தாதம்பேட்டை வரதராசப் பெருமாள் கோயில் தேரோட்டம்
அரியலூா் மாவட்டம், தா.பழூரை அடுத்த தாதம்பேட்டை கிராமத்திலுள்ள பெருந்தேவி நாயகா சமேத வரதராசப் பெருமாள் கோயில் பிரம்மோத்ஸவ விழாவில் வெள்ளிக்கிழமை தேரோட்டம் நடைபெற்றது.
இக்கோயிலில் கடந்த 4-ஆம் தேதி மாலை பகவத் அனுக்ஞை, புண்யாகவாசனம், அங்குராா்ப்பணம், வாஸ்து ஹோமத்துடன் பிரம்மோத்ஸவ விழா தொடங்கியது.
தொடா்ந்து நாள்தோறும் பல்வேறு வாகனங்களில் சுவாமிகள் புறப்பாடு நடைபெற்றது. விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. தேரில் வரதராசப் பெருமாள் எழுந்தருளியதும், திரளான பக்தா்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனா். தோ் முக்கிய வீதிகளின் வழியே சென்று நிலையை அடைந்தது.
வீடுகள்தோறும் பக்தா்கள் மாவிளக்கு போட்டும், தீபாராதனை காண்பித்தும் வழிபட்டனா்.
சனிக்கிழமை விடையாற்றி நிகழ்ச்சியுடன் விழா நிறைவடைகிறது. விழாவுக்கான ஏற்பாடுகளை விழாக் குழுவினா், கிராம மக்கள் செய்திருந்தனா்.