செய்திகள் :

`திமுக நாசமாக போனதற்கு, திமுக-வினர் தான் காரணம்' - முன்னாள் அமைச்சர் மூர்த்தி

post image

முன்னாள் முதல்வர் கருணாநிதி பிறந்தநாளையொட்டி நேற்று  முன்னாள் அமைச்சர் மூர்த்தி முன்னிலையில் பழங்காநத்தம் பகுதியில் நடைபெற்ற நிகழ்ச்சியில், பள்ளி குழந்தைகளுக்கு நோட்புக் வழங்கியும் நலிவடைந்த குடும்ப பெண்மணிகளுக்கு நான்கு லட்ச ரூபாய் மதிப்புள்ள மூன்று சக்கர ஆட்டோக்களும் வழங்கப்பட்டன.

அதன் பின் விழாவில் முன்னாள் அமைச்சர் மூர்த்தி பேசும்போது, “ நம்முடைய ஆட்சியில் நமது தலைவர் மக்களுக்காகப் பல திட்டங்களைச் செய்திருக்கிறார். ஆனால், அதைப் பற்றி இப்போது பேசுவதும் நினைப்பதும், பிரயோஜனம் இல்லை. மக்கள் நமக்கு ஒரு நல்ல பாடம் கொடுத்திருக்கிறார்கள். அந்தப் பாடத்திற்கு உங்கள் எல்லோருக்கும் நன்றி."

முன்னாள் அமைச்சர் மூர்த்தி!

இதைக் கேட்டவுடன் மேடைக்குக் கீழே இருந்த திமுக தொண்டர்கள் கைதட்டினர். அதற்கு, "ஆமா... தோற்று போனதற்கு கைதட்டுங்கள்! அதனால்தான் விளங்காமல் உட்கார்ந்திருக்கோம். தி.மு.க நாசமாக போனதுக்குக் காரணமே தி.மு.க-காரன்தான்.

 பேரன், பேத்தி சொன்னான் என ஓட்டு போட்டதால், இந்த நிலைமை.  இனிமேல் மக்களுக்குச் செய்த நன்மைகளைப் பேசி வாக்கு கேட்கத் தேவையில்லை

மக்களின் அடிப்படைத் தேவைகள் எதையெல்லாம் சொன்னார்களோ, அதையெல்லாம் செய்து கொடுத்துள்ளோம். ஆனால், நல்லது செய்து ஓட்டுப் போடுவதை விட, நீங்கள் ஒரு முடிவை எடுத்து ஓட்டுப் போட்டுள்ளீர்கள்.

இனி அதைப் பற்றிப் பேசுவதற்கு வேலை கிடையாது. நாம் தி.மு.க -விற்காக நம்மை முழுமையாக ஈடுபடுத்திக் கொள்வோம். நாம் இனி கட்சிப் பணியை மட்டும் செய்ய வேண்டும். மக்களுக்கு எல்லாம் தெரியும், மக்கள் பார்த்துக்கொள்வார்கள்.

மக்களுக்காக முன்னோடித் திட்டங்களை எல்லாம் செய்தவர்தான் கருணாநிதி. அவருடைய பிறந்தநாளை தி.மு.க-வின் உணர்வுள்ள தொண்டர்கள் கொண்டாடி வருகிறோம். இதைவிட பல்வேறு சோதனைகளைச் சந்தித்து இந்த இயக்கத்தைக் கட்டிக்காத்துள்ளார்கள். இப்போது இருக்கும் நம்ம தலைவரும் அதை பண்ணுவார்.

முன்னாள் அமைச்சர் பி.மூர்த்தி
முன்னாள் அமைச்சர் பி.மூர்த்தி

தி.மு.க கட்சியை எவராலும் அழிக்க முடியாது, உண்மையான தி.மு.க-வை வளர்க்க வேண்டும். நிகழ்ச்சிக்கு தி.மு.க உணர்வு உள்ளவர்கள் வந்திருக்கிறீர்கள். இனிமேல் வெத்தலை பாக்கு வைத்து யாரையும் அழைக்க வேண்டாம்.

