீஸார் அனிதா ராதாகிருஷ்ணன் மீது 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கில் தனக்கு முன்ஜாமீன் வழங்கக் கோரி அனிதா ராதாகிருஷ்ணன் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மனு இன்று காலை தள்ளுபடி செய்யப்பட்டது. அடுத்த ஒரு மணி நேரத்திலேயே ஆத்தூர் பேரூராட்சி அலுவலகத்திற்கு ஆய்வுக்காக அனிதா ராதாகிருஷ்ணன் சென்றிருந்தபோது, போலீஸார் அவரை அங்கு வைத்து கைது செய்தனர்.

அவர், தனது காரில் வர அனுமதி கோரிய நிலையில், அதை ஏற்க மறுத்த போலீஸார், மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு  தங்களது வாகனத்தில் ஏற்றி அழைத்துச் சென்றனர். சுமார் 6 மணி நேரம் தொடர் விசாரணை நடைபெற்றது. பின்னர், அனிதா ராதாகிருஷ்ணனை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த காவல்துறையினர் அழைத்துச் சென்றனர். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அனிதா ராதாகிருஷ்ணன்,

கைது செய்யப்பட்ட அனிதா ராதாகிருஷ்ணன்

“த.வெ.கவில் இணையச் சொல்லியும், எனது எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்யச் சொல்லியும் வற்புறுத்தினார்கள். அதற்கு நான் ஒப்புக்கொள்ளவில்லை. தி.மு.க-விலேயே இருப்பேன். அதன் காரணமாகவே நான் கைது செய்யப்பட்டுள்ளேன்” என பகீர் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். தொடர்ந்து 7வது முறையாக எம்.எல்.ஏவாக உள்ள முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் கைது செய்யப்பட்ட சம்பவம், தி.மு.கவினர் மத்தியில் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது. 

Iran : அலி கமேனி இறுதிச்சடங்கு: 4 மாதங்களாக உடல் எங்கே இருந்தது? இஸ்லாமிய விதியை மீறி தாமதமானதா?

உலக அரசியலில் பெரும் அதிர்வுகளை ஏற்படுத்திய ஈரானின் முன்னாள் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனி கொல்லப்பட்டு 4 மாதங்கள் ஆகிவிட்ட நிலையில், அவரது இறுதிச்சடங்கு ஊர்வலங்கள் தற்போதுதான் தொடங்கியிருக்கின்றன. அ... மேலும் பார்க்க

`கடும் வேதனையளிக்கிறது; விசாரணையை நம்புகிறோம்!' - அயோத்தி ராமர் கோயில் நன்கொடை கையாடல் குறித்து RSS

அயோத்தி ராமர் கோயிலில் நடந்துள்ள நன்கொடை கையாடல் சம்பவம், நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது. கோடிக்கணக்கான பக்தர்களின் நம்பிக்கையாக விளங்கும் இந்தக் கோயிலில் அரங்கேறியுள்ள இந்தச்... மேலும் பார்க்க

இனி பெட்ரோல், டீசல் விலை ஏறாது; எப்போது குறையும்? - மத்திய அமைச்சர் சொல்லும் 'ஹேப்பி நியூஸ்'

ஈரான் போர் காரணமாக இந்தியாவில் எண்ணெய் நிறுவனங்கள் பெருமளவு நஷ்டத்தைச் சந்தித்தன. இதை ஈடு செய்ய மத்திய அரசு பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தியது. இப்போது சென்னையில் பெட்ரோல் ஒரு லிட்டருக்கு கிட்டத்தட்ட ... மேலும் பார்க்க

`தவெக நிதியமைச்சர் மரியவில்சன் நேரில் ஆஜராக வேண்டும்'- அடிதடி வழக்கில் புதுச்சேரி நீதிமன்றம் உத்தரவு

தமிழகச் சட்டமன்றத் தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் ஆர்.கே.நகர் தொகுதியில் வெற்றிபெற்ற மரியவில்சன், முதலமைச்சர் விஜய் தலைமையிலான அமைச்சரவையில் நிதியமைச்சராக இருக்கிறார். இவரது உடன்பிறந்த தம்பிய... மேலும் பார்க்க

`ஆதவ் அர்ஜுனாவைக் கைதுசெய்வார்களா? இது சர்வாதிகாரத்தின் உச்சம்' - ஆர்.எஸ்.பாரதி காட்டம்!

முதல்வர் விஜய் குறித்து அவதூறாகப் பேசிய வழக்கில், திமுக முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் கைதுசெய்யப்பட்டிருக்கிறார். அவரது கைதுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், "தொகுதியில் ஆய்வு மேற்கொண்டு மக்கள்... மேலும் பார்க்க

US: அமெரிக்கர்களின் ஓய்வுக்காலத்தை சிதைக்கும் கல்விக் கடன்; நெஞ்சை உலுக்கும் அவலநிலை!

அமெரிக்கா... உலக வல்லரசு, வாய்ப்புகளின் தேசம், அமெரிக்கக் கனவை நனவாக்க துடிக்கும் கோடிக்கணக்கானோரின் புகலிடம். ஆனால், அந்த தேசத்தின் முதுகெலும்பாக விளங்கிய ஒரு தலைமுறையின் ஓய்வுக்காலமே இன்று கேள்விக்க... மேலும் பார்க்க