செய்திகள் :

"திமுக - அதிமுக கூட்டணிக்கு எந்தக் காலத்திலும் வாய்ப்பில்லை" - திமுக எம்.பி கனிமொழி பளீச்

post image

அதிமுக - திமுக கூட்டணி என்பது எந்தக் காலத்திலும் வாய்ப்பு இல்லாதது எனத் திமுக எம்.பி கனிமொழி திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.

திமுக எம்.பி கனிமொழி செய்தியாளர்களைச் சந்தித்து பேசியிருக்கிறார்.

செய்தியாளர்களிடம் பேசிய அவர், "இதுவரைக்கும் ஒன்றிய அரசினை எதிர்த்து தவெக அரசில் இருக்கும் முதலமைச்சரோ அல்லது அமைச்சர்களோ எந்தக் கேள்வியும் எழுப்பியதாக எனக்கு நினைவில் இல்லை.

கனிமொழி எம்.பி
கனிமொழி எம்.பி

கனிமவள மசோதாவாக இருக்கட்டும், நிதித்தொகையாக இருக்கட்டும். மாநில உரிமைகளைப் பாதிக்கக்கூடிய ஒரு மசோதா நிறைவேற்றப்பட்டு இருக்கிறது. 

எந்தவொரு விவாதமும் இல்லாமல் இந்த மசோதா கொண்டு வரப்பட்டுள்ளது.

அதைப்பற்றி கூட இன்றைக்கு ஆட்சியில் இருக்கும் தவெக அரசு எந்தக் கருத்தையும் தெரிவிக்கவில்லை.

அவர்களை எதிர்ப்போம் எதிர்ப்போம் என்று சும்மா வாய் வார்த்தையாகச் சொல்கிறார்கள். தமிழ்நாட்டைப் பாதிக்கக்கூடிய பிரச்னைகள் எதைப்பற்றியும் அவர்கள் பேசுவது இல்லை" என்று பேசியிருக்கிறார்.

கனிமொழி எம்.பி
எம்.பி கனிமொழி

இதனைத் தொடர்ந்து தவெக அமைச்சர்கள் தொடர்ச்சியாக திமுக, அதிமுக கூட்டணி அமைக்க உள்ளதாகப் பேசி வருகிறார்களே? என்று கேள்வி கேட்கப்பட்டிருக்கிறது.

அதற்கு பதில் அளித்த அவர், "அவர்களுடைய கனவு வேண்டுமானால் அதுவாக இருக்கலாம். ஆனால் நிச்சயமாக அதுபோன்ற நடப்பதற்கு எந்தக் காலத்திலும் வாய்ப்பில்லை" என்று தெரிவித்திருக்கிறார்.

'டார்கெட் வட இந்தியா; பிரண்ட்லி பாமக; கலக்கத்தில் அமைச்சர்' - முதல்வரின் சுதந்திர தின விழா ஹைலைட்ஸ்!

ஜார்ஜ் கோட்டையில் முதல் முறையாகக் கொடியேற்றியிருக்கிறார் முதல்வர் விஜய். கொடியேற்றிய கையோடு அவர் ஆற்றிய உரையிலும் அந்த விழாவிலும் அத்தனை பொலிட்டிக்கல் மெசேஜ்கள் இருந்தன. அவற்றின் ஹைலைட்ஸ் இங்கே.CM Vij... மேலும் பார்க்க

'தளபதி விஜய் சாலை' - முதல்வர் விஜய்க்கு நன்றி தெரிவித்து பெயர் சூட்டும் பரந்தூர் - ஏகனாபுரம் மக்கள்!

சுதந்திர தினத்தன்று நடக்கும் கிராம சபைக் கூட்டத்தில் பரந்தூர் - ஏகனாபுரத்தைச் சேர்ந்த மக்கள் 'விமான நிலையத்தை வரவிடாமல் தடுத்த முதல்வர் விஜய்க்கு நன்றி' எனத் தீர்மானம் நிறைவேற்றி ஏகனாபுரத்தின் பிரதான ... மேலும் பார்க்க

எடப்பாடி: 'தாய் கழகத்தில் தவெக வேட்பாளர்!' - பழனிசாமி முன்னிலையில் அதிமுக-வில் இணைந்த அருண் குமார்

நடந்து முடிந்த 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் சேலம் மாவட்டம் எடப்பாடி தொகுதியின் த.வெ.க வேட்பாளராக அருண் குமார் என்பவரை தலைமை அறிவித்திருந்தது. அருண் குமார் வேட்பாளராகவும் அவரின் மனைவி மாற்று வேட... மேலும் பார்க்க

3,508 ஆதரவற்ற உடல்கள் நல்லடக்கம்; திருவண்ணாமலை மணிமாறனுக்கு `சிறந்த சமூகப் பணியாளர்’ விருது

பெற்றெடுத்த பிள்ளைகளே பெற்றோரை உதறித்தள்ளி வீட்டைவிட்டுத் துரத்தும் இந்தக் காலத்தில் முகமறியாத தொழுநோயாளிகள், ஆதரவற்றோரை அன்புடன் அரவணைப்பவர்கள் சிலர் இருப்பதால்தான் என்னவோ இன்னும் மனிதநேயம் மரித்துப்... மேலும் பார்க்க

விஜய் குறித்து நயினார் சர்ச்சைப் பேச்சு: "மறைமுக நட்பெல்லாம் வெளிப்படும் நேரம்" - ராஜ்மோகன் கண்டனம்

"சட்டமன்றத்தில் அப்பாவைக் காணோம் எனத் தேடுபவர்களின் ஆட்சி நடக்கிறது. வீட்டில் போய் அம்மாவிடம் கேட்டால்தானே அப்பா யார் என்று சொல்வார்? சட்டமன்றத்தில் தேடினால் எப்படி?" என்று பாஜக மாநிலத் தலைவர் நயினார்... மேலும் பார்க்க

விஜய் குறித்து நயினார் சர்ச்சைப் பேச்சு; "தாயை இழிவுபடுத்துவதை ஏற்க முடியாது" - சீறும் அண்ணாமலை

கமலாலயத்தில் நடந்த சுதந்திர தின விழாவில் பேசிய பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் முதல்வர் விஜய் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியிருக்கிறார்.நயினார் நாகேந்திரன்சுதந்திர தின விழாவில் பேசிய நய... மேலும் பார்க்க