ஒரிஜினல் தி.மு.க -வை வளருங்கள், அதுமட்டும் போதும். அதில் எத்தனை பேர் உண்மையாக இருக்கிறார்களோ, அதுமட்டும் போதும். நமக்கு வலு, அதை விட்டுவிட்டு மக்களுக்கு அதைச் செய்தோம், இதைச் செய்தோம் என்று சொல்ல வேண்டாம். மக்கள் தெரிந்துதான் ஓட்டுப் போட்டுள்ளார்கள்.  மாற்றுத் தரப்பினருக்கு ஒரு வாய்ப்புக் கொடுத்திருக்கிறார்கள், அதை அவர்கள் பயன்படுத்தட்டும். நாம் நம் இயக்கத்தைப் பார்ப்போம்” என்றார்.

அதிமுக-வில் மிதுனுக்கு முக்கிய பொறுப்பு? நிர்வாகிகள் வலியுறுத்தல்; கவனம் பெற்ற கே.பி முனுசாமி பேச்சு

தேர்தல் தோல்விக்கு பின்னர், கட்சியின் நிர்வாகிகளை மாவட்ட வாரியாக சந்திக்க அதிமுக பொதுசெயலாளர் எடப்பாடி பழனிசாமி திட்டமிட்டு இன்று காஞ்சிபுரம் மாவட்ட நிர்வாகிகளை சென்னை ராயப்பேட்டையில் உள்ள தலைமை அலுவல... மேலும் பார்க்க

'ஆபரேஷன் இரட்டை இலை' - மதுராந்தகத்தில் ர.ர-க்களின் பிரமாண்ட இணைப்பு விழா; தவெக போடும் ஸ்கெட்ச்!

அதிமுகவின் முக்கிய நிர்வாகிகள் சிலர் இன்று பனையூரில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் ஆனந்த் முன்னிலையில் தவெகவில் இணைந்திருந்தனர். கடந்த வாரம்தான் அதிமுகவின் முன்னாள் அமைச்சர்கள் கடம்பூர் ராஜூ, எம்.சி.சம்... மேலும் பார்க்க

ஈரான்: "24 மணிநேரத்தில் போர் நிறுத்த ஒப்பந்தம் இறுதி செய்யப்படும்" - பாகிஸ்தான் பிரதமர் அறிவிப்பு

ஈரான் போர் முடிவுக்கு வருகிறது. போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டதில் இருந்து நீண்ட நாள்களுக்குப் பிறகு, இரண்டு நாள்களுக்கு முன், ஈரானும், அமெரிக்காவும் மாறி மாறி தாக்கிக் கொண்டன. தாக்குதலுக்குப் பிறகு, அ... மேலும் பார்க்க

'விஜயதாரணி, பச்சைமால், பாலகங்கா...' - தவெகவில் இணைந்த மாற்றுக் கட்சி நிர்வாகிகளின் இன்றைய லிஸ்ட்!

தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு, தமிழக வெற்றிக் கழகத்தில் மாற்றுக் கட்சியினர் பலர் தொடர்ந்து இணைந்து வருகின்றனர். இதை முதன் முதலில் தொடங்கி வைத்தவர்கள் அதிமுக அதிருப்தி எம்.எல்.ஏக்களான இசக்கி சுப்பையா, ... மேலும் பார்க்க

கிருஷ்ணகிரி நகர்மன்றக் கூட்டம்: முன்னாள் முதல்வர்களின் படங்களை வைக்க போட்டிப் போட்ட திமுக - அதிமுக!

கிருஷ்ணகிரி நகராட்சிக் கூட்ட அரங்கத்தில் முன்னாள் முதல்வர்களின் படங்களை வைப்பது தொடர்பாக திமுக-அதிமுக உறுப்பினர்களிடையே ஏற்பட்ட வாக்குவாதத்தால் நகர்மன்றத்தில் பெரும் சலசலப்பு ஏற்பட்டது. அதேநேரம், இந்த... மேலும் பார்க்க

"வழிமுறை தெரியாது..": நழுவும் தலைமை மருத்துவர் : மரங்களை வெட்டிய தேவகோட்டை அரசு மருத்துவமனை

" பிள்ளைகளைப்போல வளர்த்தோம்..!"சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை பி.எஸ்.எஸ். சாத்தப்ப செட்டியார் அரசு மருத்துவமனை வளாகத்தில் பல ஆண்டுகளாக நிழல் தந்து வந்த மரங்கள் திடீரென வெட்டிச் சாய்க்கப்பட்ட சம்பவம், தே... மேலும் பார்க்க