செய்திகள் :

மத்தியப் பிரதேசம்: 90 வயது மூதாட்டிக்கு பாலியல் வன்கொடுமை; முகமூடி அணிந்து வந்த கும்பலுக்கு வலை

post image

மத்தியப் பிரதேச மாநிலம் கண்ட்வா மாவட்டத்தில், 90 வயது மூதாட்டி ஒருவர் முகமூடி அணிந்த நான்கு நபர்களால் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட அதிர்ச்சிகரமான சம்பவம் நிகழ்ந்துள்ளது.

தனது விவசாய நிலத்தில் உள்ள குடிசையில் மூதாட்டி தனியாக இருந்தபோது, முகமூடி அணிந்த நான்கு பேர் உள்ளே புகுந்து இந்தக் கொடூரச் செயலில் ஈடுபட்டுள்ளனர்.

இது குறித்து காலையில் கிராமத்தில் வசித்து வந்த தனது மகளிடம் பாதிக்கப்பட்ட மூதாட்டி தெரிவித்தார். உடனே அவரை அவரது மகள் மாவட்ட மருத்துவமனையில் சேர்த்தார். டாக்டர்கள் கேட்டுக்கொண்டபடி இது குறித்து போலீஸில் புகார் செய்யப்பட்டது. பாதிக்கப்பட்ட மூதாட்டி தற்போது மாவட்ட அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

அவர் காயமடைந்திருந்தாலும், தற்போது அவரது உடல்நிலை சீராக இருப்பதாகவும், அபாயக் கட்டத்தைத் தாண்டிவிட்டதாகவும் டாக்டர்கள் தெரிவித்துள்ளனர். இது குறித்து போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

போலீஸ் விசாரணை
போலீஸ் விசாரணை

இதில் தொடர்புடைய குற்றவாளிகளைக் கைது செய்ய மூன்று தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. அதோடு கூடுதல் காவல் கண்காணிப்பாளர் தலைமையில் சிறப்பு விசாரணை குழுவும் அமைக்கப்பட்டுள்ளது. குற்றவாளிகளைப் பற்றிய தகவல் கொடுப்பவர்களுக்கு ரூ.10 ஆயிரம் வழங்கப்படும் என்று கண்ட்வா மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் மனோஜ் ராய் அறிவித்துள்ளார்.

மற்றொரு சம்பவத்தில் மத்தியப் பிரதேச மாநிலம் குவாலியரில் கல்லூரி வளாகத்தில் 20 வயது பெண் ஒருவரை மூன்று பேர் கொண்ட கும்பல் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்துள்ளது. அப்பெண்ணை அவர்கள் கல்லூரி வளாகத்திற்குள் கடத்திச்சென்று இக்குற்றத்தைச் செய்துள்ளனர். இதில் தொடர்புடைய 3 குற்றவாளிகளும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பக்கத்துவீட்டுப் பெண்ணை அம்மா என அழைத்த மகள்; வாயிலும் கண்ணிலும் மிளகாய்த்தூள் போட்ட வளர்ப்புத் தாய்

மகாராஷ்டிரா மாநிலம் மும்பை அருகில் உள்ள பிவாண்டியின் பாப்காவ் பகுதியில், தனது 3 வயது வளர்ப்பு மகளை கொடூரமாக தாக்கிய 35 வயது பெண் கைது செய்யப்பட்டுள்ளார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக ப... மேலும் பார்க்க

கோவை: வாய்க்காலில் மிதந்த ஆண் சடலம்.. திருமணம் மீறிய உறவால் ஏற்பட்ட விபரீதம்; அதிர்ந்த போலீஸ்

கோவை மாவட்டம், சுல்தான்பேட்டை குமாரபாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் சதீஷ்குமார். இவருக்கு சரண்யா என்கிற மனைவியும், இரண்டு குழந்தைகளும் உள்ளனர். சதீஷ் – சரண்யா காதலித்து திருமணம் செய்துள்ளனர். ஆனால் அண்ம... மேலும் பார்க்க

கிருஷ்ணகிரி திமுக நிர்வாகி மீதான போக்சோ வழக்கு; முறையாக விசாரிக்காத பெண் இன்ஸ்பெக்டர் சஸ்பெண்ட்

கிருஷ்ணகிரியில் இரண்டரை வயது சிறுமி, திமுக நிர்வாகியால் பாலியல் வதை செய்யப்பட்டு கொல்லப்பட்ட வழக்கை முறையாக விசாரிக்காத பெண் இன்ஸ்பெக்டர சஸ்பெண்ட் செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.தி.மு.... மேலும் பார்க்க

சென்னை: டி.பி.யில் துணை முதல்வர் படம்! கிளாம்பாக்கம் பஸ் நிலைய கடைகளை காண்பித்து லட்சங்களில் மோசடி

சென்னை பழைய வண்ணாரப்பேட்டையைச் சேர்ந்த ஏழுமலை என்பவர், சென்னை வடக்கு இணை கமிஷனரிடம் கொடுத்த புகார் மனுவில் கூறியிருப்பதாவது, ``நான் பைஃனான்ஸ் தொழில் செய்து வந்தேன். அதில் நஷ்டம் ஏற்பட்டதால் அந்தத் தொழ... மேலும் பார்க்க

கோவை: கை, கால்கள் கட்டிப் போட்டு மூதாட்டி கொலை... நகைகள் திருட்டு; நேபாள பணிப்பெண்ணுக்கு வலைவீச்சு

கோவை மாவட்டம், திருச்சி சாலை நஞ்சுண்டாபுரம் பகுதியில் பார்சன் குடியிருப்பு உள்ளது. அங்கு கேரளாவைப் பூர்வீகமாக கொண்ட ராம்குமார் குட்டி என்கிற ஆயுர்வேத மருத்துவர், தன் குடும்பத்துடன் வசித்து வருகிறார். ... மேலும் பார்க்க

`கொடநாடு வழக்கை இன்னும் முடிக்காமல் இருப்பது ஏன்?'- சி.பி.சி.ஐ.டி‌-யிடம் கேள்வியெழுப்பிய நீதிமன்றம்!

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மற்றும் அவரின் தோழி சசிகலா ஆகியோருக்குச் சொந்தமான கொடநாடு எஸ்டேட் பங்களாவில் 2017- ம் ஆண்டு ஏப்ரல் 23- ம் தேதி நள்ளிரவு கொலை, கொள்ளை சம்பவம் நடைபெற்றது. அது தொடர்பான ... மேலும் பார்க்க