செய்திகள் :

திமுக பிரமுகர் இல்லத்தில் 12 மணி நேரம் அமலாக்கத்துறை சோதனை; முக்கிய ஆவணங்கள் பறிமுதல்

post image

திருச்சி மாவட்டம், ​லால்குடி ஆங்கரை தூய சகாய மாதா ஆலயம் அருகே வசித்து வரும் தி.மு.க பிரமுகரான கிறிஸ்துராஜா என்பவரது இல்லத்திற்கு அமலாக்கத்துறை அதிகாரிகள் திடீரென வருகை தந்து சோதனையில் ஈடுபட்டனர்.

காலை தொடங்கிய இந்தச் சோதனையானது, 12 மணி நேரத்திற்கும் மேலாகத் தொடர்ந்து நீடித்தது. ​இந்த அதிரடி சோதனையின் போது, கிறிஸ்துராஜாவின் வங்கிப் பரிவர்த்தனைகள், சொத்து விவரங்கள் உள்ளிட்ட பல்வேறு முக்கிய ஆவணங்களை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

raid

நீண்ட நேர விசாரணை மற்றும் சோதனைக்குப் பிறகு, தங்களுக்குத் தேவையான ஒருசில முக்கிய ஆவணங்களை அமலாக்கத்துறை அதிகாரிகள் கைப்பற்றி எடுத்துச் சென்றதாகக் கூறப்படுகிறது. ​

அரசு வேலை விஷயத்தில் நடைபெற்ற முறைகேடு சம்மந்தமாக இந்தச் சோதனை நடத்தப்பட்டதாகத் தெரிகிறது. தி.மு.க பிரமுகர் இல்லத்தில் 12 மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்ற இந்த அமலாக்கத்துறை சோதனை, அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சிவகாசி: 10 ஆண்டுகளாக மூடிக்கிடந்த பட்டாசு ஆலையில் திடீர் தீ விபத்து; 3 பேர் காயம் அடைந்தது எப்படி?

விருதுநகர் மாவட்டம், சிவகாசி, அம்மன் கோவில்பட்டியைச் சேர்ந்த முத்தையா என்பவருக்குச் சொந்தமான ’திபிரில்லியண்ட்’ பட்டாசுத் தொழிற்சாலை நாரணபுரம் - செங்கமலப்பட்டி சாலையில் செயல்பட்டு வந்தது. உடல்நலக்குறைவ... மேலும் பார்க்க

தருமபுரி: கல்லூரி மாணவிக்கு பாலியல் வன்கொடுமை; கல்லூரி பேருந்து ஓட்டுநர் மீது போக்சோ

கல்லூரியில் படித்த 18 வயது மாணவியை பாலியல் வன்கொடுமை செய்து கர்ப்பமாக்கிய கல்லூரி பேருந்து ஓட்டுநர் மீது போக்சோ வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ள சம்பவம் பென்னாகரம் பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.... மேலும் பார்க்க

சென்னை: அதிகாலையில் இளம்பெண் கொடூரக் கொலை; மிளகாய்ப் பொடியைத் தூவி விட்டு தப்பிய நபர்

பெங்களூருவைச் சேர்ந்தவர் ரேஷ்மா (29). இவரின் கணவர் அசோக். இந்தத் தம்பதியினருக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். கருத்துவேறுபாடு காரணமாக ரேஷ்மா, கணவர் அசோக்கைப் பிரிந்து குழந்தைகளுடன் தனியாக வசித்து வந்தார... மேலும் பார்க்க

"என் மகன் அமைதியானவன்" - மும்பை ரயிலில் பயணிகள் முன்னிலையில் வாலிபர் குத்திக்கொலை; கதறிய தாய்

மும்பை புறநகர் ரயிலில் எப்போதும் கூட்டம் நிரப்பி வழியும். அதுவும் காலை மற்றும் மாலை நேரங்களில் புறநகர் ரயில்களில் ஏறி இறங்குவது என்பது நினைத்து பார்க்க முடியாத காரியம். குறிப்பாக மும்பையில் மேற்கு ரயி... மேலும் பார்க்க

ஈமு கோழி திருட்டு புகார் விவகாரம்: 17 ஆண்டுகள் கழித்து ஆய்வாளருக்கு எதிராக நீதிமன்றம் தீர்ப்பு

கரூர் மாவட்டம், வேலாயுதம்பாளையம் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் செயல்பட்டு வந்த ஓர் ஈமு கோழி பண்ணையில், 2009-ம் ஆண்டு சில கோழிகள் காணாமல் போய்விட்டன. இந்நிலையில், அதுபற்றி கொடுக்கப்பட்ட புகார... மேலும் பார்க்க

மது கேட்டு தொல்லை கொடுத்த மனைவி – விஷம் கொடுத்து கொன்ற கணவர் | கோவையில் அதிர்ச்சி

கோவை மாவட்டம் கருமத்தம்பட்டி அருகே கரவழி மாதாப்பூர் அருகில் உள்ள அண்ணா நகர் பகுதியை சேர்ந்தவர் மகேஸ்வரி (28). இவருக்கு திருமணமாகி ஒரு மகனும், ஒரு மகளும் உள்ள நிலையில், கணவரை பிரிந்து தனியாக வசித்து வந... மேலும் பார்க்க