செய்திகள் :

திருச்செந்தூர்: `சுவாமி தரிசனமா, ரூ.4,000 ஜிபே.!' - அமைச்சரிடமே வசூல் வேட்டை நடத்திய அர்ச்சகர்கள்!

post image

முருகனின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடாக விளங்குவது திருச்செந்தூர், அருள்மிகு   சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில். தினமும் நூற்றுக்கணக்கான பக்தர்களும், விடுமுறை மற்றும் விசேச நாட்களில் ஆயிரக்கணக்கான பக்தர்களும்  சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். நாளை வைகாசி விசாகத் திருவிழாவை முன்னிட்டு ஆயிரக்கணக்கான பக்தர்கள் திருச்செந்தூரில் குவிந்துள்ளனர். இந்த நிலையில், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர்  ரமேஷ் கோயிலில் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

அமைச்சர் ரமேஷ்

கருப்பு நிற டி.சர்ட் அணிந்தும், முகத்தில் மாஸ்க் மாட்டிக் கொண்டும்  வந்திருந்தார்.  அப்போது அமைச்சர் மட்டும் தனியாக கோயில் வளாகத்திற்குள் சென்று, அங்கிருந்த அர்ச்சகர்களிடம் “சுவாமி தரிசனம் செய்வதற்கு கட்டணம் எவ்வளவு?” என கேட்டதாக கூறப்படுகிறது. இதற்கு அர்ச்சகர்கள், “ஒருவருக்கு 1,000 வழங்க வேண்டும்” எனக் கூறியுள்ளனர்.  தொடர்ந்து உதவியாளர்களுடன் சேர்த்து  4 பேருக்கு ரூ. 4,000 தொகையை அர்ச்சகர்கள் பெற்றதாகவும், அந்த தொகை ஜி-பே  மூலம் பரிமாறப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

அமைச்சர் யார் என்பது தெரியாமலேயே அர்ச்சகர்கள் இவ்வாறு பணம் பெற்றதாக கூறப்படும் இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பின்னர் அமைச்சர் கோயிலின் அன்னதான கூடத்திலும் ஆய்வு மேற்கொண்டார்,. அங்கு இருந்த அதிகாரிகளிடம் இந்த விவகாரம் குறித்து விளக்கம் கேட்டுள்ளார்.  தொடர்ந்து இணை ஆணையர் அலுவலகத்திலும் ஆய்வு மேற்கொண்டார்.

அமைச்சர் ரமேஷ்

அப்போது திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் பல இடங்களில் முறைகேடு நடந்திருப்பது தெரிய வந்ததாக கூறப்படுகிறது. அதிகாரிகள் சிலரிடம் மன்னிப்பு கடிதம் எழுதி வாங்கியிருப்பதாகவும் கூறப்படுகிறது. தொடர்ந்து அவர் ஆய்வு முடித்து வெளியே வந்த பிறகு அவர் என்ன மாதிரியான நடவடிக்கை எடுப்பார் என்பது தெரியவரும். திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோவிலில் திடீரென ஆய்வு மேற்கொள்ள வந்த அமைச்சரிடமே பணம் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

"தனிப்பட்ட ஒருவரின் தவறான முடிவுகளால் உயிராய் நேசித்த..." - அதிமுக-விலிருந்து விலகிய விஜயபாஸ்கர்

அதிமுக சார்பில் ஐந்து முறை போட்டியிட்டுச் சட்டமன்ற உறுப்பினராகப் பதவி வகித்தவரும், முன்னாள் அமைச்சருமான சி.விஜயபாஸ்கர் அதிமுகவிலிருந்து இன்று விலகினார். அதிமுகவிலிருந்து விலகியது தொடர்பாக அறிக்கை ஒன்ற... மேலும் பார்க்க

பயிர்க்கடன் தள்ளுபடி: "ரூ.75,000 வரை கடன் தள்ளுபடி" - முதல்வர் அறிவிப்பின் முழு விவரம்

கடந்த மே 25-ம் தேதி ரூ. 50,000 வரை பயிர்க்கடன் பெற்ற விவசாயிகளுக்கு முழுமையாக பயிர்க்கடன் தள்ளுபடி செய்வதாக முதல்வர் விஜய் அறிவித்திருந்தார்.பல்வேறு பக்கங்களிலிருந்தும் விவசாயக் கடன் தள்ளுபடி பற்றி மற... மேலும் பார்க்க

பயிர்க்கடன் தள்ளுபடி: ரூ.75,000 வரை கடன் பெற்ற விவசாயிகளுக்கு முழு தள்ளுபடி | Live Updates

பயிர்க்கடன் தள்ளுபடி - முதல்வர் அதிரடி அறிவிப்புகடந்த மே 25-ம் தேதி ரூ. 50,000 வரை பயிர் கடன் பெற்ற விவசாயிகளுக்கு முழுமையாக பயிர்க்கடன் தள்ளுபடி செய்வதாக முதல்வர் அறிவித்திருந்தார். பல்வேறு பக்கங்களி... மேலும் பார்க்க

`56' ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் - தமிழ்நாடு அரசு அதிரடி!

தமிழகக் காவல்துறையில் ஐ.பி.எஸ் அதிகாரிகள் மற்றும் எஸ்.பி அந்தஸ்திலான 56 உயர் அதிகாரிகளை அதிரடியாக பணி இடமாற்றம் செய்து தமிழக அரசின் உள்துறை இன்று (15.06.2026) உத்தரவிட்டுள்ளது. இதற்கான அதிகாரபூர்வ அரச... மேலும் பார்க்க

``6 முதல் 8-ம் வகுப்பு மாணவர்களுக்கும் காலை உணவு: பெரியார் பிறந்தநாளில் அமல்" – முதல்வர் விஜய்!

தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலகத்தில் இன்று (15.06.2026) முதல்வர் ஜோசப் விஜய் தலைமையில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் திட்டங்கள் மற்றும் செயல்பாடுகள் குறித்த முக்கிய ஆய்வுக் கூட்டம் நடைபெற்ற... மேலும் பார்க்க

நெல்லை: ஆட்சியர் அலுவலகம் அருகே தாமிரபரணி கரையை ஆக்கிரமித்துள்ள சீமை கருவேல மரங்கள் | Photo Album

திருநெல்வேலி: ஆட்சியர் அலுவலகம் அருகே தாமிரபரணி ஆற்றங்கரையை ஆக்கிரமித்துள்ள சீமை கருவேல மரங்கள்.!நெல்லை மாவட்டம், சொக்கம்பட்டி சுயம்பூற்றுநாதர் கோயில் : மனச்சுமைகள் குறையும்... உற்சாகம் பிறக்கும்! மேலும் பார்க்க