செய்திகள் :

``திமுக-வின் பகையாளி பாஜக மட்டுமே; அதிமுக எங்களின் பங்காளி" – ஆர்.எஸ். பாரதி அதிரடிப் பேட்டி!

post image

சட்டமன்றத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு தமிழ்நாட்டின் அரசியல் களம் பல்வேறு மாற்றங்களை எதிர்க்கொண்டிருக்கிறது. தி.மு.க கூட்டணியில் இருந்த கட்சிகள் ஒவ்வொன்றாக தவெக பக்கம் சாய்ந்தது தொடங்கி பல்வேறு நிகழ்வுகளை தி.மு.க எதிர்க்கொண்டிருக்கிறது. இந்த நிலையில், தி.மு.க முதன்மைச் செயலாளரும், செய்தித் தொடர்பாளருமான ஆர்.எஸ். பாரதி அறிவாலயத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, ``நடந்து முடிந்த இந்தத் தேர்தல் யார் நண்பர்கள், யார் எதிரிகள் என்பதை அடையாளம் காட்டுவதற்கும், எனது கண்களைத் திறப்பதற்கும் ஒரு நல்ல பாடமாக அமைந்திருக்கிறது.

ஸ்டாலின்
ஸ்டாலின்

ஒரு கட்சியின் பெயரையும், அதன் தொண்டர்களின் உழைப்பையும் பயன்படுத்தித் தேர்தலில் வெற்றி பெற்றுவிட்டு, வெறும் பத்தே நாட்களுக்குள் பேச்சை மாற்றுவது கேவலமான அரசியல். இப்படிப்பட்ட சந்தர்ப்பவாதிகளுக்கு வாக்களித்த தமிழ்நாட்டு மக்களே மிக விரைவில் தகுந்த பாடம் புகட்டுவார்கள். இதற்கான அரசியல் மாற்றம் விரைவில் வரும்.

இந்தத் தேர்தல் களம் மிகவும் வித்தியாசமானது. எந்தவொரு ஊடகமோ அல்லது பத்திரிகையாளரோ கணிக்காத வகையில் நடிகர் விஜய் அரசியல் களத்திற்குள் நுழைந்துள்ளார்.

எப்படியோ இந்த அதிசயம் நடந்துவிட்டது. ஆனால், இந்த அரசியல் அதிசயத்தைக் கண்டு பயந்து, அதற்குச் சில பலவீனமானவர்கள் பலியாகி வருகிறார்கள். கொள்கையில் உறுதியானவர்கள் இப்போதும் தி.மு.க கூட்டணியில் உறுதியாகவே நீடிக்கிறார்கள். மேலும், தேர்தல் முடிந்து 20 நாட்களுக்குள், ஒரு பட்ஜெட் கூட தாக்கல் செய்யாத சூழலில், திடீரென கட்சிகள் மனமாற்றம் அடைவதற்குப் பின்னால் ஏதோ ஒரு பெரிய சக்தி வேலை செய்கிறது.

வைகோ, விஜய்

தேர்தல் முடிவடைந்தவுடன் வைகோ பொதுக்குழுவைக் கூட்டி முடிவு எடுக்கப் போவதாகக் கூறுகிறார். இதைக் கூட்டணி பேச்சுவார்த்தையின் போதே செய்திருந்தால், தி.மு.க-வினர் கூடுதல் தொகுதிகளில் போட்டியிட்டு வெற்றி பெற்றிருப்பார்கள். தேர்தல் வரை அமைதியாக இருந்துவிட்டு இப்போது வீரம் காட்டுவது சந்தர்ப்பவாதமே. மேலும், சிபிஎம் தலைவர் சண்முகத்தின் அறிக்கையை படித்தேன். கடந்த காலத்தில் ஜெயலலிதா தலைமையிலான அ.தி.மு.க-வுடன் கம்யூனிஸ்ட் கட்சிகள் பலமுறை கூட்டணி வைத்து, ராஜ்யசபா எம்பி பதவிகளைப் பெற்றுள்ளன என்பதை நாம் மறந்திருக்கமாட்டோம்.

தி.மு.க - அ.தி.மு.க ஒரே நேர்கோட்டில் சட்டசபையில் அமர்ந்திருக்கிறோம். காலப்போக்கு எங்களை அப்படி அமர வைத்துள்ளது. கொள்கை ரீதியாக எங்களுக்குப் 'பகையாளி' என்பது பாஜக ஒன்று மட்டும்தான். அ.தி.மு.க என்பது எங்களை விட்டுப் பிரிந்து சென்ற ஒரு 'பங்காளி' போன்றது. 1964-ல் பிரிந்த இரண்டு கம்யூனிஸ்ட் கட்சிகள் பின்னர் எப்படி ஒன்று சேர்ந்தனவோ, அதுபோல திராவிட இயக்கத்தைக் காப்பாற்ற தி.மு.க-வும் அ.தி.மு.க-வும் சில கருத்துக்களில் ஒத்துப்போவதோ அல்லது கைகோர்ப்பதோ ஒன்றும் 'உலக மகா தப்பு' கிடையாது. பெரியார், அண்ணா, கலைஞர் மற்றும் எம்.ஜி.ஆர் வழியிலான திராவிட பாரம்பரியத்தை தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் மட்டும்தான் காப்பாற்ற முடியும் என்ற முடிவுக்கு இப்போது அ.தி.மு.க தொண்டர்களே வரத் தொடங்கிவிட்டனர்.

