செய்திகள் :

கோவை: வாய்க்காலில் மிதந்த ஆண் சடலம்.. திருமணம் மீறிய உறவால் ஏற்பட்ட விபரீதம்; அதிர்ந்த போலீஸ்

post image

கோவை மாவட்டம், சுல்தான்பேட்டை குமாரபாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் சதீஷ்குமார். இவருக்கு சரண்யா என்கிற மனைவியும், இரண்டு குழந்தைகளும் உள்ளனர். சதீஷ் – சரண்யா காதலித்து திருமணம் செய்துள்ளனர். ஆனால் அண்மை காலமாக கணவன்-மனைவி இடையே பிரச்னை ஏற்பட்டு வந்துள்ளது.

சதீஷ்குமார்

இதனால் சரண்யா, கணவர் சதீஷை பிரிந்து தன் அம்மா வீட்டில் வசித்து வருகிறார். குழந்தைகளை பாரப்பதற்காக சதீஷ் அவ்வபோது மனைவியின் வீட்டுக்கு சென்று வந்துள்ளார்.

இதனிடையே சரண்யாவுக்கு அவரின் உறவினர் முருகன் என்பவருடன் திருமணம் கடந்த உறவு ஏற்பட்டுள்ளது. இந்த விவகாரம் சதீஷ்குமாருக்கு தெரிந்து குடும்பத்தில் பிரச்னை அதிகரித்துள்ளது. ​இந்நிலையில் சதீஷ் கடந்த சில நாள்களுக்கு முன்பு தன் நண்பர்களுடன் இணைந்து மது அருந்தியுள்ளார்.

முருகன்

பிறகு குழந்தைகளை பார்ப்பதாக சொல்லி சரண்யா வீட்டுக்கு சென்றுள்ளார். அப்போது அவர்களிடையே பிரச்னை ஏற்பட்டுள்ளது. சதீஷ் வந்த தகவலை சரண்யா முருகனிடம் கூறியுள்ளார்.

சதீஷ் அங்கிருந்து புறப்பட்ட சென்றபோது, எதிரில் காரில் வந்த முருகன் உள்ளிட்ட 4 பேர் அவரை கடத்தி சென்றனர். காரில் அதிக சத்தத்துடன் பாடல்களை ஒலிக்கவிட்டு, சதீஷ்குமாரை சரமாரியாக தாக்கியுள்ளனர். பிறகு பீர் பாட்டிலால் அவரை கடுமையாக தாக்கி பிஏபி வாய்க்காலில் தள்ளியுள்ளனர்.

கைது

​சதீஷ் மாயமாகிவிட்டதாக அவரின் தந்தை மயில்சாமி காவல்துறையில் புகார் அளித்திருந்தார். இதனிடையே சதீஷின் சடலம் திருப்பூர் அருகே மீட்கப்பட்டது. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் முருகன் மற்றும் அவரது நண்பர்கள் மூவரையும் கைது செய்தனர்.

சென்னை: ரௌடி, அவரின் நண்பன் கொடூர கொலை - அதிகாலையில் நடந்த அதிர்ச்சி!

சென்னை பல்லாவரம் அடுத்த திரிசூலம், துளசிங்க முதலியார் தெருவில் உள்ள வீட்டில் ரௌடி ஆறுமுகம் வாடகைக்கு குடியிருந்து வந்தார். அவரோடு அவரின் நண்பன் சதீஷ் என்பவரும் தங்கியிருந்தார். அதிகாலை நேரத்தில் பைக்க... மேலும் பார்க்க

தென்காசி: திருமணத்திற்கு மறுத்த காதலி; பள்ளியின் வாசலில் வைத்து கத்திரிக்கோலால் குத்திய காதலன் கைது

தென்காசியைச் சேர்ந்தவர் சொர்ணம். இவருக்கு ஏற்கெனவே திருமணமாகி கருத்து வேறுபாட்டால் கணவரைப் பிரிந்து வாழ்ந்து வருகிறார். தற்போது கடையநல்லூர் அருகேயுள்ள ஆய்குடியில் ஒரு தனியார் பள்ளியில் அலுவலக உதவியாளர... மேலும் பார்க்க

”2 வயதுக் குழந்தை முதல் 70 வயது மூதாட்டி வரை யாருக்கும் பாதுகாப்பு இல்லை” - செளமியா அன்புமணி காட்டம்

தூத்துக்குடி விமான நிலையத்தில்செய்தியாளர்களைச் சந்தித்த பசுமைத் தாயகம் அமைப்பின் தலைவர் செளமியா அன்புமணி, “கல்வி, மருத்துவம், சுகாதாரம் எனப் பல துறைகளில் பெரும் போராட்டங்களுக்குப் பிறகே பெண்கள் ஒரு நல... மேலும் பார்க்க

சிவகங்கை : கொலை முயற்சி வழக்கில் கைதான இளைஞர் உயிரிழந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம் - காரணம் என்ன?

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை ஜீவா நகரைச் சேர்ந்​தவர் ஜெயக்​கு​மார். கோழிக்​கடை​யில் வேலை செய்​கிறார். இவரது நண்​பர் ஆதனூரைச் சேர்ந்த அழகர். இவர் உணவகத்​தில் பணிபுரி​கிறார். கடந்த 5-ம் தேதி இரவு இரு​வரு... மேலும் பார்க்க

பக்கத்துவீட்டுப் பெண்ணை அம்மா என அழைத்த மகள்; வாயிலும் கண்ணிலும் மிளகாய்த்தூள் போட்ட வளர்ப்புத் தாய்

மகாராஷ்டிரா மாநிலம் மும்பை அருகில் உள்ள பிவாண்டியின் பாப்காவ் பகுதியில், தனது 3 வயது வளர்ப்பு மகளை கொடூரமாக தாக்கிய 35 வயது பெண் கைது செய்யப்பட்டுள்ளார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக ப... மேலும் பார்க்க

மத்தியப் பிரதேசம்: 90 வயது மூதாட்டிக்கு பாலியல் வன்கொடுமை; முகமூடி அணிந்து வந்த கும்பலுக்கு வலை

மத்தியப் பிரதேச மாநிலம் கண்ட்வா மாவட்டத்தில், 90 வயது மூதாட்டி ஒருவர் முகமூடி அணிந்த நான்கு நபர்களால் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட அதிர்ச்சிகரமான சம்பவம் நிகழ்ந்துள்ளது. தனது விவசாய நிலத்தில... மேலும் பார்க்க