செய்திகள் :

திருப்பரங்குன்றம்: நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் பதவி நீக்க தீர்மானம்; 120 MP-கள் ஆதரவு; அடுத்து என்ன?

post image

சென்னை உயர் நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனை பதவி நீக்கம் செய்யும் தீர்மான மனுவை திமுக கூட்டணிக் கட்சி எம்பிக்கள் மக்களவை சபாநாயகரிடம் வழங்கியிருக்கிறார்கள்.

திருப்பரங்குன்றம் மலை தீப தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற வேண்டும் என நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் உத்தரவிட்டிருந்தார். இந்த உத்தரவு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தது.

திருப்பரங்குன்றம்
திருப்பரங்குன்றம்

இதனால், நீதிபதி சுவாமிநாதனுக்கு எதிராக பதவி நீக்க தீர்மானம் கொண்டுவர திமுக திட்டமிட்டிருந்தது.

அதன்படி இன்று (டிச.9) திமுக கூட்டணிக் கட்சிகளின் எம்பிக்கள் ஒன்றாக இணைந்து நீதிபதி ஜி.ஆர் சுவாமிநாதனை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவிடம் மனு அளித்துள்ளனர்.

நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனை பதவி நீக்கக் கோரும் தீர்மானத்துக்கு ஆதரவாக 120 எம்.பி.க்கள் கையெழுத்திட்டுள்ளனர்.

ஒரு உயர் நீதிமன்ற நீதிபதியை பதவி நீக்கம் செய்ய வேண்டுமென்றால் மக்களவையிலிருந்து குறைந்தபட்சம் 100 உறுப்பினர்கள் அல்லது மாநிலங்களவையில் 50 உறுப்பினர்கள் கையொப்பமிட வேண்டும்.

இந்தக் குறைந்தபட்ச ஆதரவு எட்டப்பட்டு, தீர்மானம் ஏற்றுக்கொள்ளப்பட்டதும், அது முறையான விசாரணை நிலையை அடையும்.

மனு வழங்கிய எம்பிக்கள்
மனு வழங்கிய எம்பிக்கள்

அதன் பிறகு மூவர் குழு நியமிக்கப்பட்டு, அறிக்கை அளித்தவுடன் நாடாளுமன்றத்தில் பதவி நீக்கம் தொடர்பாக விவாதிக்க அனுமதிக்கப்படும். அதன் முடிவில் வாக்கெடுப்பு நடத்தப்படும்.

அதில் மூன்றில் இரண்டு பங்கு உறுப்பினர்கள் ஆதரவாக வாக்களித்தால்தான் அதுதொடர்புடைய தீர்மானத்தின் அடிப்படையில் சம்பந்தப்பட்ட நீதிபதியை பதவி நீக்கம் செய்ய குடியரசுத் தலைவர் உத்தரவு பிறப்பிப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.

``கரூரில் குலுங்கி அழுத அன்பில் மகேஷ், பள்ளி மாணவர் இறப்புக்கு வரவே இல்லை'' - பாமக ம.க.ஸ்டாலின்

கும்பகோணம் அருகே உள்ள பட்டீஸ்வரம், அரசு அறிஞர் அண்ணா மாதிரி மேல்நிலைப்பள்ளியில் இனாம்கிளியூர் பகுதியைச் சேர்ந்த கவியரசன் என்ற மாணவன் 12-ம் வகுப்பு படித்து வந்தார். இவருக்கும் அதே பள்ளியில் 11-ம் வகுப்... மேலும் பார்க்க

"சங்கர் ஆணவக்கொலைக்கு இன்னும் நீதி கிடைக்கல" - திமுக அரசுக்கு எதிராகச் சீறும் கௌசல்யா

உடுமலைப்பேட்டை சங்கர் ஆணவப்படுகொலையில் பாதிக்கப்பட்ட கௌசல்யா இன்று (09.12.25) சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில் பத்திரிகையாளர் சந்திப்பை நடத்தியிருந்தார். உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டிர... மேலும் பார்க்க

ஈரோடு விஜய் பிரசாரம் தள்ளிவைப்பு: "சொல்லத்தான் நினைக்கிறேன்; உள்ளத்தால் துடிக்கிறேன்"- செங்கோட்டையன்

"தவெக தலைவர் விஜய் ஈரோடு மாவட்டத்தில் வரும் 16ஆம் தேதி சுற்றுப்பயணம் செய்ய இருந்தார். வாரி மஹால் அருகே இருக்கும் தனியார் இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல் கண்காணிப்பாளரிடம் ... மேலும் பார்க்க