செய்திகள் :

'தாயுள்ளம் கொண்ட ஆண்மகன் கேப்டன்' - ஆர்.கே.செல்வமணி உருக்கம்

post image

மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்தின் 2வது ஆண்டு நினைவு தினத்தை குருபூஜை விழாவாக தேமுதிக அனுசரிக்கிறது. இந்த குருபூஜை விழாவில் அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள் என பலரும் கலந்து கொண்டிருக்கின்றனர்.

செல்வமணி
செல்வமணி

அந்தவகையில் விஜயகாந்த் குருபூஜையில் கலந்து கொண்ட ஆர்.கே.செல்வமணி செய்தியாளர்களைச் சந்தித்து பேசியிருக்கிறார். " திரைப்பட தொழிலாளருக்கு வாழ்க்கை முழுக்க தொண்டாற்றியவர் விஜயகாந்த் சார்.

படப்பிடிப்பு தளங்களில் எல்லாருக்கும் என்ன உணவோ ...அதுதான் அங்கு வேலைப் பார்க்கும் தொழிலாளர்களுக்கும் கொடுக்க வேண்டும் என்ற திட்டத்தைக் கொண்டு வந்தார். அவரோட கிட்டத்தட்ட 30 வருடம் பயணம் செய்திருக்கிறோம். அவரை மாதிரி ஒரு சிறந்த மனிதரைப் பார்த்ததே இல்லை. அவர் தாயுள்ளம் கொண்ட ஒரு ஆண் மகன்.

இயக்குநர் ஆர்.கே.செல்வமணி
ஆர்.கே.செல்வமணி

பார்க்க கரடு முரடாகத் தான் தெரிவார். ஆனால் எந்த ஒரு பாகுபாடும் பார்க்காமல் பழகக்கூடியவர். இன்று திரைப்படத் துறையில் 50 பேர் இயக்குநராகவும், 75 பேர் தயாரிப்பாளராகவும் உருவாகியிருக்கிறார்கள் என்றால் அதற்கு காரணம் விஜயகாந்த் சார் தான். 100 ஆண்டுகளைக் கடந்தும் கூட அவர் புகழ் நிலைத்து நிற்கும்" என்று உருக்கமாகப் பேசியிருக்கிறார்.

அன்புமணி பின்னால் விவரமறியாமல் சென்றவர்கள் திரும்புவார்கள்! - ஜி.கே.மணி அதிரடி

சேலத்தில் ராமதாஸ் தலைமையிலான பொதுக்குழு கூட்டம் நாளை ( டிச. 29) நடைபெறவுள்ளது. ராமதாஸ்இந்நிலையில் சேலத்தில் செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய பா.ம.க கெளரவ தலைவர் ஜி.கே. மணி, 'அன்புமணியை கட்சியிலிருந்து... மேலும் பார்க்க

காங்கிரஸ்: திக்விஜய் சிங் சொன்ன `அந்த' வார்த்தை; கொந்தளிக்கும் தலைவர்கள்!

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் திக்விஜய் சிங், ஆர்.எஸ்.எஸ் மற்றும் பாஜக-வைப் புகழ்ந்து பேசியது, காங்கிரஸ் கட்சியின் ஒற்றுமை மற்றும் மூத்த தலைவர்களிடையே நிலவும் அதிருப்தி பேசுபொருளாகியிருக்கிறது.சில ... மேலும் பார்க்க

"100 நாள் வேலையை அழிக்கும் மசோதா பற்றி எடப்பாடி பழனிசாமி தெளிவாக பதில் சொல்வாரா?" - கனிமொழி கேள்வி!

மதுரை மாவட்டம், உசிலம்பட்டியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடந்தது.கனிமொழிதலைமை செயற்குழு உறுப்பினர் இளமகிழன் தலைமை வகிக்க, கனிமொழி எம்.பி, அமைச்சர் ... மேலும் பார்க்க

விஜயகாந்த்: 2-ம் ஆண்டு நினைவுநாள்; தலைவர்களின் நினைவுக் குறிப்புகள்!

தே.மு.தி.க நிறுவனர் விஜயகாந்தின் 2வது ஆண்டு நினைவு நாள் இன்று அனுசரிக்கப்பட்டு வருகிறது. இதனையொட்டி தே.மு.தி.க-வினர் குருபூஜையாக இந்த தினத்தை அனுசரித்து வருகின்றனர். தேமுதிக தொண்டர்கள் இருமுடி சுமந்து... மேலும் பார்க்க

Vijay: 'ஜனநாயகன் NDA வுக்கு வர வேண்டும்!' - விஜய்க்கு தமிழிசை அழைப்பு

மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்தின் 2வது ஆண்டு நினைவு தினத்தை குருபூஜை விழாவாக தேமுதிக அனுசரிக்கிறது. இந்த குருபூஜை விழாவில் தமிழிசை சௌந்தரராஜன் கலந்துகொண்டிருக்கிறார்.தமிழிசைஅதன் பிறகு செய்தியாளர்களைச... மேலும் பார்க்க