H-1B Visa திட்டத்தை நிறுத்த வேண்டுமா? இந்தியர்களுக்கு சப்போர்ட் செய்யும் எலான் ம...
தாய் புலியை பிடித்துச்சென்ற வனத்துறை, ஆதரவின்றித் தவித்த 4 குட்டிகள்; மீட்கப்பட்ட பின்னணி
வனப்பகுதிகளில் வங்கப் புலிகளை அதிக எண்ணிக்கையில் கொண்டிருக்கும் மாநிலங்களில் ஒன்றாக கர்நாடக மாநிலம் விளங்கி வருகிறது. அதே வேளையில், புலிகளுக்கு விஷம் வைத்து கொல்வது முதல் வாகனங்களில் அடிபட்டு இறப்பது வரை புலிகளின் இயற்கைக்கு மாறான இறப்பு எண்ணிக்கையும் கர்நாடகாவில் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன.

இந்த நிலையில், கர்நாடக மாநிலம் நாஹரோலே புலிகள் காப்பகத்தில் இருந்து வெளியேறிய பெண் புலி ஒன்று கவுடனகட்டே குடியிருப்புப் பகுதிகளில் எதிர்கொள்ளல்களை ஏற்படுத்தி வந்துள்ளது. உடனடியாக அந்தப் புலியைப் பிடிக்க வலியுறுத்தி வனத்துறையினருக்கு உள்ளூர் மக்கள் கடுமையான அழுத்தம் கொடுத்த நிலையில், வனத்துறையினர் அந்தப் பெண் புலியைக் கடந்த 27- ம் தேதியன்று மயக்க ஊசி செலுத்திப் பிடித்துள்ளனர்.
அந்தப் புலியை நான்கு குட்டிகளுடன் பார்த்ததாக உள்ளூர் மக்கள் தகவல் தெரிவித்ததைக் கேள்விப்பட்டு அதிர்ச்சியடைந்த வனத்துறையினர், உடனடியாக குட்டிகளை மீட்கும் பணியில் களமிறங்கியுள்ளனர். கவுடனகட்டே சுற்றுவட்டார பகுதிகளில் தொடர்ந்து தேடுதலில் ஈடுபட்டு வந்த நிலையில் அங்குள்ள விளைநிலம்

ஒன்றில் நான்கு குட்டிகளும் ஆதரவின்றி பரிதவித்து வந்ததைக் கண்டறிந்து உடனடியாக மீட்டுள்ளனர். பிறந்து சுமார் மூன்று மாதங்களேயான அந்த நான்கு புலிக்குட்டிகளையும் நேற்று தாயிடம் சேர்த்துள்ளனர். மைசூரில் உள்ள புலிகள் மறுவாழ்வு மையத்தில் பராமரிக்கப்பட்டு வரும் இந்தப் புலிகளை மீண்டும் வனப் பகுதிக்குள் விடுவிப்பதற்கான ஆலோசனைகளை வனத்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.








.jpg)







