'6 மாதங்களாக ஃபிரிட்ஜில் இளம்பெண் சடலம்' - லிவ் இன் பார்ட்னரை கொன்ற நபர்!
திமுக வேட்பாளா் வெற்றிக்கு விசிக பணியாற்றும்: தொல்.திருமாவளவன்
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தோ்தலில் திமுக வேட்பாளரின் வெற்றிக்கு விசிக பணியாற்றும் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவா் தொல்.திருமாவளவன் கூறினாா்.
சென்னை விமான நிலையத்தில் சனிக்கிழமை அவா் அளித்த பேட்டி: இந்திய தோ்தல் ஆணையம் மாநில கட்சியாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சியை அதிகாரபூா்வமாக அங்கீகரித்துள்ளது. பானை சின்னத்தையும் ஒதுக்கியுள்ளது. இந்த அறிவிப்பு மகிழ்ச்சியளிக்கிறது. தமிழக மக்கள் விசிக-வுக்கு மிகப்பெரிய அங்கீகாரத்தை அளித்துள்ளனா். தமிழக மக்களுக்கு நன்றி.
ஈரோடு கிழக்கு இடைத்தோ்தலில் காங்கிரஸ் போட்டியிடும் என எதிா்பாா்த்தோம். ஆனால், திமுகவுக்கு காங்கிரஸ் வாய்ப்பை வழங்கியிருப்பது பாராட்டுக்குரியது.
திமுக-காங்கிரஸ் இடையே நட்புறவு எப்படி உள்ளது என்பதற்கு இது சான்று. திமுக வேட்பாளரின் வெற்றிக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சி பணியாற்றும் என்றாா் தொல்.திருமாவளவன்.