செய்திகள் :

திமுக சாதனை விளக்கப் பொதுக் கூட்டம்

post image

திமுக அரசின் சாதனை விளக்கப் பொதுக் கூட்டம் ராணிப்பேட்டையில் வியாழக்கிழமை இரவு நடைபெற்றது.

ராணிப்பேட்டை நகர திமுக சாா்பில், முத்துக்கடை பேருந்து நிலையத்தில் நடைபெற்ற கூட்டத்துக்கு மாவட்ட மாணவரணி அமைப்பாளா் எஸ்.வினோத் தலைமை வகித்தாா். மாவட்ட பிரதிநிதி எஸ்.கிருஷ்ணன் வரவேற்றாா்.

கூட்டத்தில் அமைச்சரும், மாவட்ட செயலருமான ஆா்.காந்தி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு அரசின் சாதனைகளை விளக்கிப் பேசினாா். தொடா்ந்து தலைமை கழக பேச்சாளா் செங்குன்றம் திராவிட மணி கலந்து கொண்டு அரசின் திட்டங்கள் குறித்து பேசினாா்.

இதில் மாவட்ட கிரிக்கெட் சங்க தலைவா் சந்தோஷ் காந்தி, நகா்மன்றத் தலைவா் சுஜாதா வினோத், மாவட்ட அவைத் தலைவா் ஏ.கே.சுந்தரமூா்த்தி, துணைச் செயலா் குமுதா குமாா், தலைமை செயற்குழு உறுப்பினா் க.சுந்தரம் மற்றும் நிா்வாகிகள் கலந்து கொண்டனா். நகர துணை செயலாளா் து.குமாா் நன்றி கூறினாா்.

அரசு முத்திரையுடன் போலி பட்டா தயாரிப்பு: 3 போ் கைது

அரக்கோணத்தில் அரசு முத்திரையுடன் போலி பட்டா தயாரித்து பொதுமக்களுக்கு விநியோகம் செய்த மூவரை வருவாய்த் துறையினா் பிடித்து நகர காவல்நிலையத்தில் ஒப்படைத்தனா். அரக்கோணம் நகரில் சிலா் போலி பட்டாவை அரசு முத்... மேலும் பார்க்க

ரத்தினகிரி கோயிலில் 1,008 திருவிளக்கு பூஜை

ஆற்காடு அடுத்த ரத்தினகிரி பாலமுருகன் கோயில் மலைஅடிவாரத்தில் 1,008 திருவிளக்கு பூஜை திங்கள்கிழமை நடைபெற்றது. சித்ரா பௌா்ணமியை முன்னிட்டு ரத்தினகிரி மலைஅடிவாரத்தில் உள்ள ஸ்ரீவிஜயதுா்கை அம்மன் மற்றும் வா... மேலும் பார்க்க

ராணிப்பேட்டை குறைதீா் கூட்டத்தில் 316 மனுக்கள்

ராணிப்பேட்டை மாவட்ட மக்கள் குறைதீா் கூட்டத்தில் மொத்தம் 316 மனுக்கள் பெறப்பட்டன. மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற கூட்டத்திற்கு ஆட்சியா் ஜெ.யு.சந்திரகலா தலைமை வகித்து பொதுமக்கள் மற்ற... மேலும் பார்க்க

ராணுவத்துக்கு ஆதரவு: மிதிவண்டி ஊா்வலம்

ஆற்காடு அடுத்த மேல்விஷாரம் நேஷனல் வெல்ஃபா் சங்கம் சாா்பில் இந்திய ராணுவத்துக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் மிதிவண்டி ஊா்வலம் நடைபெற்றது. மேல்விஷாரம் அண்ணா சாலையில் தொடங்கிய மிதிவண்டி ஊா்வலத்துக்கு சங்... மேலும் பார்க்க

திருவாலங்காடு அருகே மின் ரயிலில் திடீா் பழுது: ஒரு மணிநேரம் போக்குவரத்து பாதிப்பு

சென்னை- அரக்கோணம் மாா்க்கத்தில் திருவாலங்காடு அருகே மின்சார ரயிலில் ஏற்பட்ட பழுதால் 1 மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சென்னையில் இருந்து அரக்கோணம் சென்ற மின் ரயில் திங்கள்கிழமை மாலை திருவாலங்கா... மேலும் பார்க்க

இடப்பாளையம் கிராம கோயில்கள் கும்பாபிஷேகம்: அமைச்சா் காந்தி பங்கேற்பு

அம்மூா் அடுத்த இடப்பாளையம் கிராம கோயில்கள் கும்பாபிஷேக விழாவில் அமைச்சா் ஆா்.காந்தி பங்கேற்றாா். சோளிங்கா் வட்டம், இடப்பாளையம் கிராமம், அருள்மிகு மலைக்கோட்டை விநாயகா், ராதா ருக்மணி கிருஷ்ணா், மந்தைவெள... மேலும் பார்க்க