ஸ்டாலின்
ஸ்டாலின்

தி.மு.க-வின் பலமே அதன் ஒத்த கருத்துடைய கூட்டணிக் கட்சிகள்தான். கூட்டணிக் கட்சிகளின் உண்மையான பலம் என்னவென்று எங்களுக்குத் தெரியும். இருப்பினும், கூட்டணி தர்மத்தை மதிக்க வேண்டும் என்பதற்காகவே எத்தனையோ சலசலப்புகளைத் தாங்கிக்கொண்டு தி.மு.க அவர்களை அரவணைத்துச் சென்றது. தமிழ்நாட்டின் அரசியல் வரலாற்றில் பேரறிஞர் அண்ணா, கலைஞர், எம்ஜிஆர், ஜெயலலிதா என யாருமே ஒரே கூட்டணியைத் தொடர்ந்து தக்க வைத்ததில்லை.

ஆனால், கடந்த ஐந்து தேர்தல்களாகக் கூட்டணியைச் சிதறாமல் பாதுகாத்து வழிநடத்திய பெருமை முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு மட்டுமே உண்டு. பதவிக்காகப் பாய்ந்து ஓடுபவர்களைப் பற்றி தி.மு.க கவலைப்படாது. கடந்த 76 ஆண்டுகாலமாக இதுபோன்ற எத்தனையோ துரோகங்களையும் மாற்றங்களையும் பார்த்துப் பழகிய இயக்கம் தி.மு.க. தொண்டர்களும் தலைவர்களும் எஃகு கோட்டையாகத் தலைவர் ஸ்டாலினுக்குப் பின்னால் உறுதியாக நிற்கிறார்கள்" என்றார்.

GenZ DMK Vs 2K ADMK: இளைஞர்களைக் கவரும் போட்டியில் திராவிடக் கட்சிகள்!

தவெக ஆட்சிக்கு வந்த பிறகு தமிழக அரசியலில் மிகவும் தெளிவாக தெரியும் ஒரு மாற்றம் என்றால், அது இளைஞர்களை நோக்கிய அரசியல் நகர்வுகள்தான். தேர்தல் வெற்றிக்கு பிறகு, இளைஞர்களின் ஆதரவை பெற்றால்தான் அரசியலில் ... மேலும் பார்க்க

சங்கராபுரம் MLA அலுவலகத்தை திறந்து வைக்கும் சி.வி; இபிஎஸ் படம் இல்லாத அழைப்பிதழ் - தொடரும் சலசலப்பு!

அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் மற்றும் கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இடையேயான கருத்து வேறுபாடுகள் குறித்து தொடர்ந்து அரசியல் வட்டாரங்களில் பேசப்பட்டு வரும் நிலையில், சங்கராபுரம் ... மேலும் பார்க்க

``இன்னும் அவர் தன்னை அமைச்சராகவே நினைத்துக்கொண்டிருக்கிறார்" - TRB ராஜா குறித்து அமைச்சர் கீர்த்தனா!

தமிழ்நாட்டில் துவங்கவிருந்த நிறுவனங்கள் ஆந்திர மாநிலத்திற்குச் சென்றதாகக் கூறப்படும் புகார்கள் உள்ளிட்ட பல்வேறு விமர்சனங்களுக்கு தொழிற்துறை அமைச்சர் கீர்த்தனா விளக்கமளித்திருக்கிறார். இது தொடர்பாக சிவ... மேலும் பார்க்க

அலட்சியத்தால் மழையில் நனைந்து வீணாகும் நெல் மூட்டைகள் - வேளாண்மை துறை அமைச்சர் தொகுதியில் அவலம்!

கும்பகோணம், திருவிடைமருதூர், பாபநாசம் சுற்றுவட்டார பகுதிகளில் விவசாயிகளிடம் இருந்து அறுவடை செய்யப்படும் நெல் மூட்டைகள் பட்டீஸ்வரம் அருகே தனியாருக்கு சொந்தமான இடத்தில் திறந்தவெளி சேமிப்பு கிடங்கில் அடு... மேலும் பார்க்க

IUML: ``அப்படி நீங்களா கற்பனை பண்ணிகிட்டா எப்படி பாய்" - திமுக-வுடன் உறவை முறித்த காதர் மொய்தீன்

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் (IUML) தேசியத் தலைவர் காதர் மொய்தீன் தலைமையில், சென்னையில் கட்சியின் மாநில பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. 483 பேர் பங்கேற்ற இக்கூட்டத்தில், 14 முக்கிய தீர்மானங்கள் நிறைவேற... மேலும் பார்க்க

``என் இறுதி மூச்சு வரை தவெக-வில் பயணிப்பேன்" - விஜய் உடன் இணைந்த மன்சூர் அலிகான் உருக்கம்!

பிரபல திரைப்பட நடிகரும், அரசியல் பிரமுகருமான மன்சூர் அலிகான், தமிழக வெற்றிக் கழகத்தின் அமைச்சர் ஆனந்த் முன்னிலையில் அதிகாரபூர்வமாக அந்தக் கட்சியில் இணைந்துள்ளார். இது தொடர்பாக செய்தியாளர்களைச் சந்தித்... மேலும் பார்க்க