செய்திகள் :

திமுகவில் இணைய ரூ.50 கோடி பேரமா? தவெக எம்எல்ஏ குற்றச்சாட்டுக்கு அனிதா ராதாகிருஷ்ணனின் விளக்கம் என்ன?

post image

தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் தொகுதி த.வெ.க எம்.எல்.ஏ சரவணன், தொடர் சர்ச்சையில் சிக்கி வருகிறார்.

த.வெ.க பெண் உறுப்பினர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் இவர் மீது குற்றம்சாட்டப்பட்டது.

த.வெ.க எம்.எல்.ஏ சரவணன்
த.வெ.க எம்.எல்.ஏ சரவணன்

ஆய்வுக்குச் செல்லும்போது அதிகாரிகளை ஒருமையில் பேசுகிறார், குட்கா கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டவர்களுக்கு கட்சியில் பதவி வழங்கியது எனப் பல்வேறு குற்றச்சாட்டுகள் இவர் மீது உள்ளன.

இந்த நிலையில், "முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனின் ஆதரவாளர்கள் எனது எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்யச் சொல்லி ரூ.50 கோடி வரை பேரம் பேசினார்கள்.

லாரி ஏற்றிக் கொலை செய்துவிடுவதாகவும் மிரட்டினார்கள். எம்.எல்.ஏ குடியிருப்புக்கு வந்து என்னை மிரட்டுகிறார்கள். நான் யாருக்கும் விலை போக மாட்டேன்" என மீடியாக்களிடம் பேசியதுடன் ஆடியோ ஒன்றையும் வெளியிட்டுள்ளார்.

ஆனால், அந்த ஆடியோ முழுமையாக இல்லை. சரவணன் பேசும் பகுதி மட்டுமே உள்ளது. அவர் பேசிய நோக்கம் குறித்தும் கூறப்படவில்லை. சரவணன் மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகள் உள்ளதால் அதனை திசை திருப்புவதற்காகவே இப்படிப் பேசியிருப்பதாகக் கூறப்படுகிறது.

அனிதா ராதாகிருஷ்ணன்
அனிதா ராதாகிருஷ்ணன்

இந்த நிலையில், முதல்வர் விஜய் குறித்து ஒருமையில் பேசிய வழக்கில் கைதாகி ஜாமீனில் வெளிவந்து ஆத்தூர் காவல் நிலையத்திற்கு கையெழுத்திட வந்த முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், "உயிருக்குப் பாதிப்பு இல்லை என்று யார் வேண்டுமானாலும் என்ன வேண்டுமானாலும் சொல்லலாம்.

அவரிடம் யாரும் பேரம் பேசவில்லை. அவர் கூறும் அனைத்து தகவலும் முற்றிலும் தவறானது. நான் லாட்டரி வியாபாரம் செய்யவில்லை. கஞ்சா வியாபாரம் செய்யவில்லை. உங்களை அனுப்பிவிட்டு நான் மானபங்க படுத்தவில்லை. செய்தவர் எல்லாம் அவர்தான்" என்றார்.

த.வெ.க-வில் இணைந்தார் மூத்த வழக்கறிஞர் ராஜா செந்தூர் பாண்டியன்!

சென்னை உயர் நீதிமன்றத்தின் மூத்த வழக்கறிஞர் ந.ராஜா செந்தூர் பாண்டியன், தமிழக வெற்றிக் கழகத்தில் (த.வெ.க.) இணைந்துள்ளார். தமிழக மின்துறை மற்றும் சட்டத்துறை அமைச்சர் நிர்மல்குமார் முன்னிலையில் அவர் கட்ச... மேலும் பார்க்க

மாணவர்கள் போராட்டம்: `ஆணி லத்தி... கற்கள் நிரம்பிய லாரி' - டெல்லி நீதிமன்றத்தில் பரபரத்த வாதம்!

காக்ரோச் ஜனதா கட்சி முன்னெடுத்த போராட்டம் தற்போது மாணவர்கள் போராட்டமாக மாறியிருக்கிறது. மத்தியக் கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும், நீர் தேர்வால் தற்கொலை செய்துகொண்டவர்களுக்கு... மேலும் பார்க்க

``முதல்வரின் காலை உணவுத் திட்டத்தின் பெயர் மாற்றம்" - அரசாணை வெளியிட்ட தமிழ்நாடு அரசு!

தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் முதல்-அமைச்சராக இருந்தபோது கொண்டு வந்த முதலமைச்சர் காலை உணவு திட்டத்தின் பெயரை 'பெருந்தலைவர் காமராஜர் காலை உணவு திட்டம்' என தவெக அரசு பெயர் மாற்றம் செய்துள்ளது. இது தொடர்... மேலும் பார்க்க

`பல ஆண்டுகளாக நீட் தேர்வுக்கு ஆதரவாக குரல் கொடுத்திருக்கிறேன்; ஆனால்...' - அண்ணாமலை கருத்து!

நீர் தேர்வு வினாத் தாள் கசிவு, அரசுத் தேர்வு குளறுபடி உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து டெல்லியில் மாணவர்கள் போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர். போராட்டத்தைக் கலைக்க பா.ஜ.க அரசு மாணவர்கள்... மேலும் பார்க்க

Exclusive | “அண்ணா ஹசாரே போராட்டத்தை அரசியலாக்கியது ஆம் ஆத்மிதான்" – மாணிக்கம் தாகூர் எம்.பி பதிலடி

தலைநகர் டெல்லியின் ஜந்தர் மந்தரில் நடைபெற்று வரும் மாணவர்கள் – இளைஞர்களின் போராட்டம், நீட் தேர்வு வினாத்தாள் கசிவைத் தாண்டி, தேசிய அளவிலான கல்விக் கொள்கை விவாதமாக மாறி வருகிறது. மத்திய கல்வி அமைச்சர் ... மேலும் பார்க்க