செய்திகள் :

"தாலி கட்டும் நேரத்தில் ரோஷன் கண்கலங்கிவிட்டார்!" - காதலன் பற்றி நடிகை ஜனனி

post image

'அவன் இவன்' திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை ஜனனி.

அப்படத்தைத் தொடர்ந்து 'தெகிடி', 'பலூன்' உள்ளிட்ட பல படங்களில் நடித்தவர், பிக் பாஸ் நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டார்.

Actress Janani
Actress Janani

சில நாட்களுக்கு முன்பு, ஜனனிக்கும் அவருடைய காதலனான சாய் ரோஷனுக்கும் திருமணம் நடைபெற்றது.

இந்நிலையில், திருமணம் பற்றியும், அவர்களுடைய முதல் தமிழ் புத்தாண்டு கொண்டாட்டம் குறித்தும் ஜனனி டைம்ஸ் ஆஃப் இந்தியாவுக்குப் பேட்டியளித்திருக்கிறார்.

அந்தப் பேட்டியில் அவர், "தமிழ் புத்தாண்டு எங்களுக்கு ஒரு புதிய தொடக்கம். என் பெற்றோர் தமிழ் புத்தாண்டிற்கு முதல் நாள் இரவே கடவுள் சிலையை வைத்து அலங்கரிப்பார்கள்.

மறுநாள் காலை அதைப் பார்த்துதான் நாங்கள் விழிப்போம். என் கணவர் ரோஷனுடன் நான் கொண்டாடும் முதல் தமிழ் புத்தாண்டு என்பதால், எங்கள் கொண்டாட்டத்தில் இதையும் சேர்த்துக் கொள்ளப் போகிறேன். ஒவ்வொரு ஆண்டும் இருவரின் பாரம்பரியத்தையும் நாங்கள் பின்பற்றுவோம்.

janani

நாங்கள் கணவன் - மனைவி என்பது இன்னும் ஆச்சரியமாகவே உள்ளது. எனக்கு அவர் எப்போதும் சிறந்த நண்பர்தான். திருமணமான புதிதில் வரும் பொறுப்புகளை உணர்ந்து அவற்றை ரசித்து வருகிறோம்.

திருமணத்தன்று தாலி கட்டும் நேரத்தில் ரோஷன் கண்கலங்கிவிட்டார். அவர் அழுதால் நானும் அழத் தொடங்கிவிடுவேன் என்பதால், அவரை அழ வேண்டாம் என்று அப்போது அவரிடம் சொன்னேன்.

தமிழ் புத்தாண்டு மற்றும் விஷு அடுத்தடுத்து வருவதால் இது எங்களுக்கு இரட்டைக் கொண்டாட்டம்." எனக் கூறியிருக்கிறார்.

Kayadu Lohar: `பவழமல்லி' - நானி முதல் துல்கர் சல்மான் வரை; அசத்தும் கயாடு லோஹரின் லைன் அப்

தமிழில் பிரதீப் ரங்கநாதனுடன் 'டிராகன்' படத்தில் நடித்து தமிழ் ரசிகர்களுக்குப் ஃபேவரிட்டானவர் நடிகை கயாடு லோஹர். மல்லுவுட்டில் டோவினோ தாமஸுடன் இவர் இணைந்து நடித்துள்ள 'பள்ளிச்சட்டம்பி' திரைப்படம் நாளை ... மேலும் பார்க்க

"கடும் குளிரான நீரில் 30 முதல் 40 நொடிகள் வரை மூச்சை அடக்கி நடித்தேன்" - பகிரும் ஆர்யா

மனு ஆனந்த் இயக்கத்தில் ஆர்யா, கௌதம் கார்த்திக் உள்ளிட்ட பலர் நடித்துள்ள 'மிஸ்டர் எக்ஸ்' (Mr X) திரைப்படம் வரும் ஏப்ரல் 17-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இப்படத்தின் ரிலீஸை முன்னிட்டு பரோமோஷனி... மேலும் பார்க்க

"த.வெ.க வேட்பாளருக்கு ஆதரவு ஏன்?" - தெளிவுப்படுத்தும் நடிகர் ராமராஜன்

தமிழக சட்டமன்றத் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், நடிகர் ராமராஜன் ஆலங்குளம் தொகுதி தவெக வேட்பாளருக்கு ஆதரவாகப் பிரசாரம் செய்தது அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளானது. "அதிமுக-வில் இருந்தவர் இப்போது... மேலும் பார்க்க

Arya: "அப்படிச் செய்தால் படம் காலியாகிடும்!" - ஆர்யா ஓபன் டாக்

ஆர்யா, கெளதம் கார்த்திக், மஞ்சு வாரியர் ஆகியோர் நடித்திருக்கும் ஸ்பை த்ரில்லர் திரைப்படமான ‘மிஸ்டர் எக்ஸ்’ இந்த வாரம் திரையரங்குகளில் வெளியாகிறது. நடிகர் ஆர்யா, அவருடைய கரியரில் பல மல்டி ஸ்டாரர் படங்க... மேலும் பார்க்க

விக்ரம் பிறந்தநாளில் காத்திருக்கும் சப்ரைஸ்; ரெடியான புரோமோ வீடியோ - 'சீயான் 63' அப்டேட்!

அடுத்த அதிரடிக்கு ரெடியாகிவிட்டார் 'சீயான்'விக்ரம். 'வீரதீர சூரன்' படத்திற்கு பின் அடுத்து அவர் பல்வேறு இயக்குநர்களிடம் கதைகள் கேட்டு வந்தார். ``சில நேரங்களில் மௌனம் என்பது ஒரு மிகப்பெரிய தயாரிப்புக்க... மேலும் பார்க்க