செய்திகள் :

பக்கத்துவீட்டுப் பெண்ணை அம்மா என அழைத்த மகள்; வாயிலும் கண்ணிலும் மிளகாய்த்தூள் போட்ட வளர்ப்புத் தாய்

post image

மகாராஷ்டிரா மாநிலம் மும்பை அருகில் உள்ள பிவாண்டியின் பாப்காவ் பகுதியில், தனது 3 வயது வளர்ப்பு மகளை கொடூரமாக தாக்கிய 35 வயது பெண் கைது செய்யப்பட்டுள்ளார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவியதை தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மும்பை அருகில் உள்ள கல்யான் என்ற இடத்தில் இருக்கும் கோர்ட்டிற்கு வெளியில் நோட்டரி செய்து கொடுப்பது தொடர்பான வேலைகள் செய்து வருபவர் மொகமத் இக்பால். இவர் ரேஷ்மா என்ற பெண்ணை திருமணம் செய்து இருந்தார். ஆனால் அவர்களுக்கு குழந்தை இல்லாததால் பெண் குழந்தை ஒன்றை தத்து எடுத்து இருந்தனர்.

அந்த 3 வயது குழந்தை பக்கத்து வீட்டுப் பெண்ணை "அம்மா" என்று அழைத்தது. இதனால் ஆத்திரமடைந்த வளர்ப்புத் தாய், குழந்தையை மிகக் கொடூரமாகத் தாக்கியுள்ளார். கோபத்தில் அந்தப் பெண் குழந்தையின்அடித்து உதைத்துள்ளார்.

மிளகாய் பொடி

அதோடு பக்கத்து வீட்டு பெண்ணை அம்மா என்று அழைக்கக்கூடாது என்று கூறி அடித்து உதைத்து மிரட்டி இருக்கிறார். ஒரு கட்டத்தில் அப்பெண் தனது வளர்ப்பு மகளின் வாயிலும் கண்ணிலும் மிளகாய் பொடியை திணித்துள்ளார்.

இந்த காட்சியை அங்கு இருந்த அவரது கணவர் தனது மொபைல் போனில் வீடியோ எடுத்துள்ளார். அதோடு சிறுமியை கொடுமைப்படுத்துவதை நிறுத்தும்படி மொகமத் கேட்டுக்கொண்டார். ஆனால் அதனை தடுக்க பெரிய அளவில் முயற்சி எடுக்கவில்லை. அதே சமயம் அவர் எடுத்த வீடியோவை சமூக வலைத்தள பக்கத்தில் வெளியிட்டார்.

அந்த வீடியோ வேகமாக பரவியது. அந்த வீடியோவின் அடிப்படையில் போலீஸார் தம்பதியினர் மீது வழக்குப் பதிவு செய்து, அந்தப் பெண்ணைக் கைது செய்துள்ளனர். பாதிக்கப்பட்ட சிறுமி மீட்கப்பட்டு, குழந்தைகள் நல காப்பகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார். கடந்த டிசம்பர் மாதம் தான் அவர்கள் குழந்தையை தத்து எடுத்தனர் என்று போலீஸார் தெரிவித்துள்ளனர்.

மத்தியப் பிரதேசம்: 90 வயது மூதாட்டிக்கு பாலியல் வன்கொடுமை; முகமூடி அணிந்து வந்த கும்பலுக்கு வலை

மத்தியப் பிரதேச மாநிலம் கண்ட்வா மாவட்டத்தில், 90 வயது மூதாட்டி ஒருவர் முகமூடி அணிந்த நான்கு நபர்களால் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட அதிர்ச்சிகரமான சம்பவம் நிகழ்ந்துள்ளது. தனது விவசாய நிலத்தில... மேலும் பார்க்க

கோவை: வாய்க்காலில் மிதந்த ஆண் சடலம்.. திருமணம் மீறிய உறவால் ஏற்பட்ட விபரீதம்; அதிர்ந்த போலீஸ்

கோவை மாவட்டம், சுல்தான்பேட்டை குமாரபாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் சதீஷ்குமார். இவருக்கு சரண்யா என்கிற மனைவியும், இரண்டு குழந்தைகளும் உள்ளனர். சதீஷ் – சரண்யா காதலித்து திருமணம் செய்துள்ளனர். ஆனால் அண்ம... மேலும் பார்க்க

கிருஷ்ணகிரி திமுக நிர்வாகி மீதான போக்சோ வழக்கு; முறையாக விசாரிக்காத பெண் இன்ஸ்பெக்டர் சஸ்பெண்ட்

கிருஷ்ணகிரியில் இரண்டரை வயது சிறுமி, திமுக நிர்வாகியால் பாலியல் வதை செய்யப்பட்டு கொல்லப்பட்ட வழக்கை முறையாக விசாரிக்காத பெண் இன்ஸ்பெக்டர சஸ்பெண்ட் செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.தி.மு.... மேலும் பார்க்க

சென்னை: டி.பி.யில் துணை முதல்வர் படம்! கிளாம்பாக்கம் பஸ் நிலைய கடைகளை காண்பித்து லட்சங்களில் மோசடி

சென்னை பழைய வண்ணாரப்பேட்டையைச் சேர்ந்த ஏழுமலை என்பவர், சென்னை வடக்கு இணை கமிஷனரிடம் கொடுத்த புகார் மனுவில் கூறியிருப்பதாவது, ``நான் பைஃனான்ஸ் தொழில் செய்து வந்தேன். அதில் நஷ்டம் ஏற்பட்டதால் அந்தத் தொழ... மேலும் பார்க்க

கோவை: கை, கால்கள் கட்டிப் போட்டு மூதாட்டி கொலை... நகைகள் திருட்டு; நேபாள பணிப்பெண்ணுக்கு வலைவீச்சு

கோவை மாவட்டம், திருச்சி சாலை நஞ்சுண்டாபுரம் பகுதியில் பார்சன் குடியிருப்பு உள்ளது. அங்கு கேரளாவைப் பூர்வீகமாக கொண்ட ராம்குமார் குட்டி என்கிற ஆயுர்வேத மருத்துவர், தன் குடும்பத்துடன் வசித்து வருகிறார். ... மேலும் பார்க்க

`கொடநாடு வழக்கை இன்னும் முடிக்காமல் இருப்பது ஏன்?'- சி.பி.சி.ஐ.டி‌-யிடம் கேள்வியெழுப்பிய நீதிமன்றம்!

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மற்றும் அவரின் தோழி சசிகலா ஆகியோருக்குச் சொந்தமான கொடநாடு எஸ்டேட் பங்களாவில் 2017- ம் ஆண்டு ஏப்ரல் 23- ம் தேதி நள்ளிரவு கொலை, கொள்ளை சம்பவம் நடைபெற்றது. அது தொடர்பான ... மேலும் பார்க்க