எச்சரித்த எ.வ.வேலு; தட்டிக்கொடுத்த விஜய் - வேலூர் TVK வேட்பாளர் ரேஸில் முந்தும் ...
தாய் கிழவி: 'நான் சினிமாவுக்கு வந்தபோது நிறைய பேர் என்னை அவமானப்படுத்தினாங்க.! - ராதிகா எமோஷனல்
சிவகுமார் முருகேசன் இயக்கியுள்ள ‘தாய் கிழவி’ படத்தில் ராதிகா சரத்குமார், பால சரவணன், சிங்கம்புலி, முனீஸ்காந்த், முத்துக்குமார் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
இந்தப் படத்தை சிவகார்த்திகேயன் தயாரித்திருக்கிறார். நிவாஸ் கே.பிரசன்னா இசையமைத்திருக்கிறார்.
இப்படத்தின் டிரெயிலர் வெளியீட்டு விழா நேற்று (பிப்.23) நடைபெற்றது.

இதில் கலந்துகொண்டு பேசிய ராதிகா, "என்னைத் திரைத்துறைக்கு அறிமுகம் செய்த பாரதிராஜா சாரால் இந்தப் படத்தை பார்க்கமுடியவில்லை என்று எனக்கு மிகப்பெரிய வருத்தம் ஒன்று இருக்கிறது.
'இந்தப் படத்தை எப்படியாவது சாரை பார்க்க வைத்துவிடு. அவர் படத்தைப் பார்த்து எழுந்து உட்கார்ந்து விடுவார்' என்று கமல் சொன்னார். எங்க அம்மா இறந்தபோது பாரதிராஜா சார் வீட்டுக்கு வந்தார்.
அப்போது 'தாய் கிழவி' ஸ்டில்லை பார்த்து அப்படி அழுதார். 'நீயா இதெல்லாம் பண்ணுற' என்று கேட்டார். அவர் உடல் சரியாகி இந்தப் படத்தைப் பார்த்துவிடுவார் என்று நம்புகிறேன்.
அதேசமயம் என் அம்மாவும் இந்தப் படத்தை பார்க்கவிலை என்ற வருத்தம் எனக்கு இருக்கிறது. என் தந்தை எம்.ஆர்.ராதாவிற்கு நான் கொடுக்கும் மிகப்பெரிய ட்ரிபியூட் இந்தப் படம்.

நான் சினிமாவிற்கு வந்தபோது என் தந்தையின் பெயரைக்கூட சொல்ல விடாமல் நிறைய பேர் என்னை அவமானப்படுத்தி இருக்கிறார்கள். அதையெல்லாம் இன்று உடைத்தெறிந்து நான் எம்.ஆர்.ராதா பொண்ணு என்று பெருமையாகச் சொல்லிக் கொள்கிறேன்" என்று எமோஷனலாகப் பேசியிருக்கிறார்.

















